என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாவட்ட வாரியாக தொண்டர்களிடம் கருத்து கேட்கிறார் செல்வப்பெருந்தகை
- சுற்றுப் பயணத்தின் போது எந்தெந்த மாவட்டங்களில் நிர்வாகிகள் கண்துடைப்புக்காக வேலை செய்கிறார்கள் என்பதை கண்காணித்து பட்டியல் தயாரிக்கப்படும்.
- அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் முடிந்ததும் திருப்தி இல்லாத நிர்வாகிகளை மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்ற பிறகு கட்சியை வலுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முக்கியமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் செயல்பாடுகள், நிர்வாகிகளின் செயல்பாடுகள் பற்றி தொண்டர்களிடம் நேரில் கருத்து கேட்டு வருகிறார்.
இதுவரை 50-க்கும் மேற்பட்ட கட்சி மாவட்டங்களுக்கு சென்றுவிட்டார். இடையில் விக்கிரவாண்டி தேர்தல் நடந்ததால் செல்லவில்லை. மீண்டும் நாளை முதல் தனது சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார்.
நாளை மாலை திருவள்ளூரில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கருத்து கேட்கிறார். நாளை மறுநாள் (18-ந் தேதி) திண்டுக்கல், கரூர். 19-ந் தேதி திருச்சி, புதுக்கோட்டை 20-ந் தேதி சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு செல்கிறார்.
இதுபற்றி கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
இந்த சுற்றுப் பயணத்தின் போது எந்தெந்த மாவட்டங்களில் நிர்வாகிகள் கண்துடைப்புக்காக வேலை செய்கிறார்கள் என்பதை கண்காணித்து பட்டியல் தயாரிக்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் முடிந்ததும் திருப்தி இல்லாத நிர்வாகிகளை மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றார்.






