என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கடந்த ஜூன் மாதம் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது.
- தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
கமல்ஹாசன், வருகிற 25-ந்தேதி அன்று பாராளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- கையில் காசு வைத்துக்கொள்ளாத காமராசர் ஏழைத் தமிழர்களை ஈட்டச் செய்தார்...
- கருப்பு காந்தி என்று அழைக்கப்பட்டாலும் காந்தி காணாத துறவறம் பூண்டார்....
சென்னை :
தமிழ்நாட்டை 9 வருடங்கள் ஆட்சி செய்த பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட உள்ளது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் காமராஜரின் புகழ்போற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
படிக்காத காமராசர்
பள்ளிகள் செய்தார்
வீடுகட்டாத காமராசர்
அணை கட்டினார்
புத்தகம் எழுதாத காமராசர்
நூலகம் திறந்தார்
கையில் காசு
வைத்துக்கொள்ளாத காமராசர்
ஏழைத் தமிழர்களை
ஈட்டச் செய்தார்
மற்றவர்க்கு நாற்காலி தந்து
தன் பதவி தான்துறந்தார்
கருப்பு காந்தி
என்று அழைக்கப்பட்டாலும்
காந்தி காணாத
துறவறம் பூண்டார்
காமராசர் நினைக்கப்பட்டால்
அறத்தின் சுவாசம்
அறுந்து விடவில்லை
என்று பொருள்
காமராசர் மறக்கப்பட்டால்
மழையே தண்ணீரை
மறந்துவிட்டது என்று பொருள்
நான் உங்களை
நினைக்கிறேன் ஐயா
இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
- சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.
- தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி, நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர், திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- பயணிகளின் வசதிக்காக மதுரை-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
- சிறப்பு ரெயிலில் 10 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை:
மதுரை கோட்ட ரெயில்வேயில் நடக்கும் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஈரோடு-செங்கோட்டை ரெயில் (வ.எண்.16845/16846) திண்டுக்கல்லுடன் நிறுத்தப்படுவதால், பயணிகளின் வசதிக்காக மதுரை-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06846) வருகிற 18-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை செங்கோட்டையில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06845) வருகிற 17-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை மதுரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையம் சென்றடைகிறது.
இந்த சிறப்பு ரெயிலில் 10 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- மின்சார ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும், எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும் உள்ளன.
- தண்டவாளம் 3 மற்றும் 4 முழுவதும் சீரான நிலையில் நேற்று முதல் மெதுவாக ரெயில்கள் இயக்கப்பட்டன.
சென்னை மணலியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து (ஐ.ஓ.சி.) பெட்ரோல், டீசல் ஆகியவை சரக்கு ரெயில்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
அதுபோல் 52 வேகன்களில் டீசல் நிரப்பிய சரக்கு ரெயில் ஒன்று நேற்றுமுன்தினம் அதிகாலை மணலியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது. அதிகாலை 5.30 மணியளவில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே பெரியகுப்பம் பகுதியில் வந்தபோது ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அப்போது டீசல் டேங்கரில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. அடுத்தடுத்து 18 டேங்கர்களில் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்ததால் வானுயரத்திற்கு புகை மூட்டம் சூழ்ந்தது.
இதனை தொடர்ந்து, சென்னையில் இருந்து வெளியூர் சென்று வரும் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.
தீ விபத்து குறித்து அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் தீ அடுத்தடுத்த வேகன்களுக்கும் பரவி, மளமளவென பற்றி எரிந்தது. யாரும் அதன் அருகே செல்ல முடியாத அளவுக்கு தீ பயங்கரமாக எரிந்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த பகுதியில் மின்சார ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும், எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும் உள்ளன. முதலில் ஒரு தண்டவாளத்தை சரி செய்து மின்சார ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, சரக்கு ரெயில் விபத்துக்குள்ளான இடத்தில் தண்டவாளம் 3 மற்றும் 4 முழுவதும் சீரான நிலையில் நேற்று முதல் மெதுவாக ரெயில்கள் இயக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, 46 மணி நேரம் நடைபெற்ற சீரமைப்பு பணிக்கு பிறகு ரெயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால் அரக்கோணம் மார்க்கமாக ரெயில் போக்குவரத்து இயக்கப்படுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- காமராஜ் நகர், ராஜலட்சுமி அவென்யூ, டெலிபோன்ஸ் நகர், விபிகே தெரு .
