என் மலர்
குஜராத்
- இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் அகமதாபாத்தில் நடந்தது.
- இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அகமதாபாத்:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனால் டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. 104 ரன் மற்றும் 4 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில், உங்களது பார்ட்னர் அஸ்வினை மிஸ் செய்கிறீர்களா என்ற கேள்விக்கு ஜடேஜா கூறுகையில், டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் அஸ்வினை கண்டிப்பாக மிஸ் செய்கிறோம். பல ஆண்டாக இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். அவர் போட்டியை வென்று கொடுப்பவர். டெஸ்ட் போட்டிகளின்போது அஸ்வின் பந்து வீச வேண்டும் என தோன்றும். ஆனால் அவர் அணியில் இல்லை என்பதை உணர்வேன் என உருக்கமாகத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் என்னுடைய இடத்துக்கு வேறு ஒரு வீரர் வருவார். இது கண்டிப்பாக நடக்கும் என தெரிவித்தார்.
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
- வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 146 ரன்னுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது.
அகமதாபாத்:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது.
முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 162 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் கே.எல்.ராகுல், துருவ் ஜுரெல், ஜடேஜா ஆகியோர் சதமடித்து அசத்த 5 விக்கெட்டுக்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்னுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது. இதன்மூலம் இந்தியா டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. 104 ரன் மற்றும் 4 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில், டெஸ்ட் அரங்கில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தை டிராவிட் (163 போட்டிகளில் 11 முறை) உடன் பகிர்ந்து கொண்டார் ஜடேஜா (86 போட்டிகளில் 11 முறை).
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் சச்சின் (200 போட்டிகளில் 14 தடவை) உள்ளார்.
சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வீரர்களில் முதலிடம் பெற்றார் ஜடேஜா இவர் 50 போட்டிகளில் 10 தடவை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- இந்திய அணி சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
அகமதாபாத்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
அதன்படி இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர்.
இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 128 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 448 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா இதுவரை 286 ரன் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா அடித்த 5 சிக்சர்களின் மூலம் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் மாபெரும் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் மகேந்திர சிங் தோனி 78 சிக்சர்களுடன் 4-வது இடத்தில் இருந்தார். நேற்றைய போட்டியில் ஜடேஜா அடித்த 5 சிக்சர்களோடு 80 சிக்சர்களுடன் டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரிஷப் பண்ட் (90), சேவாக் (90), ரோகித் சர்மா (88) முதல் 3 இடங்களில் உள்ளனர்.
- குஜராத்தின் ரான் ஆஃப் கட்சுக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையில் உள்ள 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி சர் க்ரீக்.
- இது மீன்பிடி மற்றும் எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.
குஜராத்தின் ரான் ஆஃப் கட்சுக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையில் உள்ள 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி சர் க்ரீக் (Sir Creek) ஆகும்.
இது மீன்பிடி மற்றும் எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அணமைக் காலமாக பாகிஸ்தான் இந்தப் பகுதியில் ராணுவக் கட்டமைப்புகளை அதிகப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் சர் க்ரீக்பகுதியில் பாகிஸ்தான் எந்த வகையிலும் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றால், சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.
குஜராத்தின் பூஜ் விமானப்படை தளத்தில் வீரர்களுடன் தசரா கொண்டாட்டத்தில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், "சர் க்ரீக் பகுதியில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஏதேனும் தவறான முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அதற்கு வரலாறு மற்றும் புவியியலை மாற்றும் அளவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்.
இந்தப் பிரச்சினை குறித்துப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா பலமுறை முயன்றபோதும், பாகிஸ்தானின் ஒத்துழைக்கவில்லை.
1965 போரில் இந்திய இராணுவம் லாகூர் வரை சென்றது. இப்போது 2025-ல், கராச்சிக்கு செல்லும் ஒரு வழி இந்த க்ரீக் வழியாகவும் செல்கிறது என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூரின் அனைத்து இலக்குகளையும் இந்தியா வெற்றிகரமாக அடைந்ததாகவும், பாகிஸ்தானுடன் போரைத் தொடங்குவது இந்தியாவின் நோக்கம் அல்ல என்றும் அவர் கூறினார்.
