என் மலர்
கர்நாடகா
- சன்னபட்னா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சிபி யோகேஷ்வர், மத்திய அமைச்சர் குமாரசாமி மகனை தோற்கடித்தார்.
- ஷிக்கானில் காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமது கான், பாஜக எம்பி பசவராஜ் பொம்மையின் மகனை தோற்கடித்தார்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல், வயநாடு தொகுதி மக்களவை இடைத்தேர்தல், பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் தற்போதைய நிலவரப்படி, கர்நாடக இடைத்தேர்தலில் 3 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
இதில், சன்னபட்னா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சிபி யோகேஷ்வர், மத்திய அமைச்சர் குமாரசாமி மகனை தோற்கடித்தார்.
ஷிக்கானில் காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமது கான், பாஜக எம்பி பசவராஜ் பொம்மையின் மகனை தோற்கடித்தார்.
சந்தூர் தொகுதியில் காங்கிரஸ் எம்பி துக்காராம் மனைவி இ.அன்னபூர்ணா பாஜகவின் பங்காரா ஹனுமந்தாவை தோற்கடித்துள்ளார்.
- தனது கையில் வைத்தபடி தலைமுடி உலர்த்தும் உபகரணத்தை ஆன் செய்துள்ளார்.
- முடி உலர்த்தும் எந்திரத்தில் வெடி பொருளை வைத்து அனுப்பிய ஷீலாவந்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் இலகல் டவுனை சேர்ந்தவர் சசிகலா. இவரது வீட்டிற்கு கூரியர் மூலம் ஒரு பார்சல் வந்தது. இதையடுத்து பார்சல் நிறுவன ஊழியர் சசிகலாவை தொடர்பு கொண்டார். அப்போது அவர் தான் எந்த பொருளும் ஆர்டர் செய்யவில்லை என்றும், தற்போது தான் வெளியில் இருப்பதாகவும் கூறினார்.
அதற்கு அந்த ஊழியர் இப்போதே உங்கள் பொருளை வாங்கிச் செல்லுங்கள் என சொல்லியுள்ளார். இதனால் சசிகலா தனது தோழியான பக்கத்துவீட்டை சேர்ந்த பசவராஜேஸ்வரி (வயது 40) என்பவருக்கு போன் செய்து, அந்த கூரியரை வாங்கி வைக்கும்படி கூறியுள்ளார்.
பின்னர் அதனை தனது வீட்டுக்கு எடுத்து சென்று பசவராஜேஸ்வரி பிரித்து பார்த்துள்ளார். அப்போது பக்கத்துவீட்டை சேர்ந்த ஒருவர், அந்த உபகரணத்தை எப்படி செயல்படுகிறது என செயல்விளக்கம் காட்டும்படி கூறியுள்ளார். இதையடுத்து பசவராஜேஸ்வரி தனது வீட்டில் உள்ள மின் சுவிட்ச் பாக்சில் மின்வயரை இணைத்துவிட்டு, தனது கையில் வைத்தபடி தலைமுடி உலர்த்தும் உபகரணத்தை ஆன் செய்துள்ளார்.

ஷீலாவந்த்
அந்த சமயத்தில் திடீரென அந்த உபகரணம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பசவராஜேஸ்வரியின் இரு கைகளும் மணிக்கட்டு அளவுக்கு துண்டாகியது. கைவிரல்கள் துண்டாகி வீட்டின் அறை முழுவதும் ரத்தம் சிதறியது. இதனால் வலியில் கதறி துடித்தார். உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு பரபரப்பு தகவல்கள் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:-
பசவராஜேஸ்வரிக்கும் அவரது உறவினர் ஷீலாவந்த் என்பவருக்கும் திருமணத்துக்கு முன்பே பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் பசவராஜேஸ்வரியின் கணவர் இறந்த பின்பும் ஷீலாவந்த் தொடர்ந்து பழகி வந்தார். இதையடுத்து பக்கத்துவீட்டை சேர்ந்த சசிகலா அவருடன் பழகுவதை நிறுத்த சொல்லியுள்ளார். இது பற்றி தெரியவந்ததும் ஷீலாவந்த் ஆத்திரமடைந்து சசிகலாவை கொல்ல திட்டமிட்டார். கிரானைட் குவாரியில் வேலை பார்க்கும் ஷீலாவந்த், சசிகலா மீது உள்ள ஆத்திரத்தில் ஒரு முடி உலர்த்தும் எந்திரத்தை வாங்கி அதில் குவாரிகளில் பாறைகளை வெடிக்க பயன்படுத்தப்படும் டெட்டனேட்டரை பொருத்தினார்.
