பெங்களூருவில் 25 இடங்களில் லோக்ஆயுக்தா போலீசார் சோதனை

பெங்களூரு கலால் துறை கண்காணிபாப்பாளர் உள்பட 4 அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லோக் ஆயுக்தா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் உள்பட 25 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூருவில் 25 இடங்களில் லோக்ஆயுக்தா போலீசார் சோதனை
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் காவிரி பாசன கழகத்தின் நிர்வாக இயக்குனர், மற்றும் பெங்களூரு கலால் துறை கண்காணிபாப்பாளர் உள்பட 4 அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லோக் ஆயுக்தா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்களுக்கு சொந்தமான வீடுகள், மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள், பினாமி என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் உள்பட 25 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com