- குஜராத்தின் கச் நகரில் பூஜ் பகுதியில் ராணுவ வீரர்கள் சார்பில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
- இதில் பங்கேற்ற பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் கச் நகரில் பூஜ் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சார்பில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.
அப்போது அவர், ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். அதன்பின் அவர்களிடையே பேசுகையில், இது புவியியல் அமைப்பு என்பது மட்டுமில்லாமல், உணர்வுபூர்வத்துடனான பூமி மற்றும் தைரியத்திற்கான பல தொடர் நிகழ்வுகளை கொண்டது. 1971-ம் ஆண்டு போரோ அல்லது 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரோ நம்முடைய வீரர்களின் துணிச்சலை இந்த கச் நகரின் எல்லைகள் கண்டன என தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கு பிறகு ராணுவ வீரர்கள் நடத்திய இரவு விருந்திலும் கலந்துகொண்டு அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் உணவு சாப்பிட்டார்.
இந்நிலையில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ராணுவ வீரர்களுடன் தசரா பண்டிகையை கொண்டாடுகிறார்.
- காட்டில் உள்ள ஒரு இந்து கோவில் முன் சிங்கம் ஓய்வு எடுக்கிறது.
- சிவன் கோவில் முன் நந்தி இருப்பதுபோல், அமைதியாக இருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் ஒரு இந்து கோவில் முன் நடு ராத்திரியில் சிங்கம் ஒன்று கோவிலுக்கு காவல் இருப்பது போன்ற வீடியோ வனத்துறை அதிகாரி (ஐபிஎஸ்) பிரவீன் காஸ்வான் பகிர்ந்துள்ளார். 27 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ பகிர்ந்து என்ன ஒரு தெய்வீக காட்சி. லயன் கோவிலுக்கு காவல் இருப்பது போல் தோன்றுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சில இது ஏ.ஐ. வீடியோவாக இருக்கலாம் என கருத்து தெரிவித்து்ளளனர்.
இந்த வீடியோ வனவிலங்குகளுக்கும் இப்பகுதியின் கலாச்சார மரபுகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்பைக் காட்டுகிறது என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றன. எப்படியோ நவராத்தி விழா காலத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
- காவல் ஆய்வாளர் வனராஜ் மஞ்சாரியாவை 5 நாட்களுக்கு முன்பு அவரது வளர்ப்பு நாய் கீறியுள்ளது.
- வனராஜ் மஞ்சாரியா தனது வளர்ப்பு நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தார்.
நாடு முழுவதும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து ரேபிஸ் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் வளர்ப்பு நாயின் நகம் கீறியதால் காவல் ஆய்வாளர் ஒருவர் ரேபிஸ் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் ஆய்வாளர் வனராஜ் மஞ்சாரியாவை 5 நாட்களுக்கு முன்பு அவரது வளர்ப்பு நாய் கீறியுள்ளது. ஆனால் நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருந்ததுடன், வெறும் நகக் கீறல்தானே என்று அவர் அலட்சியமாக இருந்துள்ளார். இதன் காரணமாக ரேபிஸ் நோய் பாதித்து அவர் உயிரிழந்துள்ளார்.
- மைத்துனி சூடான பாத்திரத்தை எடுத்து எனது வலது காலில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றினாள்.
- நான் கத்தினால், என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள்.
குஜராத்தில் நடத்தியில் சந்தேகப்பட்டு கணவன் வீட்டாரால் பெண் ஒருவர் கொடூரமான சித்ரவதைக்கு ஆளான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மெஹ்சானா மாவட்டத்தில் விஜப்பூர் பகுதியில் உள்ள கெரிடா கிராமத்தில் கணவன் மற்றும் 2 குழந்தைகளுடன் பாதிக்கப்பட்ட 28 வயதான பெண் வசித்து வந்தார்.
