search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SachinTendulkar"

    • கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ அண்மையில் வைரலானது
    • காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

    2 கைகளையும் இழந்த ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் ஹூசைனை இன்று சச்சின் டெண்டுல்கர் நேரில் சந்தித்து பேசினார்.

    கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ அண்மையில் வைரலானபோது, அவரைப் பாராட்டி X தளத்தில் பதிவிட்டிருந்தார் சச்சின்.

    பேட்டி ஒன்றில் சச்சினை சந்திக்க ஆசை என கூறியிருந்தார் அமீர். அதனை நிறைவேற்றும் விதமாக, காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன் வீட்டு பால்கனிக்கு காயமடைந்த நிலையில் வந்த பருந்தை பாதுகாத்து உணவளித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #SachinTendulkar
    மும்பை:

    இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் சச்சின் வீட்டு பால்கனியில் பருந்து ஒன்று அடிப்பட்ட நிலையில் வந்தது. காயமடைந்து இருந்ததால் அதனால் பறக்க முடியவில்லை. இதையடுத்து சச்சின் அந்த பருந்துக்கு உணவு அளித்து பத்திரமாக பார்த்துக்கொண்டார்.

    பின்னர் பருந்து குறித்து விலங்குகள் மீட்புக்குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் பறவையை மீட்டு கொண்டு சென்றனர். அந்த வீடியோவுடன் காயமடைந்த பறவைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மும்பையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்களுடன் சச்சின் கலந்தாலோசிக்கிறார். மேலும், இது போன்று விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என தனது ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    சச்சின் பதிவு செய்த இந்த வீடியோவை 54 ஆயிரம் மக்கள் கண்டு ரசித்துள்ளனர். ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். சச்சின் அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்குவதாக பலர் கூறினர். #SachinTendulkar

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சக்கரநாற்காலி கிரிக்கெட் அணிக்கு 4 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.#SachinTendulkar #wheelchaircricketteam
    புதுடெல்லி:

    இந்திய சக்கரநாற்காலி கிரிக்கெட் அணியின் தலைமை செயலாளர்  பிரதீப் ராஜ் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அணிக்கு 4 லட்சம் ரூபாய் பேட்டியளித்தாக தெரிவித்தார்.

    சக்கரநாற்காலி கிரிக்கெட் அணிக்கு  பொருளாதார ரீதியாக உதவி தேவைப்படுவதாக சச்சினுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சச்சின் டெண்டுகல்கரின் அலுவலக அதிகாரிகள் சில கேள்விகள் கேட்டனர். அடுத்த மூன்று நாட்களில் 4.39 லட்சம் ரூபாயை சச்சின் நன்கொடையாக வழங்கினார்.

    சச்சின் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த பிரதீப், ஆசிய கோப்பை போட்டியில் சக்கரநாற்காலி அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார். #SachinTendulkar  #wheelchaircricketteam

     
    ×