என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாதுகாப்புப்படையினர் அழித்தனர்.
    • பயங்கரவாதிகள் வாழ்ந்த இடங்களை மட்டுமே குறிவைத்தோம்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே மாதம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.

    பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாதுகாப்புப்படையினர் அழித்தனர். இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தயார் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் பேசியதாவது;-

    பாகிஸ்தான் ஏதேனும் கோழைத்தனமான செயலுக்கு முயன்றால் வலுவான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும். ஆயுதப்படைகள் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு முழுமையாக தயாராக இருக்கிறது.

    பயங்கரவாதிகள் வாழ்ந்த இடங்களை மட்டுமே குறிவைத்தோம். பொதுமக்கள் பகுதிகள் அல்லது ராணுவ நிலைகளை தாக்கவில்லை.

    நாங்கள் விரும்பியதை அடைந்தோம், நாங்கள் அவர்களைப் போன்றவர்கள் அல்ல என்பதை பாகிஸ்தானுக்குப் புரிய வைத்தோம். நாங்கள் தர்மயுத்தத்தை பின்பற்றுபவர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதித்து முதலமைச்சர் உறுதியான முடிவெடுப்பார்.
    • அ.தி.மு.க.வில் நடந்து கொண்டிருப்பது உட்கட்சி விவகாரம்.

    சென்னை தீவுத்திடல் அருகே மாரத்தான் ஓட்டப்போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணை முதல்வர் தொடங்கி வைத்த மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் பா.ஜ.க.விற்கு பாதகமான வாக்குகளை நீக்க முயற்சி நடக்கிறது.

    * பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக என்ன நடத்தப்பட்டது என்பது தெரியும்.

    * SIR-ஐ பயன்படுத்தி தமிழ்நாட்டில் எப்படியாவது வெல்ல வேண்டும் என பா.ஜ.க. நினைக்கிறது.

    * அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதித்து முதலமைச்சர் உறுதியான முடிவெடுப்பார்.

    * சென்னையில் தற்போது சாலைகள் செப்பனிடும் பணி நடந்து வருகிறது.

    * அ.தி.மு.க.வில் நடந்து கொண்டிருப்பது உட்கட்சி விவகாரம்.

    * அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக இ.பி.எஸ். இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணியின் 3 வடிவிலான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக இருந்துள்ளார்.
    • 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாக இருந்து, 105-107 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன். இவர் 2016-ம் ஆண்டு நியூசிலாந்து அணியின் 3 வடிவிலான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றார். மொத்தமாக, அவர் 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாக இருந்து, 105-107 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

    இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார். இருப்பினும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதுவரை 93 டி20 போட்டிகளில் ஆடியுள்ள கேன் வில்லியம்சன் 18 அரை சதத்துடன் 2,575 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 2014 ஆம் ஆண்டு முதல் பறக்கும் கார்களைப் பற்றி எலான் மஸ்க் பேசி வருகிறார்
    • பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன.

    பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் நெரிசல் அதிகரித்து பயணத்தை தாமதப்படுத்துகின்றன. அத்துடன் பயணத்தையும் சலிப்படைய செய்கிறது.

    எனவே, பயணத்தை எளிதாக்கும் வகையில் பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன.

    இந்நிலையில், 2025ம் ஆண்டு இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகம் செய்து டெமோ காட்ட உள்ளதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    மேலும், அந்த டெமோ நிகழ்ச்சி வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் எனவும் அவர் பேசியுள்ளார். 2014 ஆம் ஆண்டு முதல் பறக்கும் கார்களைப் பற்றி எலான் மஸ்க் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இந்த பதவியில் இருப்பார்.
    • கவாய் அடுத்த மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

    உச்சநீதிமன்ற 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14, 2025 முதல் பி.ஆர். கவாய் செயல்பட்டு வருகிறார். விதிகளின்படி, தலைமை நீதிபதி 65 வயதில் ஓய்வு பெற வேண்டும். அதன்படி கவாய் அடுத்த மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

    இந்நிலையில் பி.ஆர்.கவாயின் பரிந்துரையை ஏற்று சூரியகாந்தை புதிய தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார். 

    வரும் நவம்பர் 24ம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூரியகாந்த் பதவியேற்கிறார்.

    இந்நிலையில் நீதிபதி சூர்யகாந்தின் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின் படி, சூர்யகாந்த் மற்றும் அவரது மனைவியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.17 கோடி என தெரியவந்துள்ளது.

    நீதிபதி சூர்யகாந்த் அடுத்த தலைமை நீதிபதியாக 15 மாதங்கள் அந்தப் பதவியில் இருப்பார். அவரது பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9, 2027 அன்று முடிவடையும். 

