என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கோயம்பேட்டில் தள்ளுவண்டி கடையில் வடை சாப்பிட்டு வடைக்கான காசை செல்போனில் அனுப்பினார்.
- தள்ளுவண்டி கடையில் டிஜிட்டல் பேமெண்ட் முறை இருப்பது பிரதமர் மோடியின் சாதனை என்று கூறினார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் பா.ஜனதா சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.
தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கோயம்பேட்டில் தள்ளுவண்டி கடையில் வடை சாப்பிட்டு வடைக்கான காசை செல்போனில் அனுப்பினார். தள்ளுவண்டி கடை வரை டிஜிட்டல் பேமெண்ட் வந்துள்ளதாக கூறி வாக்கு சேகரித்தார்.
இதற்கு முன்னதாக பெரிய பெரிய உணவகங்களில் மட்டும் டிஜிட்டல் பேமெண்ட் இருக்கும். தற்போது சிறிய தள்ளுவண்டி கடைக்கு கூட டிஜிட்டல் பேமெண்ட் முறை இருப்பதாகவும் இதுவே பிரதமர் மோடியின் சாதனை எனவும் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தள்ளுவண்டி கடை வைத்திருக்கும் பெண்ணிடம் நீங்கள் டிஜிட்டல் பேமெண்ட் முறையில் பணம் பெற்றுக்கொள்வது சிறந்த முறை என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
- சுமார் 700 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
- பலர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வர்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி துவங்கியது.
நல்ல நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 405 பேர் தமிழகம் முழுக்க வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று வரை தமிழகம் முழுக்க சுமார் 700 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 100-க்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மனு தாக்கல் செய்ய இன்று (மார்ச் 27) கடைசி நாள் ஆகும். கடைசி நாள் என்பதால் பிரதான கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சை என பலர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கலாம்.
இன்று மாலை 3 மணியுடன் மனு தாக்கல் செய்வதற்கான நேரம் என்பதால், மனு தாக்கல் செய்ய விரும்புவோர் 3 மணிக்குள் மனு தாக்கல் செய்வதற்கான டோக்கன் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இன்றுடன் மனு தாக்கல் நிறைவு பெறும் நிலையில், நாளை (மார்ச் 28) வேட்பு மனு பரிசீலனை நடைபெற இருக்கிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 30 ஆம் தேதியே கடைசி நாள் ஆகும்.
- ஐபிஎல் தொடரின் இன்றைய 7-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் அணிகள் மோதுகிறது.
- தல டோனியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று சூரி பதிவிட்டுள்ளார்
ஐபிஎல் தொடரின் இன்றைய 7-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
போட்டியில் அதிரடியாக ஆடிய ரச்சின் 46 ரன்கள் விளாசினார். 5 சிக்சர்களை பறக்கவிட்ட துபே அரை சதம் கடந்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது.
குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் சாய் கிஷோர், ஜான்சன், மோகித் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியை நடிகர் சூரி நேரில் கண்டு கழித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,
"முதல் முறை சேப்பாக்கம் மைதானத்தில். Fantastic Atmosphere. அற்புதமான ரசிகர்கள். சென்னை என்றாலே தனி கெத்து தான். நம்மாளுங்க மைதானத்தில் பட்டைய கிளப்புறாங்க...தல டோனியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று சூரி பதிவிட்டுள்ளார்.
- படகு அல்லது பாய்மரப் படகு சின்னத்தை நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்கப்பட்டது.
- தேர்தல் ஆணையத்தில் மின்னஞ்சல், நேரில் மனு அளித்திருந்தனர்.
பாராளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.
தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
இதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் சீமான் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிட்டு இருந்தது.
தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு "மைக்" சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.
மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் படகு அல்லது பாய்மரப் படகு சின்னத்தை நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்கப்பட்டது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் தான் என சீமான் வைத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
மாற்று சின்னம் கோரி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தேர்தல் ஆணையத்தில் மின்னஞ்சல், நேரில் மனு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.
- மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதில், ஏற்கனவே தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.
