என் மலர்
ஆசிரியர் தேர்வு
- கடந்த மாதம் ரூ.1,754.50-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
- வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சென்னை:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.
அந்த வகையில், நவம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 4 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ.1,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.1,754.50-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.
- வழக்கமாக வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்க வேண்டிய நவம்பர் மாதத் தொடக்கத்தில் வெப்பம் அதிகரித்துள்ளது.
- இது முந்தைய காலங்களில் இல்லாத சாதனை அளவாகும்.
வழக்கமாக வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்க வேண்டிய நவம்பர் மாதத் தொடக்கத்திலேயே, தமிழ்நாட்டில் வெப்பநிலை நேர்மாராக உயர்ந்து காணப்படுகிறது.
காற்றின் திசையில் ஏற்பட்ட மாற்றமே இந்த அதிக வெப்பத்திற்குக் காரணம் எனத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இன்று, சென்னையில் அதிகபட்சமாக 35.5 செல்ஸியஸ் வெப்பம் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய காலங்களில் நவம்பர் 1 அன்று இல்லாத இல்லாத சாதனை அளவாகும்.
வெப்பநிலை உயர்ந்தபோதிலும் மழைக்காக அறிகுறிகளையும் வெதர்மேன் கணித்துள்ளார்.
அதன்படி, வருகின்ற நவம்பர் 3 முதல் 6 ஆம் தேதி வரை மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னை உட்படத் தமிழ்நாட்டில் பல இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யுமாம்.
மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பமான வானிலை காரணமாக நிகழும் அரிதான வெப்பச்சலன இடிமழை ஆக அது இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
- விர்ஜீனியா கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்துகொண்டார்.
- ஆண்ட்ரூ தன்னை பலமுறை துன்புறுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது இளைய சகோதரர் ஆண்ட்ரூ உடைய இளவரசர் பட்டத்தைப் பறித்து, அவரை கோட்டையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார்.
லண்டன் மேற்கில் உள்ள விண்ட்ஸர் கோட்டையில் ஆண்ட்ரூ அவர் வசித்து வரும் மாளிகையை காலி செய்ய மன்னர் உத்தரவித்தகக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. மரபுப்படி அவரின் இளவரசர் பட்டத்தை பறிப்பதற்கான செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது.
பாலியல் வலையமைப்பை உருவாக்கி சிறுமிகளை கடத்தி பெரும் புள்ளிகளுக்கு அனுப்பி வைத்த அமெரிக்க பெரும்புள்ளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் ஆண்ட்ரூவுக்கு இருந்த தொடர்பு சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது.
இளமைப் பருவத்தில் இளவரசர் ஆண்ட்ரூவால் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அமெரிக்க-ஆஸ்திரேலிய வழக்கறிஞர் விர்ஜீனியா கியுஃப்ரேவின் குற்றச்சாட்டுக்கு மூலம் எப்ஸ்டீன் உடனான ஆண்ட்ரூவின் தொடர்வு அம்பலமானது.
விர்ஜீனியா கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்துகொண்ட பிறகு வெளியான அவரது Nobody's Girl என்ற நினைவுக் குறிப்பில், ஆண்ட்ரூ தன்னை பலமுறை துன்புறுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த களங்கத்தின் காரணமாகவே மன்னர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இது நீண்ட மாதங்களாக நடந்த விசாரணைக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவாகும்.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், ஆண்ட்ரூ உடைய "டியூக் ஆஃப் யார்க்" பட்டத்தை தானாக முன்வந்து ஆண்ட்ரூ துறந்தார். தற்போது, அவரது மற்ற பட்டங்களையும் சார்லஸ் மன்னர் பறித்துள்ளார்.
தற்போது கோட்டையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆண்ட்ரூ கிழக்கு இங்கிலாந்தில் உள்ள மற்றொரு இடத்தில் வசிக்க உள்ளதாக என்று கூறப்படுகிறது.
யார் இந்த எப்ஸ்டீன்?
ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நிதியாளர். பெரும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டித் தரும் பணியில் ஈடுபட்டு, பல பணக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.
2000-களின் முற்பகுதியிலிருந்து, எப்ஸ்டீன் மீது இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அவருக்குச் சொந்தமான 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' என்ற கரீபியன் தீவில், பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை அழைத்து வந்து, அங்கு பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகின.
2008-ல் எப்ஸ்டீனுக்கு மிகக் குறுகிய காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2019-ல் மேலும் கடுமையான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் சிறையில் மர்மமான முறையில் இறந்துபோனார். அவரது மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இன்று வரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-பும் முந்தைய காலங்களில் எப்ஸ்டீன் உடன் நெருக்கமாக இருந்ததும் தற்போது சர்ச்சையாவது குறிப்பிடத்தக்கது.
- பங்களாவின் கழிவறையில் தங்க முலாம் பூசப்பட்ட மலத்தொட்டிகள் இருப்பதாவதும் பாஜக மேடை தோறும் பிரசாரம் செய்தது.
- பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியை தோற்கடித்து பாஜக வெற்றி பெற்றது.
அரவிந்த் கேஜிரிவால் தனது அரசு பங்களாவை புதுப்பிக்கப் பொதுப் பணத்தில் இருந்து ரூ.45 கோடி செலவு செய்து சொகுசு பங்களாவாக மாற்றியதாகவும், அந்த பங்களாவின் கழிவறையில் தங்க முலாம் பூசப்பட்ட மலத்தொட்டிகள் இருப்பதாவதும் பாஜக மேடை தோறும் பிரசாரம் செய்தது.
