என் மலர்
கிரிக்கெட் (Cricket)

குறைந்த பந்துகளில் அரைசதம்: அபிஷேக் சர்மா சாதனையை தகர்த்த ஹர்திக் பாண்ட்யா
- முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 231 ரன்கள் குவித்தது.
- திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அரை சதமடித்தனர்.
அகமதாபாத்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 231 ரன்கள் குவித்தது. திலக் வர்மா 73 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 63 ரன்னும் அடித்தனர்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஷ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா 30 ரன் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஹர்திக் பாண்ட்யா வெறும் 16 பந்தில் அரை சதம் விளாசினார்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற அபிஷேக் சர்மாவின் (17 பந்துகள்) சாதனையை பாண்ட்யா முறியடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் யுவராஜ் சிங் முதலிடத்தில் உள்ளார்.
யுவராஜ் சிங் - 12 பந்து
ஹர்திக் பாண்ட்யா - 16 பந்து
அபிஷேக் சர்மா - 17 பந்து