    • 10 நாட்களில் உலகளவில் ரூ.55 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
    • அவர் சொன்ன விஷயம் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    மேலும் வசூல் குவித்து வருகிறது.படம் வெளியான 10 நாட்களில் உலகளவில் ரூ.55 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இதனிடையே, இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், "சிம்பு சார் என்னை தொலைபேசியில் அழைத்தார். அவர் சொன்ன விஷயம் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 'நாம் தொடர்ந்து வேலை செய்ய செய்ய நம்மை அறியாமலேயே அற்புதத்தை நிகழ்த்தக்கூடிய ஆளாக மாறிவிடுவோம்.

    அதன்பின், நாம் என்ன செய்தாலும் அது அற்புதத்தை நோக்கித்தான் நகரும். பைசனில் அந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது' என்று கூறினார் என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    • இப்படியே தொடர்ந்தால் மேலும் ஆறு வாரங்களில் 11 பில்லியன் டாலர்களையும் எட்டு வாரங்களில் 14 பில்லியன் டாலர்களையும் இழக்க நேரிடும்.
    • 1981 முதல் அமெரிக்க அரசாங்கத்தில் 15 முறை இதுபோன்ற பணிநிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

    அரசாங்கத்தை தொடர்ந்து செயல்பட வைப்பதற்கான பல நிதி மசோதாக்களில் செனட்டில் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் உடன்படாததால் அமெரிக்க அரசாங்கத்தின் பெரும் பகுதி கடந்த அக்டோபர் 1 முதல் மூடப்பட்டது.

    அக்டோபர் மாத இறுதி வரை அரசாங்க நிதியுதவி மற்றும் ஆண்டு இறுதியில் காலாவதியாகவுள்ள மத்திய சுகாதார மானியங்களை நீட்டிப்பது உள்ளிட்ட ஜனநாயகக் கட்சியினரால் முன்மொழியப்பட்ட மசோதாவைத் தடுக்க குடியரசுக் கட்சியினர் வாக்களித்தனர். இதன் காரணமாக அரசு துறைகளில் பணிகள் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 31 நாட்களாக தீர்வு எட்டப்படாமல் பணி நிறுத்தம் தொடர்ந்து வருகிறது. இந்த பணிநிறுத்தத்தால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 7 பில்லியன் டாலர்களுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் இதை மதிப்பிட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 62,149 கோடிக்கும் அதிகமாகும்.

    பணிநிறுத்தம் இப்படியே தொடர்ந்தால் மேலும் ஆறு வாரங்களில் 11 பில்லியன் டாலர்களையும் எட்டு வாரங்களில் 14 பில்லியன் டாலர்களையும் இழக்க நேரிடும் என பட்ஜெட் அலுவலகம் எச்சரித்துள்ளது.

    1981 முதல் அமெரிக்க அரசாங்கத்தில் 15 முறை இதுபோன்ற பணிநிறுத்தம் ஏற்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த சமயம் 2018-19 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 35 நாட்கள் பணிநிறுத்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

     காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம்(CBO) என்பது அமெரிக்க காங்கிரஸ்(பாராளுமன்றத்துக்கு) பட்ஜெட் மற்றும் பொருளாதாரம் தொடர்பான மதிப்பீடுகளை வழங்கும் கட்சி சார்பற்ற சுயாதீனமான கூட்டாட்சி நிறுவனம் ஆகும்.

    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வெளியேறுவது உறுதியாகிவிட்டது.
    • டெல்லி டேர்டெவில்ஸ் அணி அவரை Trade செய்யலாம் எனத் தகவல்.

    கேரளாவைச் சேர்ந்த இந்திய கிரிகெட் வீரரான சஞ்சு சாம்சன் நீண்ட காலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு அவருக்கும், தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

    இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேற இருப்பது ஏறக்குறைய உறுதியானது. ஆனால், எந்த அணிக்கு செல்வார் என்பதில் மர்மம் நீடித்து வந்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை வாங்க விரும்புவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் டெல்லி அணி அவரை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    டிரிஸ்டன ஸ்டப்ஸை ராஜஸ்தானுக்கு கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக சஞ்சு சாம்சனை டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் உலா வருகின்றன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சனை கொடுத்துவிட்டு, ஸ்டப்சை வாங்க சம்மதம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் Uncapped வீரர் ஒருவரையும் கேட்டுள்ளது. ஆனால், டெல்லி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

    "கேப்டன் மில்லர்" படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற கேங்ஸ்டர் படங்களை இயக்கி பெயர் பெற்றவர் லோகேஷ் கனகராஜ்.

    இவரது இயக்கத்தில் அடுத்த என்ன படம் வெளியாகும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாகவே லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் என கூறப்பட்டு வந்தது.

    இதற்கிடையே , இந்தப் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. "கேப்டன் மில்லர்" படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்ஸ்டர் படம் உருவாகிறது. இந்தப் படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 23 அன்று நடைபெற்றதாக தகவல் வெளியானது.

