என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • மஹிந்திரா தார் எஸ்யூவி காரை கொண்டு ஒருவரை மோதியுள்ளார்.
    • சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    சமூக ஊடக தளங்களில் பல நெட்டிசன்கள் ஒருவரையொருவர் கொடூரமாக திட்டிக் கொள்கிறார்கள். நாகரிக சமூகத்தையே தலைகுனிய வைக்கும் ஆபாசக் பேச்சுகளை அங்கு பேசப்படுகின்றன.

    ஒருவரையொருவர் யார் என்று தெரியாமலேயே இவை அனைத்தும் நடக்கின்றன. அப்படி இன்ஸ்ட்டாகிராமில் நடந்து ஒரு வாக்குவாதம் உடல் ரீதியான வன்முறையில் முடிந்துள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இன்ஸ்டா பகையாளி மீது மஹிந்திரா தார் எஸ்யூவி காரை கொண்டு ஒருவரை மோதியுள்ளார். இதில் சாலையில் நடந்து அந்த இளைஞர் சாக்கடை வடிகாலில் விழுந்து படுகாயமடைந்தார்.

    சிசிடிவி கேமராவில் பதிவான இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வாலிபர் மீட்கப்பட்ட நிலையில் தப்பிச் சென்ற வாகன ஓட்டியை தேட போலீஸ் குழு புறப்பட்டுள்ளது.

    • தன்னை தாக்கிய வாலிபருக்கும் சாய்ராவுக்கும் தொடர்பு இருக்கும் என ரபி சந்தேகம் அடைந்தார்.
    • சாய்ராவை கொலை செய்து வாய்க்காலில் வீசிவிட்டு வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு தூங்கியதாக தெரிவித்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் கோட்வாலி மைந்தரை சேர்ந்தவர் சாய்ரா (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் ரபி.

    சாய்ராவை காதலிப்பதாக கூறி ரபி அவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.

    ஆனால் இளம்பெண் ரபியை காதலிக்க மறுத்துவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாய்ராவை பின் தொடர்ந்து சென்ற ரபி அவரை நடுவழியில் மடக்கி ஆபாசமாக திட்டினார். அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்து ரபியை சரமாரியாக தாக்கினார்.

    தன்னை தாக்கிய வாலிபருக்கும் சாய்ராவுக்கும் தொடர்பு இருக்கும் என ரபி சந்தேகம் அடைந்தார். இதனால் தனக்கு கிடைக்காத சாயிரா வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது. எனவே அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். சாய்ரா எங்கெல்லாம் செல்கிறார் என நோட்டமிட்டார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சாய்ரா மாட்டுக்கு தீவனம் எடுத்து வர வயலுக்கு சென்றார். சாய்ராவை பின் தொடர்ந்து சென்ற ரபி அவரை மடக்கி தான் மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவரால் சரமாரியாக குத்தினார். வயிறு, முகம், கை, கால், மர்ம உறுப்பு என 18 இடங்களில் குத்தினார்.

    வலியால் அலறி துடித்த சாய்ரா தன்னை விட்டு விடும்படி கெஞ்சினார். ஆனாலும் மனம் தளராத ரபி அவரை குத்தி கொலை செய்தார். பிணத்தை வாய்க்காலில் வீசி விட்டுச் சென்றார்.

    வீட்டிலிருந்து வெளியே சென்ற மகள் வீடு திரும்பாததால் சாய்ராவை பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடிப் பார்த்தனர்.

    நேற்று அங்குள்ள கால்வாயில் சாய்ரா இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாய்ராவின் பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சாய்ராவின் போனை போலீசார் சோதனை செய்தபோது ரபி 5 தடவை மிஸ்டு கால் கொடுத்தது தெரியவந்தது.

    போலீசார் ரபியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது தன்னை காதலிக்க மறுத்த சாய்ராவை கொலை செய்து வாய்க்காலில் வீசிவிட்டு வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு தூங்கியதாக தெரிவித்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரபியை கைது செய்தனர்.

    • ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்ததாக முன்பு தெரிவித்திருந்தார்.
    • அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

    இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் விரைவில் குடும்பஸ்தனாக மாற உள்ளார்.

    அவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சி (SP) நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார்.

    இருவருக்கும் ஜூன் 8 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விழாவிற்கான இடமாக லக்னோவில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டல் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    பிரியாவின் தந்தையும் எம்.எல்.ஏ.வுமான துபானி சரோஜ், ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்ததாக முன்பு தெரிவித்திருந்தார்.

    அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் விரும்புவதாகவும், இரு குடும்பங்களின் பெரியவர்களும் தங்கள் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இந்த சூழலில், அவர்களின் நிச்சயதார்த்த விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    25 வயதான பிரியா சரோஜ், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிஷஹர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

    மறுபுறம், ரிங்கு சிங் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக நற்பெயரைப் பெற்றுள்ளார். அவர் தற்போது இந்திய டி20 அணியில் உள்ளார். 

