என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ராணுவத்தில் சேருவதற்கான அக்னிவீரர்கள் தேர்வு தூத்துக்குடி தருவை மைதானத்தில் வருகிற 1-ம் தேதி தொடங்கி 5-ம் தேதி வரை நடக்கிறது.
- தேர்வு நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையாகவும் நடக்கிறது.
சென்னை:
மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் (பாதுகாப்பு பிரிவு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராணுவத்தில் சேருவதற்கான அக்னிவீரர்கள் தேர்வு தூத்துக்குடி தருவை மைதானத்தில் வருகிற 1-ம் தேதி தொடங்கி 5-ம் தேதி வரை நடக்கிறது.
ஏற்கனவே இந்த பணிக்கு விண்ணப்பித்த திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் ஆகிய 17 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு தேர்வில் பங்கேற்க அனுமதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அவ்வாறு அனுமதி கடிதம் பெற்றவர்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தேர்வு நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையாகவும் நடக்கிறது. யாரேனும் வேலை வாங்கி தருவதாக கூறினால் அதை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
- தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
சைக்கிள்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள் எவை? 3-4 நிறுவனங்களுக்கு மேல் இருக்க முடியாதே?
இந்தத் தரமில்லாத சைக்கிள்களைத் திரும்பப் பெற்று அவற்றுக்கு மாற்றாக தரமான சைக்கிள்களை அந்த நிறுவனங்கள் தர வேண்டும் என்று சட்டப்படியான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என கூறயுள்ளார்.
தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்
— P. Chidambaram (@PChidambaram_IN) June 29, 2024
இந்த தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்…
- கள்ளச்சாராய வியாபாரி மரூர் ராஜாவுக்கு மிக நெருக்கமான அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியைப் பதவி நீக்கம் செய்யவில்லை.
சென்னை:
கள்ள சாராய குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்குவதற்கான சட்ட திருத்தம் சட்டசபையில் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கூயிருந்தார்.
இதற்கு, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2023 ஆம் ஆண்டு, 23 பேர் பலியாகக் காரணமாக இருந்த கள்ளச்சாராய வியாபாரி மரூர் ராஜாவுக்கு மிக நெருக்கமான அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆண்டு, கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியான பின்பும், மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியைப் பதவி நீக்கம் செய்யவில்லை. திமுக மூத்த தலைவர்கள் அனைவருக்கும் நெருக்கமான, போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாஃபர் சாதிக்குக்கு, திமுகவில் உயர் பதவி கொடுத்து, ரூ.2,000 கோடி சம்பாதிக்கும் வரை வேடிக்கை பார்த்தீர்கள்.
இத்தனையும் செய்து விட்டு, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937ல், தண்டனைகள் கடுமையாக இல்லை என்று திருத்த மசோதா கொண்டு வருகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது, இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என்று கூறியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு, 23 பேர் பலியாகக் காரணமாக இருந்த கள்ளச்சாராய வியாபாரி மரூர் ராஜாவுக்கு மிக நெருக்கமான அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆண்டு, கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியான பின்பும், மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியைப் பதவி நீக்கம்…
— K.Annamalai (@annamalai_k) June 28, 2024
- தமிழ்நாட்டில் யானைகள் வழித்தடம் என அறிவிக்கப்பட்டுள்ள 38 வழித்தடங்கள் குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும்.
- தோட்டக்கலைத் துறை செயலாளருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
வனம், வன விலங்கு, சுற்றுச்சூழல் ஆகிய வழக்குகளை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த சிறப்பு டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள், நேற்று வழக்குகளை விசாரித்தனர்.
அப்போது, தமிழ்நாட்டில் யானைகள் வழித்தடம் என அறிவிக்கப்பட்டுள்ள 38 வழித்தடங்கள் குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும். வனப்பகுதியில் தமிழ்நாடு தொழில்நுட்ப நகர கட்டுமானத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.
ஏற்கனவே இந்த மனுவுக்கு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டும், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை ஜூலை 5-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதுவரை தமிழ்நாடு தொழில்நுட்ப நகர கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது. தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
பின்னர், ''ஊட்டி கல்லார் பகுதியில் யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான தோட்டத்தை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டு 3 ஆண்டுகளாகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க வேண்டும்.
