என் மலர்
நீங்கள் தேடியது "Gujrat Titans"
- முதலில் ஆடிய டெல்லி அணி கே.எல்.ராகுல் சதத்தால் 199 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 60வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய டெல்லி அணி கே.எல்.ராகுல் அசத்தல் சதத்தால் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது.
அடுத்து ஆடிய குஜராத் அணி சாய் சுதர்சன், சுப்மன் கில் அதிரடி ஆட்டத்தால் விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
பிளே ஆப் சுற்றில் 4வது அணியாக இடம்பிடிப்பதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மும்முரமாக உள்ளன.
- குஜராத் அணி இதுவரை 6 போட்டியில் விளையாடி நான்கில் வெற்றி பெற்றுள்ளது.
- நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார்.
அகமதாபாத்:
குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரபாடா, கிளென் பிலிப்ஸ், ரூதர்போர்டு, பட்லர், கரிம் ஜனத், கோயட்சீ, ரஷித் கான் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய ரபாடா, சொந்த காரணத்திற்கான உடனடியாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார். அவர் எப்போது அணிக்கு திரும்புவார் எனக் கூறப்படவில்லை.
இதற்கிடையே, நியூசிலாந்தைச் சேர்ந்த கிளென் பிலிப்ஸ் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார் என்றும், தொடர் முழுவதும் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு முன்னணி வீரர்கள் விலகியது குஜராத் அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
குஜராத் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடம் வகிக்கிறது.
இந்நிலையில், காயம் காரணமாக விலகிய கிளென் பிலிப்சுக்கு பதிலாக இலங்கை அணியின் ஆல் ரவுண்டரான டாசன் ஷனகா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- தமிழக வீரர் ஷாருக் கானை 7.40 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது.
- சமீர் ரிஸ்வியை சென்னை அணி 8.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
துபாய்:
17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், தமிழக வீரர் ஷாருக் கானை 7.40 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது.
இந்தியாவின் ஷர்துல் தாக்குரை 4 கோடி ரூபாய்க்கும், சமீர் ரிஸ்வியை 8.40 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.