    • இந்த அட்டூழியத்தை ஆபாசமாக வீடியோ எடுத்து வெளியிடுவதாக மிரட்டினர்.
    • பாதிக்கப்பட்டவர் ஒரு காணொளியையும் சமர்ப்பித்தார்.

    உத்தரப் பிரதேசத்தில் கோவிந்த் நகர் பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் 30 வயது தேசிய அளவிலான டேக்வாண்டோ தடகள வீராங்கனை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

    புகாரின்படி, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவர், ஆசிரமத்தில் ஒரு கடை அமைக்க உதவுவதாக அந்த பெண்ணுக்கு உறுதியளித்தார்.

    இதற்காக நான்காயிரம் ரூபாய் கேட்ட அவர், ஆசிரமத்தில் உள்ள சில செல்வாக்கு மிக்க நபர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வதாகவும், அவர்கள் கடைக்கு இடம் தருவதாகவும் கூறினார். அவரது வார்த்தைகளை நம்பி பாதிக்கப்பட்ட பெண், ஜனவரி 28 அன்று அந்த முதியவருடன் ஆசிரமத்திற்குச் சென்றார்.

    அங்கு போதைப்பொருள் கலந்த லட்டுவை சாப்பிடக் கொடுத்ததாகவும், அதைச் சாப்பிட்ட பிறகு சுயநினைவை இழந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.

    பின்னர், அந்த முதியவர், ஆசிரமத்தின் தலைமை சாமியார் மற்றும் இரண்டு பேர் தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டினார்.

    மேலும், இந்த அட்டூழியத்தை ஆபாசமாக வீடியோ எடுத்து வெளியிடுவதாக மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.

    பயந்துபோன அவர், இறுதியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கடந்த வியாழக்கிழமை தெற்கு துணை ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கோவிந்த் நகர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு துணை ஆணையர் மகேஷ் குமார் தெரிவித்தார்.

    பாதிக்கப்பட்டவர் ஒரு காணொளியையும் சமர்ப்பித்தார். காணொளியில் காணப்படும் ஆசிரம அறையை சனிக்கிழமை ஆய்வு செய்தோம். நாங்கள் அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம், மேலும் நடவடிக்கை எடுப்போம் என்று அவர் தெரிவித்தார்.

    • திருமண மண்டபத்திற்குள் தடிகளுடன் நுழைந்து அந்த கும்பல் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.
    • அந்த கும்பல் சாதிய அவதூறுகளைப் பேசியது.

    தலித் குடும்பம் மண்டபத்தில் திருமணம் நடத்துவதா என கொந்தளித்த சாதிவெறி பிடித்த கும்பல் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் வெள்ளிக்கிழமை இரவு திருமண மண்டபத்திற்குள் தடிகளுடன் நுழைந்து அந்த கும்பல் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

    தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மண்டபத்தில் திருமணத்தை நடத்துவீர்களா என்று கேட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்களின் புகாரில் கூறப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் அமன் சாஹ்னி, தீபக் சாஹ்னி, ராகுல் மற்றும் அகிலேஷ் ஆவர். இவர்களைத் தவிர, குற்றம் சாட்டப்பட்டவர்களில் அடையாளம் தெரியாத சுமார் 20 பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த கும்பல் சாதிய அவதூறுகளைப் பேசி, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமண மண்டபத்தை விழாவிற்குப் பயன்படுத்துவதை எதிர்த்துள்ளது.

    அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை நடந்து வருவதாக ரஸ்ரா காவல் நிலைய பொறுப்பாளர் விபின் சிங் தெரிவித்தார். 

    • தெருவில் சுற்றித்திரிந்த காளை கொம்பால் சுசிலை முட்டி சுசில் தூக்கி வீசப்பட்டார்
    • தடுக்க முயன்ற சுபத்தையும் தாக்கியது.

    உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் சர்தார் கொட்வாலி பகுதியை சேர்ந்தவர் சுசில் பாஜ்பாய் (42).

    இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றுவிட்டு உறவுக்கார இளைஞர் சுபம் உடன் தெருவில் நடத்து சென்றுகொண்டிருந்தார்.

    அப்போது, அந்த தெருவில் சுற்றித்திரிந்த காளை கொம்பால் சுசிலை முட்டி சுசில் தூக்கி வீசப்பட்டார். இளைஞர் சுபம் விரட்ட முயன்றும் மிரண்டு ஓடாத காளை சுசிலை மீண்டும் கொம்பால் முட்டி தாக்கியுள்ளது. தடுக்க முயன்ற சுபத்தையும் தாக்கியது.

    காளை கொம்பால் முட்டி, காலினால் மிதித்ததில் சுசில் தலை மற்றும் வயிற்றில் படுகாயம் ஏற்பட்டது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் காளையை விரட்டிவிட்டு, இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இருவருக்கும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சுசில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுபத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

    • அதிர்ச்சியடைந்த பெற்றோர் லக்னோ போலீசில் புகார் செய்தனர்.
    • கமல் கிஷோர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்தவர் கமல் கிஷோர். இவர் சம்பவத்தன்று அப்பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை புதருக்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியை காணவில்லை என பெற்றோர் தேடிய போது சிறுமி ரத்தக்காயத்துடன் வீட்டுக்கு வந்து தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் லக்னோ போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் சகினா கான் விசாரணை நடத்திய போது கமல் கிஷோர் மதேகஞ்ச் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை பிடிக்க விரைந்து சென்றனர்.

    போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்ற கமல் கிஷோரை சப்-இன்ஸ்பெக்டர் சகினா கான் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது காலில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார்.

    பின்னர் கமல் கிஷோரை கைது செய்த போலீசார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கமல் கிஷோர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • 47,573 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார். மற்றும் அடிக்கல் நாட்டுகிறார்.
    • பெரும்பாலான திட்டங்களில் பணிகள் சமாஜ்வாடி கட்சியால் முடிக்கப்பட்டவை.

    பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் செல்கிறார். அப்போது 47,573 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார். மற்றும் அடிக்கல் நாட்டுகிறார்.

    இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், நாங்கள் செய்து முடித்த திட்டங்களை பாஜக திறந்து வைப்பதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், பாஜக ஆட்சிக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன, ஆனால் இப்போது அவர்கள் சமாஜ்வாடி கட்சி செய்த பணிகளைத் தொடங்கி வைக்கிறார்கள். பங்கி தெர்மல் விரிவாக்கம் திட்டம், நெய்வேலி லிக்நைட் மின்நிலையம், கான்பூர் மெட்ரோ போன்றவை சமாஜ்வாடி கட்சியால் செய்து முடிக்கப்பட்டது.

    • ஆர்.எஸ். யாதவ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

    உத்தரப்பிடறதேச மாநிலம் கான்பூரில் காரை எங்கு பார்க் செய்வது என்று எழுந்த வாக்குவாதத்தில் குடியிருப்பு சங்க செயலாளர் ஆர்.எஸ். யாதவின் மூக்கை ஷதீஜ் மிஸ்ரா என்பவர் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

    ஆர்.எஸ். யாதவ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஷதீஜ் மிஸ்ரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

    • பருவகால காய்ச்சல் என்று ஆரம்பத்தில் அறிகுறிகளை அலட்சியம் செய்தனர்.
    • அவர்கள் அனைவருக்கும் கோவிட்-நெகட்டிவ் ரிசல்ட் வந்தது.

    நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்திலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. காசியாபாத்தில் 14 கொரோனா வைரஸ் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.  

    இந்நிலையில் மெஹ்ராலியைச் சேர்ந்த நான்கு மாத குழந்தைக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    சுகாதாரத் துறை வட்டாரங்களின்படி, குழந்தை தொடர்ந்து இரண்டு நாட்களாக லேசான சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தது.

    மாறிவரும் வானிலை காரணமாக பருவகால காய்ச்சல் என்று ஆரம்பத்தில் அறிகுறிகளை அலட்சியம் குழந்தையின் குடும்பத்தினர், இறுதியில் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ உதவியை நாடினர்.

    அங்கு, குழந்தை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில், குழந்தைக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது, அதில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

    மருத்துவக் குழுக்கள் உடனடியாக குழந்தையின் குடும்ப உறுப்பினர்களைப் பரிசோதித்தன. அவர்கள் அனைவருக்கும் கோவிட்-நெகட்டிவ் அதாவது தொற்று பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டது. வீட்டிற்குள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு குடும்பமும் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.

    யாரும் பாதிக்காதபோதும் வைரஸ் எவ்வாறு குழந்தையை அடைந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக என்று காசியாபாத்தின் கூடுதல் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.கே. குப்தா தெரிவித்தார். 

    • பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் பண்ட் சதம் விளாசினார்.
    • தான் சதம் அடித்ததை ரிஷப் பண்ட் பல்டி அடித்துக் கொண்டாடினார்.

    லக்னோ:

    ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் ஆட்டம் லக்னோவில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த லக்னோ 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 118 ரன்னும், மிட்செல் மார்ஷ் 67 ரன்னும் அடித்தனர்.

    இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளான ரிஷப் பண்ட் இந்த ஆட்டத்தில் சதமடித்து அனைத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

    மேலும் தான் சதமடித்ததை ரிஷப் பண்ட் பல்டி அடித்து கொண்டாடினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய லக்னோ 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது.

    லக்னோ:

    ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பிரீட்ஸ்கே 12 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    மிட்செல் மார்ஷ் அரை சதம் கடந்து 37 பந்தில் 67 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    விராட் கோலி அதிரடியாக ஆடி 54 ரன்னில் வெளியேறினார். 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது.

    அப்போது 5வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால்-ஜித்தேஷ் குமார் ஜோடி இணைந்து அதிரடியாக ஆடியது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. ஜித்தேஷ் சர்மா அரை சதம் கடந்தார்.

    இறுதியில், ஆர்.சி.பி. அணி 18.4 ஓவரில் 230 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 2வது இடம்பிடித்து குவாலிபையர் 1 சுற்றுக்கு முன்னேறியது. ஜித்தேஷ் சர்மா 33 பந்தில் 85 ரன்னும், மயங்க் அகர்வால் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    ×