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (16.07.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
சைதாப்பேட்டை: கட்டபொம்மன் பிளாக், முத்துரங்கன் பிளாக், அஞ்சுஹாம் நகர், பாரி நகர், பள்ளி தெரு, ஆர்.ஆர்.காலனி அனைத்து தெருக்கள், விஎஸ்எம் கார்டன், பாரதி பிளாக், ஏரிக்கரை தெரு, சைதாப்பேட்டை மேற்கு பகுதிகள் (முழுவதும்), 11வது அவென்யூ, 7வது அவென்யூ, எல்ஐசி காலனி, நாகாத்தம்மன் கோவில் தெரு, அண்ணாமலை செட்டி நகர், 1 அஞ்சலகம், ஈ.வி. காலனி 1-4 தெருக்கள், காமாட்சிபுரம் 1வது-10வது அவென்யூ, அசோக் நகர் 58-64 தெரு, மூவேந்தர் காலனி, அசோக் நகரின் ஒரு பகுதி, பிள்ளையார் கோவில் தெரு, சேகர் நகர், மேற்கு ஜோன்ஸ் சாலை, அசோக் நகர் 12வது அவென்யூ, ராமபுரம் ராமசாமி தெரு, ராஜகோபால் தெரு, ஆஞ்சநேயர் பாலம் தெரு, தனசேகரன் தெரு, விஜிபி சாலை.
அம்பத்தூர் : வெள்ளாளர் தெரு, பள்ளி தெரு, ஆச்சி தெரு, பாடசாலை தெரு, எட்டேஸ்வரன் கோவில் தெரு, வைஷ்ணவி நகர், காமராஜர் நகர்.
தரமணி: காமராஜ் நகர், ராஜலட்சுமி அவென்யூ, டெலிபோன்ஸ் நகர், விபிகே தெரு, வெங்கடேஸ்வரா நகர், குருஞ்சி நகர்.
பட்டாபிராம்: சேக்காடு, ஐயப்பன் நகர், ஸ்ரீ தேவி நகர், தந்துறை, கண்ணபாளையம், கோபாலபுரம், விஜிவி நகர், விஜிஎன் நகர்.
காரம்பாக்கம்: சமயபுரம், ஸ்ரீராம் நகர், காந்தி நகர், கந்தசாமி நகர், பொன்னி நகர், மோதி நகர், பத்மாவதி நகர், காவேரி நகர், தர்மராஜா நகர், விஸ்வநாதன் தெரு, பிரமனார் தெரு.
அரும்பாக்கம்: 100 அடி சாலை, ஜெய் நகர் 17,18,21,22,23 தெரு, ஜெய் நகர் 2வது பிரதான சாலை, வள்ளுவர் சாலை, அமராவதி நகர், எஸ்விபி நகர், ஜெகநாதன் நகர் 2வது பிரதான சாலை, பெருமாள் கோவில் தோட்டம், ராமகிருஷ்ணா தெரு.
- ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்த வண்ணம் உள்ளது.
- இந்த பிரச்சனைக்கு ஜி.கே.மணி தான் காரணம் என்று அன்புமணி தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சென்னையில் நேற்று இரவு பாமக முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தியின் மகள் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு வந்த பாமக தலைவர் அன்புமணியை சந்தித்து பேசிய அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி அவருடன் கைகுலுக்கி நலம் விசாரித்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்த வண்ணம் உள்ளது. இந்த பிரச்சனைக்கு ஜி.கே.மணி தான் காரணம் என்று அன்புமணி தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அன்புமணியும் ஜி.கே.மணியும் சந்தித்து பேசியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கல்விக்கு எதிராக யார் பேசினாலும் தமிழ்நாடு உங்களை ஓட ஓட விரட்டும் என்றார் மு.க.ஸ்டாலின்.
- அ.தி.மு.க. ஆட்சிகளிலும் கோயில் நிர்வாகங்கள் கல்வி நிறுவனங்களை நடத்தியதும் தெரியவில்லை.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
காவியா - கல்வியா?
படி படி என்கிற திராவிடத்தில் கிளைவிட்டுவிட்டு, படிக்காதே எனத் தடுக்கும் காவிக்கூட்டத்துக்குக் கால் அமுக்கும் துரோகிகளின் பேச்சுக்கு, தமிழ்நாட்டு மாணவர்களின் உணர்வைக் கோவையில் பதிலாகச் சொல்லியிருக்கிறது திமுக மாணவர் அணி!
