என் மலர்tooltip icon

    குஜராத்

    • சரக்குப் பொருட்களை ஏற்றிக்கொண்டு 6 பேர் ரோப் காரில் பயணித்துள்ளனர்.
    • தொழிலாளர்கள் மற்றும் லிப்ட்மேன்கள் உட்பட 6 பேர் இறந்தனர்.

    குஜராத் மாநிலம், பஞ்ச்மகாலில் பவகவ் மலையில் உள்ள ரோப் கார் அறுந்து கீழே விழுந்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    பஞ்ச்மகாலில் பவகவ் பாவகத் மலை மீது உள்ள கோயிலுக்கு இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சரக்குப் பொருட்களை ஏற்றிக்கொண்டு 6 பேர் ரோப் காரில் பயணித்துள்ளனர்.

    அப்போது, திடீரென கயிறு அறுந்ததில் ரோப்கார் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், தொழிலாளர்கள் மற்றும் லிப்ட்மேன்கள் உட்பட 6 பேர் இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்டுக்குழு 6 பேரின் உடல்களை மீட்டனர்.

    பஞ்சமஹால் கலெக்டர் இரண்டு லிப்ட்மேன்கள், இரண்டு தொழிலாளர்கள் மற்றும் இரண்டு பேர் உட்பட ஆறு பேர் இறந்ததை உறுதிப்படுத்தினார்.

    விபத்து குறித்து நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

    • பற்றி எறிந்த திரியில் சம்பவ இடத்திலேயே 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
    • அவர்களில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

    குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.

    இன்று மதியம், ஜோல்வா கிராமத்தில் உள்ள சந்தோஷ் டேஸ்டைல் மில் ஆலையில் ரசாயனங்கள் வைக்கப்பட்டிருந்த டிரம் வெடித்துச் சிதறியதால் தீவிபத்து ஏற்பட்டது.  2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர்.

    தகவலறிந்து வரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து, காயமடைந்த 20 தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர்களுக்கு சூரத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

    • அகமதாபாத் அருகே ஹன்சல்பூரில் மாருதி சுசுகி ஆலை அமைந்துள்ளது.
    • அடுத்த ஆண்டு இந்த SUV மின்சார வாகனம் சந்தியில் அறிமுகமாக உள்ளது.

    ரூ.5,477 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று குஜராத் மாநிலதிற்கு சென்றிருந்தார்.

    நேற்று மாலை, அகமதாபாத்தின் நரோடாவில் இருந்து நிகோல் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவர் பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார்.

    இந்நிலையில் இன்று அகமதாபாத் அருகே உள்ள ஹன்சல்பூரில் உள்ள மாருதி சுசுகி ஆலையில் e-Vitara எனப்படும் பேட்டரி மின்சார கார் உற்பத்தி யூனிட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி e-Vitara, ஜப்பான் உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு இந்த SUV மின்சார வாகனம் சந்தியில் அறிமுகமாக உள்ளது.  

    • நான் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற மந்திரத்தை பின்பற்ற வேண்டும்.
    • கடைகளுக்கு வெளியே இந்திய பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதாக ஒரு பெரிய பலகையை வைத்திருக்க வேண்டும்.

    பிரதமர் மோடி, அவரின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றுள்ளார். அங்கு பல்வெறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மோடிக்கு (தனக்கு) விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், சிறு தொழில்களின் நலன்தான் மிக முக்கியமானவை. அமெரிக்காவின் மிரட்டலால், நமக்கு அழுத்தம் அதிகரிக்கலாம். ஆனால், அனைத்தையும் நாம் தாங்கிக் கொள்வோம்.

    காங்கிரஸ் 60 முதல் 65 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்தது. அப்போது நாடு மற்ற நாடுகளை சார்ந்திருந்தது. இது ஊழலை இறக்குமதி செய்யவதற்காகத்தான்.

    நான் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற மந்திரத்தை பின்பற்ற வேண்டும். வணிகர்கள் தங்கள் கடைகளுக்கு வெளியே இந்திய பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதாக ஒரு பெரிய பலகையை வைத்திருக்க வேண்டும்.