தோட்டக்கலைத் துறை செயலாளருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று நீதிபதிகள் எச்சரிக்கை செய்தனர். இதுதொடர்பான வழக்கை வருகிற ஆகஸ்டு 7-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
- கூடலூர் தாலுகா பாடந்தொரை ஆற்று வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது.
- பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது.
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் நேற்று மாலை 3 மணி முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. கூடலூர் தாலுகா பாடந்தொரை ஆற்று வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது.
இதேபோல் ஆற்றுவாய்க்கால் கரையோரம் உள்ள கூட்டுறவு பால் சங்க அலுவலக கட்டிடத்தை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஊழியர்கள் தண்ணீருக்குள் இறங்கி நடந்து சென்று பால் கேன்களை சுமந்து சென்றனர். இதேபோல் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பயிர்கள் சேதம் அடைந்தன. ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மழையின் தாக்கம் குறைந்த பின்னர் ஊருக்குள் புகுந்த வெள்ளம் வடிந்தது.
பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது. இதனால் பந்தலூர் பஜாரில் உள்ள சாலை, கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது. கனமழையால் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் பந்தலூர் பஜார், கோழிக்கோடு-கூடலூர் சாலை, தாலுகா அலுவலகம் செல்லும் சாலை, கூவமூலா சாலையை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பந்தலூர் பகுதி வெள்ளக்காடாக மாறியது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.
- அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது.
- இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணி புரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2023-24-ம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விவரங்கள் தொகுக்கப்பட்டு 1.7.2024 அன்று காலை 10 மணிக்கு அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது.
cps.tn.gov.in/public என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணி நிரவல் செய்யப்பட உள்ளன.
- மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையின்படி, நடத்தப்பட வேண்டும்.
சென்னை:
சென்னை, மதுரை, கோவை மாநகராட்சி பள்ளிகளை தவிர, அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணி நிரவல் செய்யப்பட உள்ளன.
அதன்படி, பணி நிரவல் கலந்தாய்வு கடந்த ஆகஸ்டு மாதம் 1-ம்தேதி பள்ளியில் உள்ள மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையின்படி, நடத்தப்பட வேண்டும்.
அதாவது, மேல்நிலைப் பள்ளிகளில் 1,500 மாணவ-மாணவிகள் உள்ள பள்ளிகளுக்கு ஒரு ஆய்வக உதவியாளர், 1,501 முதல் 3,000 வரை 2 பேர், 3,001 முதல் அதற்கு மேல் 3 பேர் என்ற அடிப்படையிலும், உயர்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பணியிடம் என்ற அடிப்படையிலும் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணிநிரவல் செய்ய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பணிநிரவல் மேற்கொள்ளும்போது உபரி என கண்டறியப்பட்ட ஆய்வக உதவியாளரில் மூத்தவர் முதலில் பணிநிரவல் செய்யப்படவேண்டும் என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
- சென்னையில் அறிமுகப் பிரதியை சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டார்.
- 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' புத்தகம் முதலில் 2021-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்தது.
ஈஷா லைஃப் சார்பாக சத்குருவின் புதிய தமிழ் புத்தகமான 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' சென்னையில் இன்று (ஜூன் 28) அறிமுகம் செய்யப்பட்டது.
புத்தக அறிமுகப் பிரதியை இயக்குனரும், நடிகையுமான சுஹாசினி மணிரத்னம் வெளியிட, அதனை ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம். முரளி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள பாரதிய வித்யா பவனில் இன்று மாலை நடைபெற்ற இந்த விழாவில் கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா மற்றும் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் கர்மா தமிழ் புத்தகம் குறித்த சிறப்புரையை வழங்கினர்.

சத்குரு இந்த புத்தகத்தின் மூலம், கர்மா என்றால் என்ன? நம் வாழ்வை மேம்படுத்த கர்மா சார்ந்த கருத்துக்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை குறித்து விவரித்துள்ளார். மேலும் இந்த சவாலான உலகில் பயணிப்பதற்கு தேவையான படிப்படியான வழிகாட்டுதலை சூத்திரங்களாகவும் வழங்கி இருக்கிறார்.
