என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னை மாநகராட்சி புதிய ஆணையராக குமரகுருபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • நீலகிரி மாவட்ட கலெக்டராக லட்சுமி பவ்யா தன்னேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் 10 மாவட்ட கலெக்டர்களை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    * தமிழக உள்துறை செயலாளராக இருந்த அமுதா வருவாய்த்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * தமிழக உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    * சென்னை மாநகராட்சி புதிய ஆணையராக குமரகுருபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * தொழிலாளர் நலத்துறை செயலாளராக வீரராகவ ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளராக கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * ராணிப்பேட்டை கலெக்டராக சந்திரகலா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலாளராக மதுமதியை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக எம்.அருணா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக குமார் ஜெயந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * நீலகிரி மாவட்ட கலெக்டராக லட்சுமி பவ்யா தன்னேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * தஞ்சை மாவட்ட கலெக்டராக பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * நாகை மாவட்ட கலெக்டராக ஆகாஸ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * அரியலூர் மாவட்ட கலெக்டராக ரத்தினசாமி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * கடலூர் மாவட்ட கலெக்டராக சிபி ஆதித்யா செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * கன்னியாகுமரி கலெக்டராக அழகுமீனா ஐஏஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக சிம்ரன்ஜீத் சிங் கலோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

     

    • மது போதையால் பல குடும்பங்கள் சீரழிவதை பொறுக்க முடியாமல் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
    • ரெயில் நிலையம் முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு காமராஜர் சிலை அமைந்துள்ளது. இன்று காலை சிலை முன்பு திடீரென கருப்பு உடை அணிந்த நபர் ஒருவர் கையில் மதுவை ஒழிப்போம் என்ற வாசகங்களை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் விழிப்புணர்வு பதாகை ஒன்றை ஏந்தி முட்டி போட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதனால் ரெயில் நிலையம் முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தக்கூடாது என அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்திய போது மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், போராட்டத்தில் ஈடுபட்ட நபர் நெல்லை மாவட்டம் குறிச்சிக்குளம் பகுதியை சேர்ந்த யோவான் என்பதும், இவர் ரெயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் பணி புரிவதும் தெரியவந்துள்ளது.

    மது போதையால் பல குடும்பங்கள் சீரழிவதை பொறுக்க முடியாமல் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

    • பெண் ஒருவர் கதறி அழும் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
    • ஒரு இளம்பெண் உருவம் 'வா' என சைகை காண்பித்து அவரை அழைத்துள்ளது.

    ஆரணி:

    ஆரணி பாளையம் டவுன் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 35).

    இவர், சொந்த வேலை காரணமாக தச்சூருக்கு சென்ற பின்னர், அங்கு வேலை முடிந்ததும், தனது பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 12 மணிக்கு வடுகசாத்து ஏரிக்கரை அருகே வந்தபோது திடீரென கொலுசு சத்தம் கேட்டுள்ளது.

    இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர் பைக்கை நிறுத்தி என்ஜினை அணைத்தார்.

    இந்நிலையில், பெண் ஒருவர் கதறி அழும் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால், மேலும் பதட்டமான பாலாஜி, என்ஜினை 'ஆன்' செய்து முகப்பு விளக்கை ஒளிரவிட்டார்.


    அப்போது, 50 அடி தொலைவில் நின்றிருந்த ஒரு இளம்பெண் உருவம் 'வா' என சைகை காண்பித்து அவரை அழைத்துள்ளது.

    இதனால் பயந்துபோன அவர், பைக்கை வேகமாக திருப்பி வந்த வழியே திரும்பினார்.

    பின்னர், சில அடி துாரம் சென்றதும் மீண்டும் திரும்பி பார்த்தபோது, அந்த பெண் உருவம் வானில் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த காட்சிகளை, பாலாஜி தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து, வாட்ஸ்ஆப், உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.

    • கால அவகாசம் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24 , 25 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.

    இம்மாநாட்டில் பங்கேற்கவும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https://muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டு, மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் 15.7.2024-ம் தேதிக்குள்ளும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புபவர்கள் 10.7.2024-ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 1,003 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்கிட வேண்டுமென பல்வேறு தரப்பினரிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழு முடிவுகளின்படி பங்கேற்பாளர்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் இறையன்பர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
    • உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு முன் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ஜாபர் சாதி்க் போதைப் பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

    இந்நிலையில் ஜாபர் சாதிக் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு முன் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதையடுத்து ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய, சென்னை ஆவடியை சேர்ந்த ஜோசப் என்பவர் வீட்டில் 6 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஜாபர் சாதிக்கிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் ஜோசப்பின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • முன்னாள் அமைச்சர்கள் பி. தங்கமணி, டாக்டர் விஜயபாஸ்கர், ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சியில், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுமார் 26 ஊராட்சிகளும், அதேபோல் மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவெறும்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பல ஊராட்சிகளையும், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்காமலும், பொதுமக்களை பாதிக்கும் வகையிலும், திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிய வருகின்றன.