பின்னர் அதை சசிகலாவின் முகவரிக்கு கூரியர் மூலம் அனுப்பி உள்ளார். அப்போது சசிகலா வீட்டில் இல்லாததால் அதை பசவராஜேஸ்வரி வாங்கி பயன்படுத்திய போதுதான் அது வெடித்து சிதறியது தெரியவந்தது. இதையடுத்து முடி உலர்த்தும் எந்திரத்தில் வெடி பொருளை வைத்து அனுப்பிய ஷீலாவந்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நவ நாகரீக ஜீன்ஸ் பேண்டை பார்த்து இதுபோன்று ஆடைகள் அணிந்து வரக்கூடாது என்று அவர்கள் அறிவுறுத்தினர்.
- ஒரு கடையில் கோணி ஊசி மற்றும் சணலை வாங்கினர்.
மங்களூரு:
இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் நாகரீக மோகம் அதிகமாக உள்ளது என்றால் மிகையல்ல. புள்ளிங்கோ ஸ்டைல் தலைமுடி வைத்துக்கொள்வது, வித,விதமான டாட்டூகளை உடலில் போட்டுக்கொள்வது, கிழிக்கப்பட்ட நிலையில் உள்ள ஜீன்ஸ் பேண்ட்டுகள் அணிவதை நவ நாகரீகமாக கருதும் மனநிலை உள்ளது.
இதற்கு ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
அதுபோல் கர்நாடகத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா பனகஜே பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷாகிப். இவரது மகன் சாகீல்(வயது 21). இவர் நேற்று முன்தினம் பெல்தங்கடி டவுனுக்கு வந்தார். அப்போது அவர் நவநாகரீக முறையில் ஆடைகள் அணிந்திருந்தார். வெள்ளை நிற 'டி-சர்ட்' மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட் நவநாகரீக முறையில் ஆங்காங்கே கிழிந்த நிலையில் இருந்தது. மேலும் தொடை பகுதியில் சல்லடை வைத்தார்போல் கிழித்து வைக்கப்பட்டு இருந்தது. பெல்தங்கடி டவுனுக்கு வந்த சாகீல் சந்தேகட்டே மார்க்கெட்டுக்கு சென்றார். அவர் மார்க்கெட்டில் அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்து தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த லாயிலா கிராமம் புத்ரபைலு பகுதியைச் சேர்ந்த சபீர், அனீஷ் பனகஜே, பாப் ஜான் சாகேப் ஆகிய 3 பேரும் சேர்ந்து சாகீலை வழிமறித்தனர்.
பின்னர் அவர் அணிந்திருந்த நவ நாகரீக ஜீன்ஸ் பேண்டை பார்த்து இதுபோன்று ஆடைகள் அணிந்து வரக்கூடாது என்று அவர்கள் அறிவுறுத்தினர்.
அப்போது சாகீலுக்கும், சபீர் உள்ளிட்ட 3 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சபீர் உள்ளிட்ட 3 பேரும் சாகீலை வசமாக பிடித்து வைத்துக் கொண்டனர். அதையடுத்து அவர்கள் அங்குள்ள ஒரு கடையில் கோணி ஊசி மற்றும் சணலை வாங்கினர்.
பின்னர் சாகீலை பின்னால் இருந்து கைகளை மடக்கிப்பிடித்தபடி ஒருவர் பிடித்துக் கொள்ள இன்னொருவர் கோணி ஊசி மற்றும் சணலை கோர்த்து அவரது ஜீன்ஸ் பேண்ட்டை தைத்தார்.
இந்த நிகழ்வை இன்னொருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். பேண்ட் கிழிந்திருந்த பகுதிகளை தைத்த பின்னர் அவர்கள் சாகீலை விடுவித்தனர்.
பின்னர் அந்த வீடியோவை அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் மன வேதனை அடைந்த சாகீல், தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார்.
இந்த நிலையில் வீட்டுக்கு வந்த அவரது வீட்டின் கார் டிரைவர், சாகீலை மீட்டார். பின்னர் இதுபற்றி அவர் சாகீலின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த அவர்கள் விரைந்து வந்து சாகீலை மீட்டு சிகிச்சைக்காக பெல்தங்கடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தற்போது சாகீல் மேல்சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இதுவரை போலீசில் சாகீல் தரப்பில் புகார் அளிக்கவில்லை. இருப்பினும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சசிகலாவுக்கு ஒரு ஹேர் ட்ரையர் பார்சல் வந்துள்ளது.
- ஹேர் ட்ரையர்-ஐ வாங்கிய பசவராஜேஸ்வரி அது எப்படி வேலை செய்கிறது என்று சோதித்து பார்ப்பதற்காக ஆன் செய்துள்ளார்.
கர்நாடகாவில் பார்சலில் வந்த ஹேர் ட்ரையர் வெடித்துச் சிதறியதில், பசவராஜேஸ்வரி என்பவரின் காய் விரல்கள் துண்டானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பாகல்காட் பகுதியில் சசிகலா, பசவராஜேஸ்வரி என்ற 2 பெண்கள் அக்கம்பக்கத்து வீடுகளில் வசித்து வருகின்றனர். பசவராஜேஸ்வரியின் கணவர் ராணுவத்தில் பணியாற்றும்போது உயிரிழந்தார்.
இந்நிலையில் சசிகலாவுக்கு ஒரு ஹேர் ட்ரையர் பார்சல் வந்துள்ளது. ஆனால் சசிகலா ஊரில் இல்லாததால் அந்த பார்சலை வாங்கி ஹேர் ட்ரையர் வேலை செய்கிறதா என்று பார்க்குமாறு பசவராஜேஸ்வரிவிடம் சசிகலா கூறியுள்ளார்.
இதனையடுத்து ஹேர் ட்ரையர்-ஐ வாங்கிய பசவராஜேஸ்வரி அது எப்படி வேலை செய்கிறது என்று சோதித்து பார்ப்பதற்காக ஆன் செய்துள்ளார். அப்போது திடீரென ஹேர் ட்ரையர் வெடித்து சிதற பசாம்மாவின் முகம், கைகளில் கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக பசவராஜேஸ்வரியை உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கின் விசாரணையில் சசிகலா ஹேர் ட்ரையர் எதுவும் ஆர்டர் செய்யவில்லை என்று கூறியது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், ஷார்ட் சர்க்யூட் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது சசிகலாவிற்கும் பசவராஜேஸ்வரிக்கும் ஏதேனும் முன்விரோதம் இருந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
- பெங்களூரு கலால் துறை கண்காணிபாப்பாளர் உள்பட 4 அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லோக் ஆயுக்தா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் உள்பட 25 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் காவிரி பாசன கழகத்தின் நிர்வாக இயக்குனர், மற்றும் பெங்களூரு கலால் துறை கண்காணிபாப்பாளர் உள்பட 4 அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லோக் ஆயுக்தா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்களுக்கு சொந்தமான வீடுகள், மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள், பினாமி என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் உள்பட 25 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
- 5 பேர் கொண்ட நக்சலைட் குழு உணவு பொருட்கள் வாங்க வந்தபோது போலீசார் சுற்றி வளைத்தனர்.
- துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 4 பேர் தப்பி ஓட்டம்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் ஹெப்ரி போலீஸ் எல்லைக்குட்பட்ட கபினாலே வனப்பகுதியில் நேற்று இரவு 5 நக்சலைட்டுகள் கொண்ட குழுவினர் உணவு பொருட்களை வாங்க வந்தனர்.
இதுப்பற்றி நக்சல் எதிர்ப்புப்படை போலீசாருக்கு தகவல் தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் நக்சலைட் தலைவர் விக்ரம் கவுடா என்பவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மற்ற 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கேரளாவில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்ததையடுத்து நக்சலைட்டுகள் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை நோக்கி வந்துள்ளனர். இதில் விக்ரம் கவுடா என்கவுன்டர் செய்யப்பட்டார். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்றனர். இந்த துப்பாக்கி சண்டை கபினாலே பஸ் நிலையத்தில் இருந்து 7 கி.மீ, தூரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
- பெங்களூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (World Trade Center) அமேசான் இந்தியா தலைமையகம் உள்ளது.
- சத்வா டெக் பார்க் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் உள்ளது.
உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கிறது. இந்தியாவின் சிலிகான் VALLEY என அழைக்கப்படும் கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (World Trade Center) வளாகத்தில் அமேசான் இந்தியா நிறுவனத்தின் தலைமையகம் இயங்கி வருகிறது.
இந்நிலையில் வாடகை காசை மிச்சப்படுத்த தற்போது அமேசான் இந்தியா தலைமையகத்தை பெங்களூரு விமானம் நிலையம் அருகே புறநகரில் உள்ள சத்வா டெக் பார்க்கிற்கு மாற்ற உள்ளது. இதன்மூலம் வாடகை செலவை வெகுவாக குறைக்கலாம் என்று அமேசான் திட்டமிட்டுள்ளது.