விவசாயத் தொழிலாளியாக வேலை செய்து வந்த அவர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், தனது மைத்துனி தனது நடத்தையில் சந்தேகித்து, தொடர்ந்து தன்னை இழிவாகப் பேசி துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 16 ஆம் தேதி, "மைத்துனியும் அவரது சகோதரர்களும் இணைந்து, தனது கற்பை பரிசோதிக்க தனது கையை பாத்திரத்தில் கொதிக்கும் எண்ணெய்யில் வைக்க கட்டப்படுத்தினர். நான் மறுத்ததால் என்னை அடித்து, எனது கை கொதிக்கும் எண்ணெயில் படும்படி அடுப்பை நோக்கித் தள்ளினார்கள்.
தனது அலறல் கேட்டும் சித்திரவதையை நிறுத்தாமல், மைத்துனி சூடான பாத்திரத்தை எடுத்து எனது வலது காலில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றினாள். நான் கத்தினால், என்னைக் கொன்றுவிடுவதாக அவள் மிரட்டினாள்" என்று தெரிவித்துள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு விரைந்து சென்று, அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பெண்ணின் புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ரூ.20க்கு 6 பானிபூரி தருவதாக கூறிய கடைக்காரர் கூறியுள்ளார்.
- கோபமடைந்த பெண் நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
குஜராத் மாநிலம் சுர்சாகர் லேக் பகுதியில் சாலையோர பானிபூரி கடை ஒன்றில் பெண் ஒருவர் பானிபூரி சாப்பிட்டுள்ளார்.
அப்போது ரூ.20க்கு 6 பானிபூரி தருவதாக கூறிய கடைக்காரர் 4 பானிபூரி மட்டுமே கொடுத்ததால் அப்பெண் அதிருப்தி அடைந்துள்ளார்.
பானிபூரி கொடுக்காததால் கோபமடைந்த பெண் நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் அப்பெண்ணை அப்புறப்படுத்தினர்.
- இந்தியா இன்று வேகமாக முன்னேறி வருகிறது.
- இந்தியாவில் ஆற்றலுக்கு பஞ்சமில்லை.
பாவ்நகர்:
பிரதமர் மோடி, குஜராத்தின் பாவ்நகரில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ரூ.34,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-
இந்தியா இன்று வேகமாக முன்னேறி வருகிறது. உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது மிகப்பெரிய எதிரி மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பது தான். வெளிநாட்டு சார்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு நாட்டின் தோல்வியும் அதிகமாகும். நாம் மற்றவர்களைச் சார்ந்து இருந்தால் நமது சுயமரியாதை பாதிக்கப்படும். 140 கோடி மக்களின் எதிர்காலத்தை மற்றவர்களிடம் விட்டுவிட முடியாது. நாட்டின் வளர்ச்சிக்கான தீர்மானத்தை மற்றவர்களைச் சார்ந்து இருக்க விட்டுவிட முடியாது. இந்த சார்பு எதிரியை நாம் ஒன்றாக தோற்கடிக்க வேண்டும். இதற்கு சுயசார்பு இந்தியாதான் ஒரே தீர்வாகும்.
இந்தியாவில் ஆற்றலுக்கு பஞ்சமில்லை. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியர்களின் அனைத்து ஆற்றலையும் காங்கிரஸ் புறக்கணித்தது. இதனால் சுதந்திரம் அடைந்து 6 முதல் 7 தசாப்தங்களுக்குப் பிறகும் இந்தியா அதற்கு தேவையான வெற்றியை அடையவில்லை. காங்கிரஸ் அரசின் கொள்கைகள் நாட்டின் இளைஞர்களுக்கு பெரும் தீங்கு விளைவித்தன.
இவ்வாறு அவர் பேசினார்.
- 20 ரூபாய்க்கு கடைக்காரர் 4 பானி பூரி வழங்கியதால் பெண் ஒருவர் விரக்தி.