    ஊராட்சிகள் மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்டால், மத்திய அரசில் இருந்து இவ்வசதிகள் தங்களுக்கு கிடைக்காமல் போய்விடும் என மக்கள் அச்சப்படுகின்றனர். பொதுமக்களை பாதிக்கும் வகையில் திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு திட்டமிட்டுள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும், ஏழை, எளிய மக்களின் நலன் கருதி இத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு, திருச்சி மாநகர் ஆகிய மாவட்ட அ.தி.மு.க.சார்பில், 22-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில், ஸ்ரீரங்கம் தொகுதி, அல்லித்துறை அண்ணா திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    முன்னாள் அமைச்சர்கள் பி. தங்கமணி, டாக்டர் விஜயபாஸ்கர், ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சுற்றுப் பயணத்தின் போது எந்தெந்த மாவட்டங்களில் நிர்வாகிகள் கண்துடைப்புக்காக வேலை செய்கிறார்கள் என்பதை கண்காணித்து பட்டியல் தயாரிக்கப்படும்.
    • அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் முடிந்ததும் திருப்தி இல்லாத நிர்வாகிகளை மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்ற பிறகு கட்சியை வலுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முக்கியமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் செயல்பாடுகள், நிர்வாகிகளின் செயல்பாடுகள் பற்றி தொண்டர்களிடம் நேரில் கருத்து கேட்டு வருகிறார்.

    இதுவரை 50-க்கும் மேற்பட்ட கட்சி மாவட்டங்களுக்கு சென்றுவிட்டார். இடையில் விக்கிரவாண்டி தேர்தல் நடந்ததால் செல்லவில்லை. மீண்டும் நாளை முதல் தனது சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார்.

    நாளை மாலை திருவள்ளூரில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கருத்து கேட்கிறார். நாளை மறுநாள் (18-ந் தேதி) திண்டுக்கல், கரூர். 19-ந் தேதி திருச்சி, புதுக்கோட்டை 20-ந் தேதி சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு செல்கிறார்.

    இதுபற்றி கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    இந்த சுற்றுப் பயணத்தின் போது எந்தெந்த மாவட்டங்களில் நிர்வாகிகள் கண்துடைப்புக்காக வேலை செய்கிறார்கள் என்பதை கண்காணித்து பட்டியல் தயாரிக்கப்படும்.

    அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் முடிந்ததும் திருப்தி இல்லாத நிர்வாகிகளை மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றார்.

    • சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
    • வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அவ்வப்போது சாரல் மழையும், சில நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

    கடந்த சில நாட்களாகவே வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. நேற்று மாலை வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஆழியார், சின்னக்கல்லார், முடிஸ் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    இரவிலும் மழை கொட்டி தீர்த்ததால் பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய, விடிய பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையிலும் மழை பெய்து வருகிறது.

    தொடர் கனமழைக்கு வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 23-வது மற்றும் 24-வது கொண்டை ஊசி வளைவுக்கு இடையே உள்ள பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது. அத்துடன் மரம் ஒன்றும் முறிந்து விழுந்தது.

    இதனால் அந்த பகுதியில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கும், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கும் செல்லும் வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த கற்கள் அகற்றப்பட்டன.

    காலை 8.30 மணிக்கு பிறகு பணிகள் அனைத்தும் முடிந்ததும் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.

    வால்பாறை அண்ணா நகர் பகுதியில் முருகன் என்பவரின் வீட்டின் தடுப்புச்சுவர் இடிந்து மண்சரிவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    முடிஸ் மற்றும் முருகாளி எஸ்டேட் பகுதியில் மரம் விழுந்தது. இதனை அப்பகுதி மக்களை அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர்.

    தொடர் மழை காரணமாக வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு, நடுமலையாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றில் இறங்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    வால்பாறை சுற்றுவட்டாரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லார் பகுதியில் 23 செ.மீ மழை பதிவாகி உள்ளது. வால்பாறையில் தொடரும் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பலத்த மழையின் காரணமாக அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்து 7ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
    • திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு சிறு ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.

    அதை ஆதாரமாக கொண்டு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் அமராவதி பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆற்றை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அத்துடன் பலத்த மழையின் காரணமாக அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்து 7ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

    மேலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் நிலவுவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பதற்கான சூழல் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இன்று காலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 72.34 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. ஒரே நாளில் 8 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திருப்பூர் மாநகரின் ஒரு சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி பல்லடத்தில் 4 மில்லி மீட்டர் மழை , தாராபுரம் தாலுக்கா பகுதியில் 4 மி.மீ., , உப்பாறு அணை பகுதியில் 10 மி.மீ., உடுமலைப்பேட்டை பகுதியில் 27 மி.மீ., அமராவதி அணை பகுதியில் 22 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருமூர்த்தி அணை பகுதியில் 51 மில்லி மீட்டரும் , மடத்துக்குளம் தாலுகா பகுதியில் 10 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 178 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகி இருப்பதாகவும், சராசரியாக 8.90 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை முதல் லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் திருப்பூரில் குளுகுளு வானிலை நிலவி வருகிறது. உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரி த்துள்ளதால் இன்று 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • தொடக்கப் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
    • இந்த சம்பவத்தால் தமிழகமே மிகுந்த சோகத்தில் மூழ்கியது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான 20-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்பட்டது.

