என் மலர்
இந்தியா

குஜராத்தில் வருகிற 15ஆம் தேதி வரை பட்டாசு, டிரோன்களுக்கு தடை..!
- எல்லையோர மாநில பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த வாய்ப்பு.
- குஜராத், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுளளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநிலங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இன்று பிரதமர் மோடி பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநில முதல்வர்களை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
குஜராத் பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநிலங்களில் ஒன்று. இதனால் இந்த மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று இங்குள்ள நகரங்களிலும் மின்சாரம் (BlackOut) அணைக்கப்பட்டது.
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் எந்தவொரு நிகழ்ச்சியின்போதும் பட்டாசு வெடிக்கவும், டிரோன்கள் பறக்க விடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவுக்கு ஒத்துழைப்பு வழங்கி, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.
Next Story