    லட்சக்கணக்கான மக்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது எனது அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    ரஷியாவின் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தாவிடில், இந்தியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்டும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.

    • Snatch முறையில் 84 கிலோ தூக்கினார்.
    • clean and jerk முறையில் 109 கிலோ தூக்கினார்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த்த சாம்பியன்ஷிப்ஸ் போட்டியில் மீரா பாய் மொத்தமாக 193 கிலோ பளு தூக்கி தங்கம் வென்றார். ஸ்னட்ச் முறையில் 84 கிலோவும், க்ளீன் மற்றும் ஜெர்க் முறையில் 109 கிலோவும் தூக்கி காமன்வெல்த் சாம்பியன்ஷிப்ஸ் சாதனையும் படைத்தார்.

    இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவர் ஆவார். மலேசிய வீராங்கனை (161 கிலோ) வெள்ளி்ப் பதக்கமும், வேல்ஸ் வீராங்கனை (150 கிலோ) வெண்கல பதக்கமும் வென்றனர். 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்காமல் இருநது, 48 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு அசத்தியுள்ளார்.

    இவர் உலக சாம்பியன்ஷிப் டைட்டில் மற்றும் இரண்டு காமன்வெல்த் போட்டிகளில் பதக்கமும் வென்றுள்ளார்.

    • அனைத்து வகை இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்துள்ளார்.
    • டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு 3-வது வீரராக நீண்டகாலமாக விளையாடினார்.

    அகமதாபாத்:

    அனைத்து வகை இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்துள்ளார். இவர் இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர்

    ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும், 3-வது வீரராக நீண்டகாலமாக விளையாடினார். புஜாரா ஓய்வு குறித்து பலரும் ஆதரவும், எதிர்ப்புமாக தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் புஜாராவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக, பூபேந்திர படேல் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், குஜராத்தின் பெருமைக்குரிய செதேஷ்வர் புஜாராவின் ஒரு குறிப்பிடத்தக்க கிரிக்கெட் பயணம். உங்கள் அமைதியான இருப்பு, குறைபாடற்ற நுட்பம் மற்றும் அசைக்க முடியாத மன உறுதி - குறிப்பாக இந்தியாவின் வரலாற்று வெளிநாட்டு வெற்றிகளில் - தேசத்திற்கு போற்றுவதற்கு எண்ணற்ற தருணங்களை அளித்துள்ளன. ராஜ்கோட்டிலிருந்து உலக அரங்கம் வரை குஜராத்தின் கிரிக்கெட் உணர்வை நீங்கள் உண்மையிலேயே வெளிப்படுத்தி உள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து வெற்றி பெறவும், எதிர்காலத்திற்கு நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    • நரோடாவில் இருந்து நிகோல் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவர் பிரமாண்ட ரோடு ஷோ நடத்துகிறார்.
    • மோடி ரூ.133.42 கோடியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1,449 வீடுகள் மற்றும் 130 கடைகளை திறந்து வைக்கிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பீகாரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    இந்த நிலையில் அவர் தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு நாளை முதல் 2 நாள் பயணம் மேற்கொள்கிறார்.

    பிரதமர் மோடி நாளை மாலை குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்கிறார்.

    அங்குள்ள நரோடாவில் இருந்து நிகோல் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவர் பிரமாண்ட ரோடு ஷோ நடத்துகிறார்.

    இந்த ரோடு ஷோவில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று மாநில சுகாதார மந்திரியும், பாஜக செய்தி தொடர்பாளருமான ருஷ்கிலேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

    பின்னர் மோடி ரூ.133.42 கோடியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1,449 வீடுகள் மற்றும் 130 கடைகளை திறந்து வைக்கிறார்.

    மேலும் இந்த 2 நாள் பயணத்தில் அவர் ரூ.5,477 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். 