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தால் தமிழகமே மிகுந்த சோகத்தில் மூழ்கியது. இதனையடுத்து ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) 20-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்காக தீ விபத்து நடந்த பள்ளியின் முன்பு குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சார்பில் நினைவஞ்சலி கூட்டமும், கும்பகோணம் பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 

    பலியான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். 

    பலியான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். 

    பின்னர், இறந்த 94 குழந்தைகளின் உருவப்படங்களுடன் வைக்கப்பட்டிருந்த பேனருக்கு மலர்களால் அலங்கரித்து பெற்றோர்கள், உறவினர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, மாலையில் மகாமக குளத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது.

    • அனைத்து பயனீட்டாளர்களுக்குமான மின் கட்டணத்தை பன்மடங்கு தி.மு.க. அரசு உயர்த்தியது.
    • ஏழைஎளிய, நடுத்தர மக்கள் கூடுதல் சுமையை சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாதம் ஒரு முறை மின் கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் 1,000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரை பயனடையலாம் என்றும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.

    ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக, அனைத்து பயனீட்டாளர்களுக்குமான மின் கட்டணத்தை பன்மடங்கு தி.மு.க. அரசு உயர்த்தியது. இதனால், ஏழைஎளிய, நடுத்தர மக்கள் கூடுதல் சுமையை சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

    இந்தச் சுமையிலிருந்து பொது மக்கள் மீண்டு வருவதற்குள்ளாக, மேலும் ஒரு நிதிச்சுமை அவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிறப்புப் பொதுவினியோகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்ததை விட இப்போது துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
    • மக்களின் குறைகளை அறிந்து அவற்றை போக்குவது தான் அரசின் கடமை ஆகும்.

    சென்னை :

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை ஒரு தரப்பினருக்கு நிறுத்தவும், மீதமுள்ளவர்களுக்கு விலையை உயர்த்தவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மூன்றாவது முறையாக மின்கட்டண உயர்வு என்ற இடியை ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் மீது இறக்கியுள்ள தமிழக அரசு, துவரம் பருப்பு, பாமாயில் வழங்குவதையும் நிறுத்தி ஏழைகளின் வயிற்றில் மீண்டும், மீண்டும் அடிக்கக் கூடாது.

    2007-ஆம் ஆண்டில் பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்ட போது, அதனால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஓரளவாவது போக்கும் நோக்கத்துடன் பருப்பு, பாமாயில், மளிகை சாமான்கள் வழங்கும் சிறப்பு பொதுவினியோகத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி வழங்கப்பட்டு வந்த உளுந்து, மளிகை சாமான்கள் நிறுத்தப்பட்டு விட்ட நிலையில், இப்போது துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றையும் நிறுத்த தமிழக அரசு முயற்சிப்பது அநீதியாகும்.

    பாமாயில், துவரம்பருப்பு வழங்கும் திட்டத்திற்கான மானியச் செலவு அதிகரித்து விட்டதால், அத்திட்டத்தை கைவிடும்படி நிதித்துறை கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து பருப்பு , பாமாயில் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தவும், பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தும் விவகாரத்தில் அரசின் முடிவைத் தான் அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். அதிகாரிகளின் யோசனைகளை அரசு ஏற்கக் கூடாது. அதிகாரிகளின் யோசனைகளுக்கு கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் செவி சாய்த்திருந்தால் ஓமந்தூரார் ஆட்சியில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்காது; அறிஞர் அண்ணாவின் ஆட்சியில் அது நீட்டிக்கப்பட்டிருக்காது. காமராஜர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டமும், எம்.ஜி.ஆர் ஆட்சியில் சத்துணவுத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்காது.

    சிறப்புப் பொதுவினியோகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்ததை விட இப்போது துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இத்தகைய சூழலில் இத்திட்டத்தை விரிவுபடுத்துவது தான் மக்கள் நல அரசுக்கு அழகாக இருக்குமே தவிர, குறுக்குவது சரியாக இருக்காது. 2021-ஆம் ஆண்டில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உளுந்து வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, அதை செயல்படுத்தாமல் இருக்கும் திட்டத்தையும் சீர்குலைக்க முயல்வது அழகல்ல.

    மக்களின் குறைகளை அறிந்து அவற்றை போக்குவது தான் அரசின் கடமை ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தை இப்போதுள்ள நிலையிலேயே தொடர வேண்டும். ஏற்கனவே வாக்குறுதி அளித்தவாறு உளுந்து வழங்கும் திட்டத்தையும் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    ×