'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' புத்தகம் முதலில் 2021-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்தது. ஆங்கிலப் புத்தகம் வெளியானது முதல் தற்போது வரை பல லட்சக்கணக்கான பிரதிகளுக்கு மேல் விற்று சாதனை படைத்து வருகிறது.
உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற இப்புத்தகம் தற்போது தமிழில் அறிமுகம் செய்யப்படுவது வாசகர்கள், தமிழ் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பலத்த வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
- டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் நாள் முடிவில் 525 ரன்கள் குவித்தது.
- தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா இரட்டை சதமடித்து, 205 ரன்னில் அவுட்டானார்.
சென்னை:
இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை திறம்பட சமாளித்தனர். பொறுப்பாக ஆடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.
ஷபாலி வர்மா-ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்த நிலையில், மந்தனா 149 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய சுபா சதீஷ் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷபாலி வர்மாவுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தார்.
நிதானமாக ஆடிய ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்து, 205 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஜெமிமா 55 ரன்னிலும் அவுட்டானார்.
இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 525 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 42 ரன்னும், ரிச்சா கோஷ் 43 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.
- ஜுலை 2024 மாத துவக்கத்திலிருந்து மாதம் முழுதும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு.
- 2024-2025-க்கான மானியக் கோரிக்கையின் போது உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அறிவிப்பு.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மாதந்தோறும் வழங்கி வந்த ரேஷன் பொருட்கள் விநியோகம் கடந்த இரண்டு மாதங்களாக தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, மே மாதம் வழங்க வேண்டிய பாமாயில், துவரம் பருப்பு ஜூன் மாதத்தில் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஜூன் மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பு ஜூலை மாதத்தில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜூன் மாத பொருட்களை ஜூலையில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் 2024 மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை ஜூலை 2024 ஆம் மாதம் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.
பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு அப்பண்டங்களைக் கொள்முதல் செய்வதில் காலதாமதம் நேரிட்டது.
இருப்பினும் அரசின் தொடர்ந்த சீரிய முயற்சிகள் காரணமாக நகர்வுப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு மே 2024 மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கப்பெறாத குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுக்கான மே 2024 மாத உரிம அளவு பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை ஜீன் 2024 மாதத்தில் பெற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பெற்றுள்ளனர்.
கூடுதல் நகர்வு காரணமாக ஜுன் 2024 ஆம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள், ஜுன் 2024ஆம் மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஜுலை 2024 ஆம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என நடைபெற்று வரும் 2024-2025-க்கான மானியக் கோரிக்கையின் போது உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் ஜுன் 2024 மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜுலை 2024 மாதத்தில் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து துரித ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டும் ஜுன் 2024 மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான ஜுன் 2024 மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை உடனடியாக பெறும் வகையிலும் ஜுலை 2024 மாத துவக்கத்திலிருந்து மாதம் முழுதும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை.
- உரிய ஆவணங்கள் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மழவன்தாங்கள் சோதனைச் சாவடியில் காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னையை சேர்ந்த மருத்துவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் தனது தந்தையின் இடத்தை விற்பனை செய்து, பணத்தை சென்னை எடுத்து செல்வதாக தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி வழியாக பணத்தை எடுத்து செல்ல முடியாது என்பதால், திருவண்ணாமலை சென்று அங்கிருந்து சென்னை செல்ல திட்டமிட்டிருந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
- 89,429 தனி வீடுகளுக்கான கட்டுமான பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகிறது.
- 1,146 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த மூன்று ஆண்டுக்குள் மறு கட்டுமானம்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய துறையின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 79,094 அடுக்குமாடி குடியிருப்புகள், 89,429 தனி வீடுகளுக்கான கட்டுமான பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகிறது.
நீண்ட கால பயன்பாடு மற்றும் தட்பவெப்பநிலை காரணமாக சிதிலமடைந்த குடியிருப்புகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 6,746 அடுக்குமாடி குடியிருப்புகள் 1,146 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த மூன்று ஆண்டுக்குள் மறு கட்டுமானம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