அரைவேக்காட்டு எதிர்க்கட்சித் தலைவருக்கு அறநிலையத்துறை சட்டமும் தெரியவில்லை, கடந்த கால அ.தி.மு.க. ஆட்சிகளிலும் கோயில் நிர்வாகங்கள் கல்வி நிறுவனங்களை நடத்தியதும் தெரியவில்லை.
ஆனால், தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி பெறுவதற்கு எதிராகவோ, அதனைக் கொச்சைப்படுத்தியோ பேசினால் ஓரணியில் தமிழ்நாடு உங்களை ஓட ஓட விரட்டும், எங்கள் Dravidian Stock கூட்டம்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- சென்னையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாக அருளரசு நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை கோயம்பேடு துணை ஆணையராக சுஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சிவகங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் புதிய எஸ்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விவேகானந்தா சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜோஸ் தங்கையா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கொளத்தூர் துணை ஆணையராக இருந்து தற்காலிக விடுப்பில் உள்ள பாண்டியராஜன் டிபிஎஸ் பட்டாலியன் எஸ்.பி.ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருமலா பால் மேலாளர் மரண விவகாரத்தில் சர்ச்சைக்கு ஆளானவர் பாண்டியராஜன்.
சென்னையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாக அருளரசு நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கோயம்பேடு துணை ஆணையராக சுஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் எஸ்பியாக விமலா மற்றும் வேலூர் மாவட்ட எஸ்பியாக மயில்வாகனன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நுண்ணறிவுப்பிரிவு இணை ஆணையராக இருந்த தர்மராஜன் வேலூருக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
மகேந்திர குமார் ரத்தோட் காவல்துறை தலைமையக ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விஸ்வேஸ், ராணிப்பேட்டை எஸ்பியாக அய்மன் ஜமால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் காவல் ஆணையராக இருந்த பிரவீன் குமார் அபிநபு தமிழக காவல்துறை பொதுப்பிரிவு ஐஜி-ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த அனில்குமார் கிரி, சேலம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் சரக டிஐஜியாக இருந்த தேவராணி காஞ்சிபுரம் சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறை பொதுப்பிரிவு ஐஜியாக ருஇந்த சாமுண்டீஸ்வரி சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கும் உத்தரவு.
- பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நாளை காமராஜரின் திருவுருவச் சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தவெக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கழகத் தலைவர் உத்தரவின்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து,
நாளை (15.07.2025) செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணி முதல், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கும் திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- உங்களுடன் ஸ்டாலின் தொடக்க விழா கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நாளை நடக்கிறது.
- சென்னையில் இருந்து பாம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டத்தை தொடங்கி உள்ளார். பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசு துறைகளின் சேவைகள், திட்டங்கள் அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்கும் "உங்களுடன் ஸ்டாலின்" என்னும புதிய திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில 15 துறைகளின் 46 சேவைகளும், நகர் புற பகுதியில் 13 துறைகள் என 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளது.
மாநிலம் முழுவதும் இந்ததிட்டத்தின் கீழ் நகர்புற பகுதிகளில் 3 ஆயிரத்து 768 முகாம்களும், ஊரக பகுதிகளில 6 ஆயிரத்து 232 முகாம்களும என மொத்தம 10 ஆயிரம் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் குறைகள் 45 நாட்களில் தீர்த்து வைக்கப்பட உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கும், இந்த முகாமில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், தகுதி உள்ள மற்றும் விடுபட்ட பெண்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இந்த முகாமில் வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் தொடக்க விழா கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நாளை (செவ்வாய்கிழமை) நடக்கிறது.
இதற்காக இன்று சென்னையில் இருந்து பாம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.
இதனால், தாம்பரம் ரெயில் நிலையத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆரவாரத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.
இன்று இரவு சிதம்பரத்துக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழ வீதியில் உள்ள தனியார் விடுதியில் தங்குகிறார்.
நாளை காலை சிதம்பரம் ஜி.எம். வாண்டையார் திருமண மண்டபத்தில உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக, சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் காமராஜர் அவர்களின்திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
சிதம்பரம் அண்ணாகுளம் அருகில் அம்பேத்கர் சிலையை திறந்து வைக்கிறார். மேலும் சிதம்பரம் பைபாஸ் லால்புரத்தில் பட்டியலியன மக்களுக்காக போராடிய எல்.இளையபெருமாள் முழுவுருவ சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்து விழா மேடையில் சிறப்புரையாற்றுகிறார்.