    இந்தப் படத்தில்தான் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்திற்காக அவர் சண்டை மற்றும் தற்காப்பு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதோடு இப்படத்திற்காக அவர் புது கெட்அப்பில் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

    படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்றும் ஜனவரி மாதத்திற்குள் முழு படப்பிடிப்பும் முடியும் என்றும் கூறப்படுகிறது.

    இந்த படத்தில் லோகேஷ்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி ஒப்பந்தம் ஆகி உள்ளார். இவர் 2016-ல் "மாலை நேரத்து மயக்கம்" என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

    இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்திற்கு "DC" என பெயரிடப்பட்டுள்ளது.

    • ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது.
    • செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வந்த சீர்திருத்த நடவடிக்கையால் பல்வேறு பொருட்களின் விலை குறைந்தது.

    புதுடெல்லி:

    ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 2017-ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அறிமுகமானது. அதன்பின் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி முந்தைய மாதத்தில் வசூலான வரித்தொகையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.

    ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. செப்டம்பர் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த இந்த சீர்த்திருத்த நடவடிக்கையால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்தது. இதனால் மின்னணு சாதனங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டது.

    இந்நிலையில், அக்டோபர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி ரூ.1,95,936 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வசூலான தொகையை விட 9 சதவீதம் அதிகம். தொடர்ச்சியாக கடந்த 10 மாதமாக ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி வருகிறது என தெரிவித்துள்ளது.

    • வெள்ளிக்கிழமை 3 உடல்களை ஹமாஸ் அமைப்பினர் அனுப்பி வைத்துள்ளனர்.
    • அவைகள் பிணைக்கைதிகளின் உடல்கள் அல்ல என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். அப்போது பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் எடுத்துச் சென்றது.

    இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலில் 1200 பேர் உயிரிழந்த நிலையில், காசாவில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில்தான் கடந்த மாதம் இஸ்ரேல்- காசா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் உயிரோடு உள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும். பிணைக்கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்க வேண்டும். அதற்கு இணையாக இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். உயிரிழந்த பாலஸ்தீனர்களை ஒப்படைக்க வேண்டும்.

    கடந்த வெள்ளிக்கிழமை 30 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் காசாவுக்கு அனுப்பி வைத்தது. அத்துடன் பிணைக்கைதிகள் விடுவிப்பு- பாலஸ்தீன கைதிகள் விடுதலை ஒப்பந்தம் நிறைவுக்கு வந்தது. ஆனால் ஹமாஸ் இன்னும் அனைத்து உடல்களையும் ஒப்படைக்கவில்லை என இஸ்ரேல் கூறுகிறது.

    இதனால் மேற்கொண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுவது குறித்து பதற்றமான நிலைதான் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்றிரவு மூன்று உடல்களை இஸ்ரேலுக்கு காசா அனுப்பி வைத்துள்ளது. இஸ்ரேல் உடல்களை ஆய்வு செய்து வருகிறது. அந்த உடல்கள் 2023, அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டபோது இறந்தவர்களின் உடல்கள் அல்ல என இஸ்ரேல் புலனாய்வுத்துறை கூறியதாக, ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெயர் தெரிவிக்க விரும்பாத ராணுவ அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகமும், மூன்று உடல்களும் எந்தவொரு பிணைக்கைதிகள் உடையது அல்ல. ஆனால், விரிவான அறிக்கை ஏதும் கொடுக்கப்படவில்லை.

    அதேவேளையில் ஹமாஸ் ஆயுதப்படை பிரிவு "நாங்கள் உடல்களின் மாதிரிகளை ஒப்படைக்க முன்வந்ததாகவும், ஆனால் இஸ்ரேல் அதை மறுத்துவிட்டு, பரிசோதனைக்காக உடல்களை கேட்டதாகவும். இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளை நிறுத்துவதற்கான உடல்களை ஒப்படைத்தோம்" என தெரிவித்துள்ளது. அந்த உடல்கள் யாருடைய உடல்கள் எனத் தெரியவில்லை.

    ஒப்பந்தத்தின்படி 11 உடல்களை இஸ்ரேல் பெற்றுள்ளது. ஆனால் 17 உடல்களை ஒப்படைப்பதாக ஹமாஸ் தெரிவித்திருந்தது. ஒருசில நாட்கள் இடைவெளி விட்டுவிட்டு ஒன்று அல்லது இரண்டு உடல்களை என ஹமாஸ் உடல்களை ஒப்படைத்து வருகிறது.

    இஸ்ரேல் 225 உடல்களை ஒப்படைத்துள்ளது. இதில் 75 உடல்கள் மட்டுமே உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

    • அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.
    • மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு.

    நவம்பர் 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.

    அதன்படி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நவம்பர் 5ம் தேதி காலை 10.30 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.

    மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ×