search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தல் - தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் இன்றே கடைசி நாள்
    X

    பாராளுமன்ற தேர்தல் - தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் இன்றே கடைசி நாள்

    • சுமார் 700 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
    • பலர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வர்.

    தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி துவங்கியது.

    நல்ல நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 405 பேர் தமிழகம் முழுக்க வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று வரை தமிழகம் முழுக்க சுமார் 700 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 100-க்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர்.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மனு தாக்கல் செய்ய இன்று (மார்ச் 27) கடைசி நாள் ஆகும். கடைசி நாள் என்பதால் பிரதான கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சை என பலர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கலாம்.

    இன்று மாலை 3 மணியுடன் மனு தாக்கல் செய்வதற்கான நேரம் என்பதால், மனு தாக்கல் செய்ய விரும்புவோர் 3 மணிக்குள் மனு தாக்கல் செய்வதற்கான டோக்கன் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இன்றுடன் மனு தாக்கல் நிறைவு பெறும் நிலையில், நாளை (மார்ச் 28) வேட்பு மனு பரிசீலனை நடைபெற இருக்கிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 30 ஆம் தேதியே கடைசி நாள் ஆகும்.

    Next Story
    ×