என் மலர்
இந்தியா

போலீஸ்காரர் மனைவி தற்கொலை - தூக்கு கயிறு முன்பு கதறி அழுத வீடியோ வைரல்
- தொடர்ந்து சித்ரவதை செய்து மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி விட்டனர்.
- வீடியோ சமூக வலைதளங்களில் வரைலானதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பக்ஷிதா காதலாப் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் அனுராக் சிங். இவரது மனைவி சவும்யா காஷ்யப் நேற்று தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சவும்யாவின் உடலைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சவும்யா தற்கொலை செய்வதற்கு முன்பாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். தூக்கு கயிறு முன்பு கதறி அழுதபடி அவர் வெளியிட்டிருந்த அந்த வீடியோவில், எனது கணவர் அனுராக் சிங் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.
அதற்கு எனது மாமியார் எனது கணவரை வற்புறுத்துகிறார். எனது மைத்துனர் சஞ்சய் காவல் துறையில் பணியாற்றுகிறார். மற்றொருவரான ரஞ்சித் வக்கீலாக பணியாற்றுகிறார். அவர்கள் என்னை தொடர்ந்து சித்ரவதை செய்து மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி விட்டனர்.
இவர்கள் பணம் மற்றும் அதிகாரத்தால் எதையும் செய்யக்கூடியவர்கள். இன்று நான் உயிரிழந்தால் அதற்கு இவர்கள் தான் பொறுப்பு என கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வரைலானதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