- 6 வழங்க வேண்டும் என சாலையில் அமர்ந்து போராட்டம்.
வெற்றி ஊர்வலம், அரசியல் பேரணி போன்றவற்றால் சாலையில் போக்குவரத்து நெரிசல், தடை ஏற்படுவதை பார்த்திக்கிறோம். ஆனால், குஜராத் மாநிலம் வதோதராவில் இரண்டு பானி பூரிக்காக பெண் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுர்சாகர் லேக் பகுதியில், சாலையோர கடையில் பெண் ஒருவர் பானி பூரி சாப்பிட சென்றுள்ளார். அப்போது கடைக்காரரிடம் 20 ரூபாய் கொடுத்து பானி பூரி கேட்டுள்ளார். 20 ரூபாய்க்கு 6 பானி பூரி எனக் கடைக்காரர் கூறிவிட்டு, 4 பானி பூரிதான் கொடுத்ததாக தெரிகிறது.
ஆனால், அந்த பெண் தனக்கு கூடுதலாக 2 பானி பூரி வேண்டும் என அடம் பிடித்துள்ளார். ஆனால், கடைக்காரர் கொடுக்க மறுத்துவிட்டார். ஆனால், கடைக்காரரிடம் இருந்து மேலும் 2 பானிபூரி கிடைக்காதது அவரை சங்கடத்தில் ஆழ்த்தியது.
கடைக்காரரிடம் இருந்து தனக்கு நீதி வேண்டும் என நடுசாலையில அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. டூவிலர், காரில் சென்றவர்கள் வாகனத்தை நிறுத்தி விசாரிக்க தொடங்கினர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, அவர்கள் அந்த பெண்ணை நடுரோட்டில் இருந்து அப்புறப்படுத்தினர்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தும்போது, 20 ரூபாய்க்கு 6 பானிபூரி என்ற நியாயமான வர்த்தகத்தை அமல்படுத்த வேண்டும். அதைவிட ஒன்னுக்கூட குறையக்கூடாது" எனக் கண்ணீர் விட்டு தனது ஆதங்களை வெளிப்படுத்தினார்.
- மற்ற மொழியும் இந்தியும் இணைந்து செழிப்படையும் என்பதற்கு குஜராத்தி சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது
- தயாநந்த சரஸ்வதி, மகாத்மா காந்தி, வல்லபாய் படேல் ஆகியோர் இந்தியை ஏற்றுக்கொண்டு அதை உயர்த்தினர்.
இந்தி மற்ற இந்திய மொழிகளின் எதிரி அல்ல நண்பன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் இந்தி திவாஸ் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அமித் ஷா, இந்தி மற்ற இந்திய மொழிகளில் எதிரி கிடையாது என்று நான் எப்போதும் கூறுவேன்.
இந்தி மற்ற மொழிகளில் உற்ற நண்பன், அவற்றுக்கு இடையில் எந்த பிரச்சனையும் இருக்க இல்லை. இந்தி தேசிய ஒற்றுமையை மேம்படுத்துகிறது.
குஜராத்தை எடுத்துக்கொண்டால் இங்கு மாநில மொழி குஜராத்தி. ஆனால் தொடக்கம் முதல் தயாநந்த சரஸ்வதி, மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், கேஎம் முன்ஷி ஆகியோர் இந்தியை ஏற்றுக்கொண்டு அதை ஊக்குவித்தனர். இந்தி மற்றும் குஜராத்தி இணைந்திருக்கும் குஜராத், இரு மொழிகளின் வளர்ச்சிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
இந்தி வெறும் பேச்சு மொழி அல்ல. அது அறிவியல், தொழில்நுட்பம், நீதித்துறை மற்றும் காவல்துறை தொடர்பு மொழியாகவும் இருக்க வேண்டும். இவை அனைத்தும் இந்திய மொழிகளில் செய்யப்படும்போது, பொதுமக்களுடனான தொடர்பு தானாகவே வளரும்" என்றார்." என்று தெரிவித்தார்.






