என் மலர்tooltip icon

    குஜராத்

    • திருமண வயதில் பேரனை வைத்துக்கொண்டு தாத்தா திருமணம் செய்தால் அவமானம் என்று எடுத்துக்கூறி உள்ளனர்.
    • பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த மருமகளையும் மாமா ராம் போரிச்சா கொல்ல முற்பட்டார்.

    குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஜஸ்தான் பகுதியை சேர்ந்தவர் 76 வயதான ராம் போரிச்சா. இவரது 52 வயது மகன் பிரதாப், அவரது மனைவி ஜெயா, மகன் ஜெய்தீப் ஆகியோர் ஒரு வீட்டிலும், அவர்களது பக்கத்து வீட்டில் ராம் போரிச்சாவும் வசித்து வந்தனர். வெவ்வேறு வீடுகளில் வசித்தாலும், அவர்களின் தந்தைக்கான உணவு பிரதாப்பின் வீட்டிலிருந்தே சென்றது.

    ராம் போரிச்சாவின் மனைவி 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அன்றிலிருந்து தனியாக வசித்து வரும் ராம் போரிச்சா, மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

    இதை அவர் தனது மகன் பிரதாப்பிடம் கூறினார். ஆனால் மகனும் அவனது குடும்பமும் இதற்கு மறுத்துள்ளது. திருமண வயதில் பேரனை வைத்துக்கொண்டு தாத்தா திருமணம் செய்தால் அவமானம் என்று எடுத்துக்கூறி உள்ளனர்.

    இதனால் கோபமடைந்த ராம் போரிச்சா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக் கொடூரத்தைச் செய்தார். பிரதாப் தனது தந்தையிடம் சென்று தேநீர் குடிக்க வருமாறு அழைக்க சென்றார்.

    ஏற்கனவே துப்பாக்கியுடன் காத்திருந்த ராம் போரிச்சா, அறையை பூட்டிவிட்டு, இரண்டு முறை மகனை சுட்டார். துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தைக் கேட்ட மருமகள், மாமா ராம் போரிச்சா வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, தனது கணவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டார்.

    பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த மருமகளையும் மாமா ராம் போரிச்சா கொல்ல முற்பட்டார். இதை உணர்ந்த ஜெயா, உடனடியாக வெளியே ஓடி கதவைப் பூட்டினார். சிறிது நேரத்திற்குப் பிறகு, பால் வாங்க சென்றிருந்த மகன் ஜெய்தீப் திரும்பி வந்ததும் நடந்ததை கூறினார்.

    ஜெய்தீப் ஜன்னல் வழியாக தனது தாத்தா வீட்டிற்குள் எட்டிப் பார்த்தபோது, தனது தந்தை இரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் தாத்தா அருகில் அமர்ந்திருப்பதையும் கண்டான்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கதவுகளைத் திறந்து ராம் போரிச்சாவைக் கைது செய்தனர். பிரதாப்பின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. விசாரணையின் போது, தனது மகனைக் கொன்றதற்கு வருத்தப்படவில்லை என்றும், தனது மகன் பல நாட்களாக தன்னைத் துன்புறுத்தி வருவதாகவும் ராம் போரிச்சா தெரிவித்தார். 

    • சீதாதேவிக்கு ஒரு பிரமாண்ட கோவில் கட்ட வேண்டிய நேரம் இது.
    • வாழ்க்கை வரலாறு எல்லா வகையிலும் சிறந்ததாக இருக்க வேண்டும்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலின் போது நான் பீகார் சென்ற போது ராமர் கோவில் கட்டப்பட்டதாக கூறினேன். இப்போது சீதாதேவிக்கு ஒரு பிரமாண்ட கோவில் கட்ட வேண்டிய நேரம் இது. இந்த கோவில் முழு உலகிற்கும் பெண் சக்தியின் செய்தியையும், வாழ்க்கை வரலாறு எல்லா வகையிலும் சிறந்ததாக இருக்க வேண்டும் என்பதை தெரிவிக்கும் வகையில் இருக்கும்.

    குஜராத்தில் குடியேறிய மிதிலாஞ்சல் மற்றும் பீகாரை சேர்ந்த மக்கள் அதன் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் மாநிலத்தில் பாதுகாப்பாகவும், மரியாதையுடனும் இருக்கின்றனர்.

    • பெண் பிள்ளைகள் வீட்டிற்கு காலதாமதாக வரும்போது, பெற்றோர்கள் அவர்களிடம் கேள்வி கேட்கிறார்கள்.
    • ஆனால், ஆண் பிள்ளைகள் வீட்டிற்கு வரும்போது, பெற்றோர்கள் அதேபோன்று செய்வதில்லை.

    சர்வதேச மகளிர் தினமான இன்று குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி மாவட்டத்தின் வான்சி போர்சி கிராமத்தில் மிகப்பெரிய அளவில் கூடியிருந்த மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

    பாஜக தலைமையிலான எங்கள் அரசு பெண்களுகளுடைய பாதுகாப்பிற்கு முதன்மையான முன்னுரிமை கொடுக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கற்பழிப்பு போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    காலனித்துவ கால குற்றவியல் சட்டத்திற்கு (இந்திய தண்டனைச் சட்டம்- Indian Penal Code) பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது, இது பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக வழங்கப்படும் சட்ட நடைமுறைகளை வலுப்படுத்துகுிறத. எளிதான புகார் அளிக்கலாம். விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்.

    பெண் பிள்ளைகள் வீட்டிற்கு காலதாமதாக வரும்போது, பெற்றோர்கள் அவர்களிடம் கேள்வி கேட்கிறார்கள். ஆனால், ஆண் பிள்ளைகள் வீட்டிற்கு வரும்போது, பெற்றோர்கள் அதேபோன்று செய்வதில்லை. அவர்கள் ஆண்களிடமும் கேள்வி கேட்க வேண்டும்.

    நான் உலகின் மிகப்பெரிய செல்வந்தன். என்னுடைய கூற்று கேட்பவர்களில் சிலருக்கு ஒருவித கேள்வியை ஏற்படுத்தலாம். ஆனால் நான் மீண்டும் கூறுவேன் நான் உலகின் மிகப்பெரிய செல்வந்தன் என்று. பணத்தின் அடிப்படையில் அல்ல. மாறாக கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் ஆசீர்வாதங்களால். இந்த ஆசீர்வாதங்கள்தான் எனது மிகப்பெரிய பலம், மூலதனம் மற்றும் பாதுகாப்பு கேடயம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • காங்கிரஸ் கட்சி அதன் பொறுப்புகளை நிறைவேற்றும் வரை குஜராத் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள்.
    • இதனால் நம்முடைய பொறுப்புகளை நிறைவேற்றும் வரை எங்களுக்கு அதிகாரம் கொடுங்கள் என நாம் அவர்களிடம் கேட்கக் கூடாது.

    காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார்.

    2-வது நாளான இன்று கட்சி தொடர்களிடையே உரையாற்றினார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-

    குஜராத் காங்கிரசில் இரண்டு விதமான தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளனர். மக்களிடம் நேர்மையாக இருப்பவர்கள் அவர்களுக்காகப் போராடுபவர்கள், அவர்களை மதிக்கிறார்கள். காங்கிரசின் சித்தாந்தத்தை இதயத்தில் வைத்திருக்கிறார்கள்.

    மற்றவர்கள் மக்களிடமிருந்து வெகு தொலைவில் அமர்ந்திருக்கிறார்கள். மக்களவை அவர்கள் மதிக்கவில்லை, அவர்களில் பாதி பேர் பாஜகவுடன் இருக்கிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு பாஜக-வுக்கு பணியாற்றும் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை களைந்தெறிவது அவசியம். காங்கிரஸ் கட்சி அதன் பொறுப்புகளை நிறைவேற்றும் வரை குஜராத் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள். இதனால் நம்முடைய பொறுப்புகளை நிறைவேற்றும் வரை எங்களுக்கு அதிகாரம் கொடுங்கள் என நாம் அவர்களிடம் கேட்கக் கூடாது.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சூரத்தில் உணவுப் பாதுகாப்பு பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • மோடி மற்றும் அவரது மறைந்த தாயின் புகைப்படங்களை கையில் ஏந்தி இளைஞர் தேம்பித் தேம்பி அழுதார்.

    குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயின் புகைப்படங்களை கையில் ஏந்தி உணர்ச்சிவசப்பட்டு தேம்பித் தேம்பி அழுதார்.

    இதை பார்த்த மோடி, இளைஞரின் கையில் இருந்த புகைப்படத்தை வாங்கி கையெழுத்திட்டு, இளைஞருக்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    இதனையடுத்து, சூரத்தில் உணவுப் பாதுகாப்பு பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    • ஆனந்த அம்பானியின் வந்தாரா வனவிலங்கு மையத்தை பார்வையிட்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
    • வந்தராவில் உள்ள வன விலங்குகளுடன் பிரதமர் மோடி நேரம் செலவிட்டார்.

    மூன்று நாள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஆனந்த அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவைப் பார்வையிட்டு திறந்து வைத்தார்.

    2,000 க்கும் மேற்பட்ட உயிரினங்களுக்கும், 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட அழிந்து வரும் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளான விலங்குகளை மீட்டு வந்தாரா பாதுகாத்து வருகிறது.

    வந்தாரா அதிநவீன விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் ரிலையன்ஸ் ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகத்தில் 3000 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ளது

    வந்தராவில் உள்ள வன விலங்குகளுடன் பிரதமர் மோடி நேரம் செலவிட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், பிரதமர் மோடி, ஒராங்குட்டான்கள், ஆசிய சிங்கக் குட்டிகள், வெள்ளை சிங்கக் குட்டி உள்ளிட்ட விலங்குகளுடன் விளையாடி உணவு அளிக்கிறார்.

    • உத்தரபிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான டால்பின்கள் கண்டறியப்பட்டு உள்ளன.
    • டால்பின் வாழ்விடப் பகுதிகளில் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச்சென்று காட்ட பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    சாசன்:

    பிரதமர் மோடி நேற்று குஜராத்தின் கிர் வனவிலங்கு சரணாலய தலைமை அலுவலகத்தில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் 7-வது கூட்டத்தை நடத்தினார்.

    அதில் அவர் இந்திய நதிகளில் வாழும் டால்பின்கள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இந்தியாவின் நதிகளில் 6,327 டால்பின்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

    8 மாநிலங்களை சேர்ந்த 28 நதிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 8,500 கி.மீ. பகுதியில் இந்த ஆய்வு நடந்தது.

    இதில் உத்தரபிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான டால்பின்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அதைத்தொடர்ந்து பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களிலும் அதிக டால்பின்கள் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    உள்ளூர் மக்கள் மற்றும் கிராம மக்களின் ஈடுபாட்டுடன் டால்பின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், டால்பின் வாழ்விடப் பகுதிகளில் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச்சென்று காட்டவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    • கிர் தேசிய பூங்காவில் உள்ள சிங்கங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
    • பிரதமர் மோடி தன்னுடைய கேமராவில் சிங்கங்களை படம் பிடித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடி கிர் வனவிலங்கு சரணாலயத்தின் தலைமையகமான சாசனில் நடைபெறும் தேசிய வனவிலங்குகள் வாரிய கூட்டத்திற்கு தலைமை தாங்குவது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக குஜராத் வந்தடைந்தார்.

    இந்நிலையில், உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு கிர் தேசிய பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கிர் தேசிய பூங்காவில் உள்ள சிங்கங்களை பார்வையிட்ட பிரதமர், தன்னுடைய கேமராவில் சிங்கங்களை படம் பிடித்தார்.

    முன்னதாக பிரதமர் மோடி புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமான சோம்நாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பிரதமர் மோடி ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது

    • பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று குஜராத் வந்தடைந்தார்.
    • புகழ்பெற்ற சோம்நாத் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

    அகமதாபாத்:

    பிரதமர் நரேந்திர மோடி கிர் வனவிலங்கு சரணாலயத்தின் தலைமையகமான சாசனில் நடைபெறும் தேசிய வனவிலங்குகள் வாரிய கூட்டத்திற்கு தலைமை தாங்குவது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக நேற்று குஜராத் வந்தடைந்தார்.