அதன்படி, திருவள்ளூர் (தனி)- சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி- கே. கோபிநாத், கரூர்- ஜோதிமணி, கடலூர்- எம்.கே. விஷ்னு பிரசாத், சிவகங்கை- கார்த்தி சிதம்பரம், விருதுநகர்- மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரி- விஜய் வசந்த்,
நெல்லை - ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடுவதாக அறிவித்தார்.
விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டியிடுகிறார்.
ஆனால், மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மயிலாகுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வழங்கறிஞர் ஆர்.சுதா போட்டியிடுகிறார்.
வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்ற நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் ஆர்.சுதா நாளை மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- திண்டுக்கல் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாராக் போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாராக் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியினரின் அறிமுகக் கூட்டம் நடந்தது. அந்த மேடையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
அங்கு பேசிய முபாரக், "என்னுடைய அப்பா 2015-ல் தவறிப்போய்விட்டார். என்னுடைய தாயார் 2022-ல் இறந்துபோய்விட்டார். தாயும் தந்தையுமில்லாத எனக்கு தாயாக தந்தையாக எனக்கு இரண்டு அப்பாக்கள் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தோடு நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். ஒரு அப்பா என்னுடைய திண்டுக்கல்லார் (திண்டுக்கல் சீனிவாசன்) இன்னொரு அப்பா நத்தம் ஐயா (நத்தம் விஸ்வநாதன்) இருக்கிறார், இதற்கு மேல், என்ன வேண்டும் என்று நான் கேட்கிறேன்.
காலையில் போன் பண்ணும்போதுகூட, அப்பா (திண்டுக்கல் சீனிவாசன்) என்னுடைய பிள்ளையை மாதிரி உன்னை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று சொன்னார். ஆயிரக் கணக்கான அப்பாக்கள், ஆயிரக் கணக்கான அம்மாக்கள், லட்சக் கணக்கான சகோதரர்கள், லட்சக் கணக்கான சகோதரிகள், லட்சக் கணக்கான மாமன்மார்கள், லட்சக் கணக்கான மாமிமார்கள் லட்சக் கணக்கான சித்தப்பா, சித்திக்களைக் கொண்டிருக்கிற நான் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.
இங்கே கிடைக்கிற வெற்றி என்பது வரலாற்று வெற்றியாக நான் கருதுகிறேன். ஒருபோதும் திண்டுக்கல்லையும் என்னையும் பிரிக்க முடியாது என்று சொல்லுகிற ஒரு புனிதமான உறவு நம் இருவருக்கும் இடையில் இருப்பதாக நான் கருதுகிறேன். எனவே, திண்டுக்கல்லை விட்டு என்னைப் பிரிக்க முடியாது" என்று நெல்லை முபாரக் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.
நெல்லை முபாரக், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதனை அப்பாக்கள் என்று குறிப்பிட்டு பேசியபோது, திண்டுக்கல் சீனிவாசன் உணர்ச்சி வசப்பட்டு அடக்கமுடியாமல் விம்மி அழுதார்.
- தேர்தல் நேரத்தில் தான் பிரதமர் தமிழகம் பக்கம் வருவார்.
- இலங்கையை கண்டிக்க முடியாத நீங்கள், விஸ்வகுருவா? மௌன குருவா?
மக்களவை தேர்தல் முன்னிட்டு போட்டியிடும் அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் தீவிரமாய் இறங்கியுள்ளனர்.
அந்த வகையில், தூத்துக்குடி, ராமநாதபுரம் மக்களவை தொகுதிகளுக்கான திமுக கூட்டணியின் தேர்தல் பரப்புரை நடைபெற்று வருகிறது.
அதன்படி, கோவில்பட்டி அருகே எட்டையபுரத்தில் உள்ள சிந்தலக்கரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நன்மை செய்யும் கட்சி திமுக. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் மறக்க முடியுமா? எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தூத்துக்குடியில் துப்பாக்கிசூடு நடத்தி 13 பேர் கொலை செய்யப்பட்டனர். அதைக்கூட டிவியை பார்த்துக்தான் தெரிந்து கொண்டேன். அந்த சம்பவத்தை தற்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப பணிகள் வழங்கப்பட்டது. ஈபிஎஸ் மக்கள் விரோத ஆட்சியை நடத்தினார். மக்களை ஏமாற்ற மீண்டும் பிரசாரம் செய்து வருகிறார். பாஜக பற்றி ஈபிஎஸ் ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்?
தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. தற்போது, உதயநிதி குறித்து ஈபிஎஸ் விமர்சிக்க தொடங்கியுள்ளார்.
10 ஆண்டுகளில் நாட்டை பாஜக பாதாளத்தில் தள்ளியுள்ளது. தேர்தல் நேரத்தில் தான் பிரதமர் தமிழகம் பக்கம் வருவார்.
தமிழக மீனவர்கள் தாக்கப்பட திமுக, காங்கி தான் காரணம் என பிரதமர் பேசுகிறார். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தட்டிக்கேட்க பிரதமர் தயங்குவது ஏன்?
இலங்கையை கண்டிக்க முடியாத நீங்கள், விஸ்வகுருவா? மௌன குருவா? தமிழக மீனவர்களை காப்பாற்ற தவறிய மோடி, திசை திருப்ப தங்களை விமர்சிக்கிறார். கருப்பு பணத்தை மீட்டு தருவதாக கூறினார் பிரதமர் தந்தாரா ?
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை நிலவுகிறது. தமிழகத்திற்கு தந்த எந்த வாக்குறுதியையும் பிரதமர் நிறைவேற்றவில்லை.
தமிழகத்திறகாக பிரதமர் என்ன சிறப்பு திட்டத்தை கொண்டு வந்தார்?
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது
- தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
தேர்தலை ஒட்டி, அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை முடித்து, வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், ஆம்பூர் அருகேயுள்ள கரும்பூரில் அனைத்து கட்சியினருக்கும் சாதகமாக கட்சியின் சின்னங்களை ஒரே கட்டிடத்தில் வரையப்பட்டுள்ள நிகழ்வு, அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
- பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்
- இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக்கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணமலை. திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி. நகார்கோவில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 28/03/2024 (வியாழக் கிழமை) அன்று 605 பேருந்துகளும் 29/03/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 300 பேருந்துகளும். 30/03/2024 (சனிக்கிழமை) 345 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய இடங்களுக்கு 28, 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- எங்களுக்கு பதவி பெரிதல்ல, மக்கள் தான் பெரிது.
- அதிமுக பற்றி முதலமைச்சர் விமர்சனம் செய்து வருகிறார்.
தூத்துக்குடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அங்கு, அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
திமுக எம்.பிக்கள் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கவில்லை. மக்களுக்கு பாதிப்பு என்றால் அரசு ஓடோடி வந்து உதவி செய்ய வேண்டும்.
அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மக்கள் வெள்ளத்தில் தூத்துக்குடி பாதிப்படைந்தபோது நான் தான் வந்தேன்.
புயல், வெள்ளத்தின்போது திமுக அரசு துரிதமாக செயல்படவில்லை.அதிமுக பற்றி முதலமைச்சர் விமர்சனம் செய்து வருகிறார். பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது அதிமுகவா? திமுகவா?

நாங்கள் நினைத்து இருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்போம். ஆனால் தேவையில்லை.எங்களுக்கு பதவி பெரிதல்ல, மக்கள் தான் பெரிது. தமிழக மக்களுக்கான திட்டங்கள், நிதிகளை பெறுவோம்.
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தான் அதிமுகவின் லட்சியம். ஆட்சி அதிகாரத்திற்காக திமுக, காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது.
தூத்துக்குடி தொகுதியில் அதிமுகவின் வெற்றி உறுதி. 2026-ல் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மீண்டும் மலரும்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தின்போது கல்லை காண்பித்தார். அப்போது, மோடியுடன் நான் இருக்கும் படத்தை காண்பித்து பல் தான் தெரிகிறது என்று கூறினார்.
சிரித்தால் பல் தானே தெரியும். உதயநிதி ஸ்டாலின், முக ஸ்டாலின் மோடியுடன் சிரித்து பேசும் இந்த படங்களில் என்ன தெரிகிறது?
இவ்வாறு அவர் கூறினார்.