முதலமைச்சர் வருகையையொட்டி சிதம்பரம் விழாக் கோலம் பூண்டுள்ளது. மேலும் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- அஜித்குமார் மரண வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
- சி.பி.ஐ. ஆகஸ்ட் 20-ந்தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளி யம்மன் கோவிலில் காவலா ளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 29). இந்த நிலையில் கோவிலுக்கு வந்த நிகிதா என்பவர் தன்னுடைய காரில் இருந்த நகைகள் மாயமான தாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அஜித்கு மாரை விசாரணைக்கு அழைத்து சென்ற போது, தனிப்படை போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸ் காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணி கண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஸ் ராவத் காத்திருப் போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மேலும், மானா மதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்து ஜூலை 8-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இதனிடையே, அஜித்குமார் மரண வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில், கடந்த 2-ந்தேதி திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் விசாரணையை தொடங்கிய மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர் லால் சுரேஷ், சுமார் 50-க்குமு மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி தனது அறிக்கையை தாக்கல் செய்தார்.
அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்த சம்பவத்தில் விதிமீறல்கள் இருப் பதும், குற்றம் நடந்ததற்கான முகாந்திரமும் இருப்பது தெரிய வருகிறது.
சட்டவிரோத காவல் மரணங்கள் தொடர்பான வழக்கை சிறப்பு விசாரணை அமைப்புக்கு மாற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. விசாரணை அமைப்பின் செயல்பாடுகள் நீதியை நிலைநாட்டும் வண்ணம் இருக்க வேண்டுமே தவிர, சந்தேகிக்கும் வண்ணம் இருக்கக் கூடாது.
இது போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட காவல் துறையினரே வழக்கை விசாரித்தால் நீதி, உண்மை வெளிவராது எனும் சந்தேகம் எழுவதாலேயே சுதந்திரமான விசாரணை அமைப்புக்கு உத்தரவிடப்படுகிறது. சி.பி.ஐ. தரப்பிடம் அனைத்து அறிக்கைகளையும் நீதிமன்ற பதிவாளர் வழங்க வேண்டும், சி.பி.ஐ. ஆகஸ்ட் 20-ந்தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, அஜித்குமார் கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. கடந்த சனிக்கிழமை தனியாக வழக்குப் பதிந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் சி.பி.ஐ. விசாரணை அதிகாரியாக துணைக் கண்காணிப்பாளர் மோஹித்குமார் நியமிக்கப்பட்டார். இவர் பல மாநிலங்களில் முக்கியமான வழக்குகளை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணையை அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளதாக அவர் ஏற்கெனவே தெரிவித்தார்.
விசாரணையை தொடங்குவதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு மோகித்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு மதுரை வந்தனர். அவர்களுக்கு மதுரையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 5-க்கும் மேற்பட்ட அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தன.
இதற்கிடையில் மதுரையில் முகாமிட்டுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் இன்று முதல் விசாரணையை முறைப்படி தொடங்கியுள்ளனர். முன்னதாக தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் மதுரை, சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதன்பிறகு அவர்கள் பிற்பகலில் திருப்புவனம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டு அளிக்கப்பட்ட அறிக்கையில் அடிப்படையில் அஜித்குமாரின் பெற்றோர், சகோதரர், நண்பர்கள், கோவில் செயல் அலுவலர், ஊழியர்கள், நகை மாயமானதாக புகார் தெரிவித்த நிகிதா மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என பட்டியலிட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த இருக்கிறார்கள்.
முன்னதாக திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு குறித்த ஆவணங்களையும் அவர்கள் கோர்ட்டில் இருந்து முறைப்படி இன்று பெற்றுக் கொள்கிறார்கள். மேலும் டெல்லியில் இருந்து வரும் அதிகாரிகளுக்கு மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளும், அலுவலர்களும் உதவியாக விசாரணை பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
தற்போது, சி.பி.ஐ. அதிகாரிகள் அஜித்குமார் வழக்கை விசாரிப்பதற்காக மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் எதிரே கோவில் நிர்வாகத்துக்குச் சொந்தமான வணிக வளாகத்தின் மேல் தளத்தில் உள்ள அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.