    இந்நிலையில், ஜாம்நகரில் உள்ள வந்தாரா விலங்குகள் மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார்.

    வந்தாரா விலங்குகள் மையம் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 43 இனங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன.

    அதன்பின், பிரதமர் மோடி புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமான சோம்நாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

    பிரதமர் மோடி ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது

    • வீடியோ காட்சி பார்ப்போரை பதற வைக்கிறது.
    • சிறு காயங்களுடன் நபரை மீட்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்தியாவில் சாலைகளில் ஏற்படும் விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்கிறது. சாலையில் செல்லும் போது நாம் எவ்வளவு கவனமாக சென்றாலும் விபத்து நிகழ்வதாக பலரும் கூறுவதற்கு மோசமான சாலைகளே காரணம் என்று கூறப்படுகிறது.

    இதனிடையே, சாலைகளில் நெடுஞ்சாலைத்துறை பணிக்காக, குடிநீர் பணிக்காக, வடிகால் வசதிக்காக என்று ஒவ்வொரு துறை சேர்ந்த பணிகளும் நடைபெறும் போது சாலை மோசமாகி விடுகிறது. இவ்வாறு ஒவ்வொரு துறை பணிக்காக சாலையின் நடுவே தோண்டப்படும் குழிகளும் உடனடியாக சீரமைப்பதும் கிடையாது. இதனால் குழியில் விழுந்து உயிரிழப்பதும் நிகழ்கிறது.

    அதன்படி தான், குஜராத் மாநிலம் வதோதராவில் சாலையின் நடுவில் தோண்டப்பட்ட குழியில் நபர் ஒருவர் விழுவது தொடர்பான வீடியோ காட்சி பார்ப்போரை பதற வைக்கிறது.

    சாலையின் நடுவே தோண்டப்பட்ட குழியின் அருகே இருசக்கர வாகனத்தில் வரும் வாலிபர் நிலைதடுமாறி குழியில் விழுந்து விடுகிறார். உடனே அங்கிருந்தவர்கள் அந்த நபரை மீட்கின்றனர். சிறு காயங்களுடன் நபரை மீட்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 



    • 2024-25 ஆம் ஆண்டில் குஜராத்தின் கடன் ரூ.3,99,633 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஒவ்வொரு குஜராத்தியின் மீதும் ரூ.66,000 கடன் உள்ளது.

    குஜராத்தின் மொத்த பொதுக் கடன் 2023-24 நிதியாண்டில் ரூ.3.77 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்று அம்மாநில அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.

    மேலும் அம்மாநிலத்தின் மொத்த பொதுக் கடன் 2024-25 ஆம் ஆண்டில் அது ரூ.3,99,633 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2 நிதியாண்டுகளில், நிதி நிறுவனங்களிடம் இருந்து ₹10,463 கோடியை கடனாக பெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

    குஜராத்தின் மக்கள் தொகை 6 கோடியாக இருப்பதால், புதிதாகப் பிறந்த குழந்தை உட்பட ஒவ்வொரு குஜராத்தியின் மீதும் ₹66,000 கடன் உள்ளது என தரவுகள் மூலம் நிரூபனமாகிறது

    பாஜக தலைமையிலான குஜராத் அரசு பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவும், வளர்ச்சி என்ற பெயரில் கடனை அதிகரிப்பதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    • முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    வதோதரா:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது.

    தொடக்க வீராங்கனை கிரண் நவ்கிரே அதிரடியாக ஆடி 27 பந்தில் அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார். ஷ்வேதா ஷெராவத் 37 ரன்னும், சினெல் ஹென்ரி 33 ரன்னும் எடுத்தனர்.

    டெல்லி சார்பில் அன்னபெல் சதர்லேண்ட் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது. கேப்டன் மெக் லேனிங் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 69 ரன்னில் அவுட்டானார். ஷபாலி வர்மா 26 ரன்னில் வெளியேறினார்.

    அனபெல் சதர்லேண்ட்-மரிஜானே காப் ஜோடி பொறுப்புடன் ஆடியது.

    இறுதியில், டெல்லி அணி 19.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. சதர்லேண்ட் 41 ரன்னும், மரிஜானே 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    ×