என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பாமக நிர்வாகி இல்லத் திருமண விழாவுக்கு வந்த அன்புமணியை சந்தித்து பேசிய ஜி.கே.மணி
    X

    பாமக நிர்வாகி இல்லத் திருமண விழாவுக்கு வந்த அன்புமணியை சந்தித்து பேசிய ஜி.கே.மணி

    • ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்த வண்ணம் உள்ளது.
    • இந்த பிரச்சனைக்கு ஜி.கே.மணி தான் காரணம் என்று அன்புமணி தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    சென்னையில் நேற்று இரவு பாமக முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தியின் மகள் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.

    இந்த விழாவுக்கு வந்த பாமக தலைவர் அன்புமணியை சந்தித்து பேசிய அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி அவருடன் கைகுலுக்கி நலம் விசாரித்தார்.

    பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்த வண்ணம் உள்ளது. இந்த பிரச்சனைக்கு ஜி.கே.மணி தான் காரணம் என்று அன்புமணி தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், அன்புமணியும் ஜி.கே.மணியும் சந்தித்து பேசியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×