மறுமணம் குறித்து மனம் திறந்த நடிகர் பார்த்திபன்!

கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் 2004ல் விவாகரத்து பெற்றனர்.
மறுமணம் குறித்து மனம் திறந்த நடிகர் பார்த்திபன்!
Published on

புதிய பாதை மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்து இயக்குனராகவும் நடிகராகவும் தனக்கென தனி வழி அமைத்தவர் பார்த்திபன்.

புதியபாதை படத்தின் போது காதலித்து நடிகை சீதாவும் பார்த்திபனும் காதலித்து 1990ல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என இரண்டு மகள்களும், ராதாகிருஷ்ணன் என்ற வளர்ப்பு மகனும் உள்ளனர்.

கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் 2004ல் விவாகரத்து பெற்றனர். அதுமுதல் பார்த்திபன் மறுமணம் செய்யாமல் தனியாகவே வாழந்து வருகிறார்.

பார்த்திபனின் இரு மகள்களுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்த நிலையில் தற்போது மகன் ராதா கிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பார்த்திபன், மகன் திருமணம் முடிந்த பிறகு தானும் திருமணம் செய்ய போவதாக தெரிவித்தார். இது வைரலான நிலையில் இதுகுறித்து பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது, "வாழ்வில் திருமணம் ஒருமுறை தான். மனைவி என்கிற ஸ்தானமும் ஒருவருக்கு தான். அதில் எப்போதும் தீர்மானமாக இருக்கிறேன். மனமாற்றம் ஏற்படுகிற அளவுக்கு புதிதாக ஒன்றும் நிகழவில்லை.

என் இரண்டு பெண்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. எனக்கும் என் பையனுக்கு தான் இன்னும் ஆகல என ஜாலியாக, காமெடியாக சொன்ன விஷயம் அது. 

நிஜ வாழ்க்கையில் அப்படி சொல்லவில்லை. இந்த செய்தி வெறும் ரசிப்புக்காக மட்டுமே" என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com