    • டூரிஸ்ட் விசா மூலம் கொல்கத்தாவிற்கு கடந்த ஜூலை மாதம் வந்துள்ளனர்.
    • கொல்கத்தாவில் இருநது ஆகஸ்ட் 2ஆம் தேதி அகமதாபாத்திற்கு வந்து நன்கொலை வசூலில் ஈடுபட்டுள்ளனர்.

    காசாவில் பட்டினியால் வாடும் மக்களுக்கு நிதி திரட்டுவதாக கூறி, மசூதிகளில் நன்கொடை பெற்று ஆடம்பர வாழ்க்கை நடத்திய சிரியா நாட்டைச் சேர்ந்தவரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். அவருடன் தங்கியிருந்த மற்ற நபர்களை பிடிக்க லுக்அவுட் நோட்டீஸ் வெளியீட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட சிரியாவைச் சேர்ந்த அலி மெகத் அல்-அசார் (23) உடன் மேலும் மூன்று பேர் சிரியா நாட்டில் இருந்து டூரிஸ்ட் விசா மூலம் கடந்த ஜூலை 22ஆம் தேதி கொல்கத்தா வந்துள்ளனர். அங்கிருநது ஆகஸ்ட் 2ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்துள்ளனர்.

    அகமதாபத்தில் ஒரு ஓட்டலில் நான்கு பேரும் தங்கியுள்ளனர். அவர்கள் நான்கு பேரும் அங்குள்ள மசூதிகளுக்கு சென்று நாங்கள் காசாவில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உதவுவதற்கான நன்கொடைழ வசூலிக்கிறோம். தங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு கேட்டுள்ளனர்.

    காசா மக்கள் வறுமையில் வாடும் போட்டோ மற்றும் வீடியோக்களை காட்டி வசூலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைக்க போலீசார் சோதனை செய்தபோது, அலி மெகத் அல்-அசார் மட்டும் போலீசாரிடம் மாட்டியுள்ளார். மற்றவர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் போலீசார் தேடிவருகின்றனர்.

    அல்-அசாரிடம் இருந்து போலீசார் 3600 அமெரிக்க டாலர் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் காசாவிற்கு எந்தவிதமான நிதியும் அனுப்பவில்லை. நன்கொடை பெற்ற பணத்தில் ஆடம்பர வாழ்க்கை நடத்தியுள்ளனர்.

    மேலும், அவர்கள் என்ன நோக்கத்திற்கான இந்தியா வந்துள்ளனர் என அகமதாபாத் கிரைம் பிராஞ்ச் போலீசார் குஜராத் பயங்கரவாத தடுப்புக் குழு மற்றும் என்ஐஏ உடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.25 கோடி மதிப்புள்ள வைரக்கற்கள் கொள்ளை போனது தெரிந்தது.
    • போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    சூரத்:

    குஜராத் மாநிலம் சூரத் நகரில் வைரங்கள் பட்டை தீட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்குள்ள ஒரு பிரபல பட்டை தீட்டும் ஆலை தொடர் விடுமுறை காரணமாக மூடப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று விடுமுறை முடிந்து அந்த ஆலையை திறந்தபோது அங்குள்ள லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.25 கோடி மதிப்புள்ள வைரக்கற்கள் கொள்ளை போனது தெரிந்தது.

    இதுகுறித்து உரிமையாளர்கள் போலீசுக்கு புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலுக்கு வலைவீசி உள்ளனர்.

    • வதோதரா மாவட்டத்தில் 40 வயதான பெண்ணுக்கு 2024 பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது.
    • செயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சி செய்யலாம் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளார்.

    குஜராத் மாநிலத்தில் மாமனாரே மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வதோதரா மாவட்டத்தில் 40 வயதான பெண்ணுக்கு 2024 பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. அப்பெண்ணுக்கு 40 வயது ஆகியுள்ளதால் கருவுறுதல் பிரச்சனை இருக்கலாம் என்பதற்காக அந்த தம்பதி மருத்துவரை அணுகியுள்ளனர்.