தற்போது உலக வர்த்தக மையத்தில் 18 மாடிகளில் சுமார் 13 மாடியை வாடகைக்கு எடுத்துக் சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமேசான் தலைமையகம் இயங்கிவருகிறது. இந்நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட உள்ள சத்வா டெக் பார்க் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் உள்ளது.
இந்த டெக் பார்க்கில் சுமார் 11 லட்சம் சதுரடி பரப்பளவில் 7000 பேர் பணியாற்றும் வகையில் புதிய தலைமையகம் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது உள்ள இடத்தின் வாடகை விகிதமான ஒரு சதுர அடிக்கு ரூ.250 என்று இருக்கும் நிலையில் அதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான தொகையே புதிய இடத்திற்கு செலுத்த வேண்டி இருக்கும். இந்த இடமாற்றம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- திப்பசந்திராவில் கோவிலில் இருந்த புவனேஸ்வரி சிலையை மாணவன் உடைத்தான்
- சிறுவனின் வீட்டை கண்டுபிடித்து இரண்டு போலீசார் மஃப்டி உடையில் சென்றனர்
கர்நாடக தலைநகர் பெங்களூரில் 10 ஆம் வகுப்பு தேர்வில் ஃபெயில் ஆனதற்கு கடவுள் தான் காரணம் என்று மாணவன் சாமி சிலையை உடைந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
பெங்களூரின் கிழக்கு பகுதியில் உள்ள திப்பசந்திராவில் கோவிலில் இருந்த புவனேஸ்வரி கடவுள் சிலையை உடைத்தாக 17 வயது சிறுவன் மீது போலீசார் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
சம்பவம் குறித்து பேசிய போலீஸ், 10 ஆம் வகுப்பு எஸ்எஸ்எல்சி பரீட்சையில் மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்ததால் அடைந்த சிறுவன் விரக்தியில் இருந்துள்ளான், தனது தோல்விக்கு கடவுள் தான் காரணம் என்று கருதிய சிறுவன் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள புவனேஸ்வரி சிலையைக் கீழே தள்ளி உடைத்துள்ளான்.

சிலை உடைந்து கிடப்பதை கோவில் பூசாரி சில மணி நேரங்கள் கழித்து கவனித்துள்ளார். எனவே போலீசில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார் சிறுவன் ஒருவன் சிலையை உடைத்ததை கண்டறிந்தனர்.
சிறுவனின் வீட்டை கண்டுபிடித்து மஃப்டி உடையில் சென்ற இரண்டு போலீசார் சிறுவனை கஸ்டடியில் எடுத்து சிறார் நீதி மையத்தில் ஒப்படைத்தனர்.
- நீச்சல் குளத்தின் ஒரு பக்கம் 6 அடி ஆழமாக உள்ளதால், முதலில் ஒருவர் உயிரிழந்திருக்க வாய்ப்பு.
- சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மங்களூருின் புறநகரில் உள்ள உச்சிலா கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள ஒரு தனியார் பீச் ரிசார்ட்டில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில், மைசூரை சேர்ந்த நிஷிதா, பார்விதி மற்றும் கீர்த்தனா என்ற இளம் பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
நீச்சல் குளத்தின் ஒரு பக்கம் 6 அடி ஆழமாக உள்ளதால், முதலில் ஒருவர் உயிரிழந்திருக்க வாய்ப்பு என்றும் அவரை காப்பாற்ற முற்பட்ட மற்ற 2 பெண்களும் நீரில் மூழ்கியிருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பா.ஜ.க. தலைவர்கள் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியுள்ளனர்.
- 50 பேரிடம் பேசி தலா ரூ.50 கோடி வழங்குவதாக கூறியுள்ளனர்.
பெங்களூரு:
முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் மைசூருவில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அவர் பேசுகையில், எனது அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 50 பேரை விலைக்கு வாங்க தலா ரூ.50 கோடி வழங்க பா.ஜ.க. முன்வந்தது.
ஆனால் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் பணத்தை வாங்க மறுத்துவிட்டனர். இவ்வளவு பணம் பா.ஜ.க.வுக்கு எங்கிருந்து வந்தது ? என பரபரப்பு தகவலை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் இதை துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று பெங்களூவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகாவில் 2008-ம் ஆண்டு ஆபரேசன் தாமரை திட்டத்தை கொண்டு வந்து 2019-ம் ஆண்டு காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி அரசாங்கத்தை கவிழ்த்தார்கள். இதில் 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. செல்வாக்கின் கீழ் சென்றதால் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நிர்வாகத்திற்கு வழிவகுத்தது.
