என் மலர்
நீங்கள் தேடியது "Para cricket"
- சிறு வயதிலேயே கிரிக்கேட் ஆர்வம் கொண்டு கடினமாக உழைக்க உறுதியாக இருந்துள்ளார்.
- பல முயற்சிக்குப் பிறகு அவர் கிரிக்கெட் பேட்டை பிடிக்கத் தொடங்கியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பாரா கிரிக்கெட் வீரர் அமீர் ஹுசைன், பிறப்பால் எல்லோர் போலவும் சாதாரணமாக பிறந்தவர். ஆனால் ஒரு விபத்து அவரை ஊனம் ஆக்கியது. அந்த விபத்தில் தனது இரு கைகளையும் இழந்த பின்னரும் ஊக்கத்துடன் கிரிக்கெட் விளையாடி, பாரா கிரிக்கெட் வீரர் கேப்டனாக திகழ்கிறார். அவரது வாழ்க்கை கதையை பார்க்கலாம்.
அமீர் 8 வயதாக இருந்தபோது அவரது குடும்பத்திற்கு சொந்தமான மரத்தூள் ஆலையில் தனது தந்தைக்கு மதிய உணவு கொடுக்க சென்றுள்ளார். அவரது தந்தையும், சகோதரரும் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத நேரத்தில் இயந்திரத்திற்குள் அவரது இரண்டு கைகளும் சிக்கி கொண்டன. அவரை இந்திய ராணுவ பிரிவு வந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளது.

அந்த விபத்திலிருந்து குணமடைய அவருக்கு 3 வருடம் ஆகியது. இரண்டு கைகளும் இழந்த பின்னர் பல தடைகளை தாண்டி தனது பாட்டியின் உதவியோடு கல்வியை தொடர்ந்துள்ளார். சிறு வயதிலேயே கிரிக்கேட் ஆர்வம் கொண்டு கடினமாக உழைக்க உறுதியாக இருந்துள்ளார். அவரது ஆர்வத்தை கண்டு அவரது கல்லூரி ஆசிரியர் அவருக்கு பாரா கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
பல முயற்சிக்குப் பிறகு அவர் கிரிக்கெட் பேட்டை பிடிக்கத் தொடங்கியுள்ளார். அதை கன்னத்திற்கும் கழுத்திற்கும் இடையில் வைத்து பேட்டிங் செய்து வருகிறார். தனது கால்களை பயன்படுத்தி தன்னால் முடிந்த வரை பந்தை அதிக தூரம் வீசிகிறார்.
தனது மன உறுதி மற்றும் பயற்சியின் காரணமாக 2013ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார்.
அமீர் ஜம்மு காஷ்மீர் பகுதியில் 100 பேருக்கு தன்னை போல இருக்கும் மாற்றுதிறனாளிக்கு விளையாட்டு பயற்சியாளராக இருந்து வருகிறார்.
இந்தியாவின் தேசிய கிரிக்கெட் அணிக்காகவும் விளையாட வேண்டும் என்று அமீர் விரும்புகிறார். அண்மையில் துபாய் பிரீமியர் லீக்கில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
- கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ அண்மையில் வைரலானது
- காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
2 கைகளையும் இழந்த ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் ஹூசைனை இன்று சச்சின் டெண்டுல்கர் நேரில் சந்தித்து பேசினார்.
கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ அண்மையில் வைரலானபோது, அவரைப் பாராட்டி X தளத்தில் பதிவிட்டிருந்தார் சச்சின்.
பேட்டி ஒன்றில் சச்சினை சந்திக்க ஆசை என கூறியிருந்தார் அமீர். அதனை நிறைவேற்றும் விதமாக, காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
To Amir, the real hero. Keep inspiring!
— Sachin Tendulkar (@sachin_rt) February 24, 2024
It was a pleasure meeting you. pic.twitter.com/oouk55lDkw