    அப்போது மருத்துவர்கள் அவரது கணவரின் விந்தணு எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதால் இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியாது என்றும் செயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சி செய்யலாம் என்று அறிவுரை கூறியுள்ளார்.

    அப்பெண்ணுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க விருப்பம் இல்லாததால் குழந்தையை தத்தெடுக்க விரும்பியுள்ளார். ஆனால் அதற்கு பெண்ணின் குடும்பம் சம்மதிக்கவில்லை.

    இந்நிலையில் 2024 ஜூலை மாதம் அப்பெண்ணை அவரது மாமனார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அவரது கணவரிடம் கூற, அவரோ எனக்கு குழந்தை வேண்டும், ஆதலால் இதை பற்றி நீ வெளியில் சொல்ல கூடாது. இதனை மீறினால் உன்னுடைய நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மனைவியை கணவன் மிரட்டியுள்ளார்.

    இதனையடுத்து மருமகளை பலமுறை மாமனார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஆனாலும் அப்பெண் கர்ப்பம் தரிக்கவில்லை.

    இதனால் 2024 டிசம்பர் மாதம் கணவரின் தங்கையினுடைய கணவர் குழந்தைக்காக அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். பல மாதங்கள் தொடர்ந்து அவர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததன் விளைவான இந்தாண்டு ஜுன் மாதம் அப்பெண் கருத்தரித்தார். ஆனால் சில வாரங்களில் அப்பெண்ணின் கரு கலைந்தது.

    இதனையடுத்து அப்பெண் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த 2001-ம் ஆண்டு அவருடைய மனைவி இறந்துவிட்டார்.
    • சிறுமி அமிஷா மீது அளவற்ற பாசம் வைத்த குஸ்டாத், சிறுமியின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்டார்.

    குஜராத்தை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர், தான் இறப்பதற்கு முன்பு தனது வீட்டு சமையல்கார பெண்ணின் பேத்திக்கு, சொகுசு பங்களாவை சொத்தாக எழுதிவைத்தார். 11 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சொத்து, இளம்பெண் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    ரத்த உறவை கடந்த பாசம் இன்றும் உயிர்ப்புடன் வாழ்கிறது என்பதற்கு உதாரணமாக நடந்த இந்த நிகழ்வு பற்றிய விவரம் வருமாறு:-

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் குஸ்டாத் போர்ஜோர்ஜி. என்ஜினீயரான இவர், டாடா நிறுவனத்தில் வேலை பார்த்தார். திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்த அவருக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 2001-ம் ஆண்டு அவருடைய மனைவி இறந்துவிட்டார்.

    அப்போது அவருடைய வீட்டில் சமையல் வேலைக்காக ஒரு பெண் இருந்தார். அவருடன் அவருடைய பேத்தியான அமிஷா மக்வானாவும் தங்கி இருந்தார்.

    சிறுமி அமிஷா மீது அளவற்ற பாசம் வைத்த குஸ்டாத், சிறுமியின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்டார்.

    என்ஜினீயர் குஸ்டாத் கடந்த 2014-ம் ஆண்டு தனது 89-வது வயதில் மரணம் அடைந்தார். அவர் தான் இறப்பதற்கு முன்பு, ஷாஹிபாக் நகரில் தனக்கு சொந்தமான ஒரு சொகுசு பங்களாவை அந்த சிறுமிக்கு உயிலாக எழுதி வைத்திருந்தார். அப்போது அமிஷா சிறுமியாக இருந்ததால் அவர் வளர்ந்ததும் அவருக்கு அந்த சொத்து கிடைக்கும் வகையில் அந்த உயில் இருந்தது.

    சிறுமி மேஜர் ஆகும்வரை அந்த சொத்துக்கு பாதுகாவலராக தனது மருமகன் பெஹ்ராமை நியமித்தார். அவரது இறப்புக்கு பின்னர் இந்த விவரங்கள் தெரிய வந்தது. பொதுவாக சொத்துகளை தனது ரத்த உறவுகளுக்கே உயிலாக எழுதி வைப்பார்கள். ஆனால் மனித நேயமிக்க குஸ்டாக், தனது பணியாளரின் பேத்தியாக இருந்தாலும், அந்த சிறுமியின் மீது அவர் கொண்ட பாசத்தால் அந்த உயிலை எழுதி வைத்திருந்தார்.