தற்போது காங்கிரஸ் கட்சி 137 இடங்களில் பெரும்பான்மையுடன் உள்ளது. தற்போது மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை தொடர்பாக பா.ஜ.க. தலைவர்கள் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியுள்ளனர்.
50 பேரிடம் பேசி தலா ரூ.50 கோடி வழங்குவதாக கூறியுள்ளனர். இதுபற்றி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் என்னிடம் கூறினர். அதை தான் சித்தராமையா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நான் பிறகு பேசுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டை கர்நாடக பா.ஜ.க. முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுகுறித்து கர்நாடக பா.ஜ.க. கட்சி தலைவர் விஜயேந்திரா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 50 பேருக்கு தலா ரூ.50 கோடி கொடுப்பதாக பா.ஜ.க.வினர் பேரம் பேசியதாக முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா?. நாங்கள் அவ்வாறு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
இது பொய் குற்றச்சாட்டு என்பது குறைந்தபட்ச அரசியல் அறிவு உள்ளவர்களுக்கு தெரியும். பொய் செய்திகளை பரப்புவது காங்கிரசின் தொழிலாக மாறிவிட்டது. மூடா நில முறைகேடு விவகாரத்தில் விசாரணை தீவிரம் அடைந்துள்ளதால், சித்தராமையா இப்படி பேசி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார். அதிகாரத்தை இழந்துவிடுவோம் என்ற பயத்தில் சித்தராமையா வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.
ரூ.50 கோடி விஷயத்தில் அமலாக்கத்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதன் உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மூங்கில் கட்டைகளால் கட்டப்பட்டுள்ளதை கண்டு வியந்தார்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜப்பானை சேர்ந்த இளம்பெண் கீகி சென். சமூக வலைத்தள பிரபலமான இவர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவரை லட்சக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கீசி சென் இந்தியாவை சுற்றி பார்ப்பதற்காக விமானம் மூலம் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் பெங்களூரு விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை பார்த்து மிகவும் ஆச்சரியமடைந்தார். விமான நிலையத்தின் ஓய்வறை, காத்திருப்புப் பகுதிகள் மற்றும் உணவு அங்காடிகள் உள்ளிட்டவை முழுவதும் மூங்கில் கட்டைகளால் கட்டப்பட்டுள்ளதை கண்டு வியந்தார்.
மேலும் அதனை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். 'இந்தியா விமானநிலையத்தை கண்டு வியப்பு' என்ற தலைப்புடன் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ பதிவு பார்வைகளை குவித்து வைரலாகி வருகிறது.
- போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பரிதவித்து கொண்டிருந்தனர்.
- சில நிமிடங்களில் போக்குவரத்து நெரிசல் சரியானது.
பெங்களூரு:
பெங்களூரு கே.ஆர்.புரம் தொகுதி பா.ஜ.க, எம்.எல்.ஏ பைரதி பசவராஜ். இவர், கே.ஆர்.புரம் அருகே ஐ.டி.ஐ. பகுதியில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பரிதவித்து கொண்டிருந்தனர். அதுபோல் எம்.எல்.ஏ.வும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டார். போக்குவரத்து நெரிசல் சரி ஆகும், அங்கிருந்து செல்லலாம் என்று பைரதி பசவராஜும் தனது காருக்குள் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தார்.
ஆனாலும் நெரிசல் சரி ஆகாமல் இருந்ததால், தனது காரில் இருந்து பைரதி பசவராஜ் இறங்கி நடுரோட்டில் நின்று போக்குவரத்து போலீஸ்காரர் போல், சாலையில் நின்று கொண்டு வாகன நெரிசலை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டார். ஒருபுற சாலையில் நின்ற வாகனங்களை கையை காண்பித்து நிறுத்திய அவர், மற்றொரு புறம் இருந்து வந்த வாகனங்களை வேகமாக செல்லும்படி கூறினார். சில நிமிடங்களில் அங்கு நிலவிய போக்குவரத்து நெரிசல் சரியானது. இதையடுத்து, தனது காரில் ஏறி பைரதி பசவராஜ் புறப்பட்டு சென்றார்.
போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போக்குவரத்து போலீஸ்காரர், யாரும் இல்லாத காரணத்தால் வாகன நெரிசல் ஏற்பட்டதும், இதனால் போலீஸ்காரர் போன்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. நின்று கொண்டு வாகன நெரிசலை சரி செய்திருப்பதாக கூறி அவரை வாகன ஓட்டிகள் பாராட்டினர்.






