கர்நாடகா இடைத்தேர்தல்- 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி

சன்னபட்னா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சிபி யோகேஷ்வர், மத்திய அமைச்சர் குமாரசாமி மகனை தோற்கடித்தார்.ஷிக்கானில் காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமது கான், பாஜக எம்பி பசவராஜ் பொம்மையின் மகனை தோற்கடித்தார்.
கர்நாடகா இடைத்தேர்தல்- 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி
Published on

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல், வயநாடு தொகுதி மக்களவை இடைத்தேர்தல், பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் தற்போதைய நிலவரப்படி, கர்நாடக இடைத்தேர்தலில் 3 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

இதில், சன்னபட்னா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சிபி யோகேஷ்வர், மத்திய அமைச்சர் குமாரசாமி மகனை தோற்கடித்தார்.

ஷிக்கானில் காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமது கான், பாஜக எம்பி பசவராஜ் பொம்மையின் மகனை தோற்கடித்தார்.

சந்தூர் தொகுதியில் காங்கிரஸ் எம்பி துக்காராம் மனைவி இ.அன்னபூர்ணா பாஜகவின் பங்காரா ஹனுமந்தாவை தோற்கடித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com