    சிறுமியாக இருந்த அமிஷா 18 வயதை கடந்ததும், கடந்த 2023-ம் ஆண்டு, தனது வக்கீல் அடில் சயீத் மூலம், உயிலின் மீதான உரிமை கோரி, அகமதாபாத் உரிமையியல் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    அதை ஏற்ற கோர்ட்டு, ஆட்சேபனை ஏதும் இருக்கிறதா என்பதற்காக பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. என்ஜினீயர் குஸ்டாக் குடும்பத்தை சேர்ந்த உறவினர்களிடம் இருந்து எந்த ஆட்சேபனையும் வரவில்லை. மேலும் குஸ்டாக்கின் தம்பியும் ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை அமிஷாவுக்கு ஆதரவாக வழங்கினார்.

    இதையடுத்து கடந்த 2-ந்தேதி, அமிஷாவுக்கு 2014-ம் ஆண்டு எழுதி வைக்கப்பட்ட உயில்படி சொத்து வழங்கப்பட்டது.

    இதுபற்றி அமிஷா மக்வானா கூறுகையில், என்ஜினீயர் குஸ்டாக் எனக்கு தாயும், தந்தையுமாக இருந்தார். என்னை தத்து எடுக்க விரும்பினார். ஆனால் மத நம்பிக்கையை பாதுகாப்பதற்காக அதை அவர் செய்யவில்லை.

    ரத்தன் டாடாவை எல்லா வகையிலும் பின்பற்றிய அவர், உயில் விவகாரத்திலும் அவரை பின்பற்றி ரத்த உறவு இல்லாத எனக்கு இந்த சொத்தை வழங்கியுள்ளார் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    • அடர்ந்த காட்டில் சிங்கம் அருகே சென்று செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர்.
    • திடீரென சிங்கம் அந்த வாலிபரை நோக்கி வந்ததால் அச்சம்.

    குஜராத் மாநிலம் பவ்நகரில் வாலிபர் ஒருவர், சிங்கம் அருகே சென்று சொல்போனில் வீடியோ எடுத்தபோது, சிங்கம் கர்ஜித்து அவரை நோக்கி சீறிப்பாய முயற்சித்த வீடியோ வெளியாகி, அந்த வாலிபர் நெட்டிசன்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

    குஜராத் மாநிலத்தில் உள்ள பவ்நகரில் உள்ள அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று, தன்னுடைய இரையை மகிழ்ச்சியாக சாப்பிட்டு பசியாற்றிக் கொண்டிருந்தது. அதை பார்த்த வாலிபர் ஒருவர் சிங்கத்தை அருகில் சென்று படம் பிடிக்க விரும்பினார்.

    சிங்கம் இரையை சாப்பிட்டு அமர்வதை, அந்த வாலிபர் அருகில் மெல்ல மெல்ல நடந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். திடீரென அந்த வாலிபர் சிங்கத்தின் பார்வையில் தென்பட்டார். என்னப்பா இவன் தொல்லை கொடுக்கிறானே, என்று எண்ணிய அந்த சிங்கம் திடீரென கர்ஜித்துக் கொண்டு அவரை நோக்கி வந்தது. ஆனால் அந்த நபர் பயந்து ஓடாமல் ஒவ்வொரு அடியாக பின்வாங்கி வீடியோ எடுத்துக் கொண்டே வந்தார்.

    சில அடிகள் முன்னேறி வந்த சிங்கம் என்ன நினைத்ததோ தெரியவில்லை, அப்படியே திரும்பியது. இதனால் அந்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். ஒருவேளை சீறிப் பாய்ந்திருந்தால் அந்த வாலிபர் நிலை என்னாயிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சம் ஏற்படுகிறது.

    அந்த வாலிபரின் செயலுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    ×