- சிங்கை ராமச்சந்திரன் தந்தை கோவிந்தராஜ் 1991 முதல் 1996 வரை எம்.எல்.ஏ.-வாக இருந்தார்
- எனது தந்தையின் கோட்டாவில் சீட் வாங்கியதாக அண்ணாமலை தவறான தகவல் கூறியது வருத்தம் தருகிறது
கோவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராஜ் மகன் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், அண்ணாமலை கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தவர். அதே கல்லூரியில்தான் சிங்கை ராமசந்திரனும் படித்தார். தனக்கு மதிப்பெண் மூலமாக பிஎஸ்ஜி கல்லூரியில் இடம் கிடைத்ததாகவும், சிங்கை ராமச்சந்திரனுக்கு அவரது அப்பா எல்.எல்.ஏ. ஒதுக்கீடு மூலம் இடம் கிடைத்ததாகவும் கூறினார். மேலும் சிங்கை ராமச்சந்திரன் அகமதாபாத் ஐஐஎம்-வில் படித்தவர்.
சிங்கை ராமச்சந்திரன் தந்தை கோவிந்தராஜ் 1991 முதல் 1996 வரை எம்.எல்.ஏ.-வாக இருந்தார். அப்போது சிங்கை ராமச்சந்திரனுக்கு வயது 11. சிங்கை ராமச்சந்திரன் கல்லூரியில் 2002-ம் ஆண்டு சேருவதற்கு முன்னதாகவே இறந்துவிட்டார். இறந்து போன ஒருவர் எப்படி கல்லூரியில் இடம் வாங்கித் தர முடியும்? என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் எம்.பி.ஏ. பட்டம் வாங்கியவர் சிங்கை ராமச்சந்திரன். அதுவுமா எம்.எல்.ஏ கோட்டா? என கேள்வி எழுப்பியுள்ளனர்
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்,எனது தந்தையின் கோட்டாவில் சீட் வாங்கியதாக அண்ணாமலை தவறான தகவல் கூறியது வருத்தம் தருகிறது.
நான் டிப்ளமோவில் நன்றாக படித்ததால் எனக்கு மேல்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தது. அண்ணாமலை உண்மைக்கு மாறான தகவல்களை சொல்கிறார்.
அண்ணாமலைக்காவது அப்பா இருந்தார், அவர் கல்லூரிக்கு அழைத்து சென்றார். எனக்கு அப்பா இல்லை நான் மட்டும் தனியாக பஸ் ஏறி போய் கல்லூரிக்கு சென்றேன்.
அண்ணாமலை இவற்றை சொல்லும் போது இதையெல்லாம் சொல்ல வேண்டி இருக்கின்றது. எனது தந்தையின் இறுதி சடங்கிற்கு கூட கஷ்டப்பட்டு கடன் வாங்கி செய்தோம்.
காரை விற்று கடனை அடைத்தோம், பேச வேண்டும் என்றால் நிறைய பேசலாம். இவர் இப்படி பேசியதால் , எங்கள் கட்சியில் அப்பாவின் விசுவாசிகள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் கடுமையான வேதனை அடைந்துள்ளனர்.
இதற்கு அண்ணாமலை மறைந்த என் தந்தை குறித்து பேசியதற்கு அவர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- தாமரை சின்னத்தில் போட்டியிடாமல் சுயேட்சை சின்னத்தில் போட்டி.
- தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தர வேண்டும்.
அ.தி.மு.க.வில் ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடாமல் சுயேட்சை சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார்.
அ.தி.மு.க. மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நடத்தி வரும் சட்ட போராட்டத்தை தொடர வேண்டும் என்றால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவதே சரியாக இருக்கும் என்கிற கணக்கிலேயே ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் "பக்கெட்" சின்னம் வழங்க கோரி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், அந்த மனுவில் "தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தர வேண்டும். அல்லது, இரட்டை இலை சின்னத்தை முடக்குங்கள்.
இரட்டை இலை சின்னம் முடங்கும் பட்சத்தில் ராமநாதபுரத்தில், தனக்கு பக்கெட் சின்னத்தை வழங்க வேண்டும்" என தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த மனுவில் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.