இந்நிலையில் பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ள நிலையில் அதன் தலைநகர் சண்டிகரில் அரவிந்த் கெஜ்ரிவால் சொந்த பயன்பாட்டுக்கு 7 நட்சத்திர சொகுசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது.
பாஜக தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பஞ்சாப் அரசின் பொது நிதியை தனது தனிப்பட்ட ஆடம்பரத் தேவைகளுக்காக கெஜ்ரிவால் தவறாகப் பயன்படுத்துவதாகவும், சண்டிகரில் அவரின் சொந்த பயன்பாட்டுக்கு 2 ஏக்கரில் அமைந்துள்ள அரசின் 7 நட்சத்திர சொகுசு பங்களாவை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பங்களா என்று கூறப்படும் கட்டிடத்தின் படங்களை பாஜக வெளியிட்டுள்ளது.
பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
- மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி படத்தில் தோன்றியிருந்தார்.
- “AARAV STUDIOS”-இன் துவக்கத்தை பணிவுடன் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
பிக் பாஸ் மூலம் புகழ்பெற்று கதயநாயகனாக உருவெடுத்த ஆரவ் கடைசியாக மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி படத்தில் தோன்றியிருந்தார். முன்னதாக மார்க்கெட் ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதாக ஆரவ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும், எனக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கியதோடு, இந்த அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாகவும் மாற்றியுள்ளது.
இப்போது அந்த பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில், எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான "AARAV STUDIOS"-இன் துவக்கத்தை பணிவுடன் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.

AARAV STUDIOS என்பது கதை சொல்லும் கலையின்மீது உள்ள தீவிரமான ஆர்வத்திலிருந்தும், ஆழமான அன்பிலிருந்தும் உருவானது. விஷுவல் மற்றும் கிரியேட்டிவ் உலகில், இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகளை உருவாக்கும் நோக்குடன், இந்த நிறுவனம் உருவாகியுள்ளது.
கடவுளின் அருளும், திரைப்பட ரசிகர்களின் அன்பும் துணையாக, இதயங்களைத் தொடும் சிறந்த படங்களை தொடர்ந்து உருவாக்கும் நம்பிக்கையுடன், நன்றியுடன், எங்களின் இந்த சினிமா பயணத்தை பெருமையுடன் தொடங்குகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது.
- இன்று நடந்த இறுதிச்சுற்றில் புனேரி பல்தான் தோல்வி அடைந்தது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்ற 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடைபெற்றது. லீக் போட்டிகள் மற்றும் பிளே ஆப் சுற்றுகள் முடிந்த நிலையில் தபாங் டெல்லி, புனேரி பல்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இன்று நடந்த இறுதிப்போட்டியில் தபாங் டெல்லி அணியும், புனேரி பல்தான் அணியும் மோதின.
ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் அதிரடியாக ஆடி புள்ளிகளை எடுத்தன. முதல் பாதி முடிவில் டெல்லி அணி 20-14 என முன்னிலை பெற்றது.
இறுதியில், தபாங் டெல்லி அணி 31-28 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.
- திமுக தலைவர்கள் பீகார் மக்களை அவமானப்படுத்தி பேசியதைத்தான், பிரதமர் மோடி பீகாரில் எடுத்து பேசினார்.
- பதவிலாம் வெங்காயம் மாதிரி. உரிச்சா ஒன்னுமே இருக்காது.
கோவையில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அமித்ஷாவும், மோடியும் தூய அரசியலை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடுதான் வேலையை விட்டுவிட்டு வந்து பாஜகவில் பயணம் செய்கிறேன். புடிச்சிருந்தா இருக்கப் போறேன். இல்லைனா கிளம்பப் போறேன்.
பதவிலாம் வெங்காயம் மாதிரி. உரிச்சா ஒன்னுமே இருக்காது. மகாத்மா காந்தி என்ன பதவியில் இருந்தார்?
சில நேரங்களில் தலைவர்களின் பேச்சைக் கேட்டு, சபை நாகரித்திற்காக எனது மனசாட்சிக்கு எதிராகக்கூட பேச வேண்டிய சூழல் வருகிறது. மனசு ஒன்னு சொல்லுது. வாய் ஒன்னு சொல்லுது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்த விடமாட்டோம் என தமிழக அமைச்சர்கள் யாரேனும் சொன்னால் அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு தான் செல்ல வேண்டும். திமுக தலைவர்கள் பீகார் மக்களை அவமானப்படுத்தி பேசியதைத்தான், பிரதமர் மோடி பீகாரில் எடுத்து பேசினார்.
பிரதமர் மோடி தமிழக மக்களைப் பற்றி தவறாக கூறிவிட்டதாக முதல்வர் கூறுகிறார். முன்னதாக தயாநிதி மாறன், டிஆர்பி ராஜா, பொன்முடி, ஆ.ராசா போன்றவர்கள் பீகார் மக்களை அவமானப்படுத்தினார்கள்.
பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், தினகரன், செங்கோட்டையன் ஒருங்கிணைந்ததற்கு நான் காரணமில்லை. தனிக்கட்சி எல்லாம் தொடங்கி என்னால் நடத்த முடியுமா? என் உயரம் எனக்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசியல் காரணங்களால் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்ய சமாஜத்தின் பங்கிற்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.
- இன்று உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பெண் பட்டதாரிகளைக் கொண்ட நாடு இந்தியா என்றார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் நடந்த சர்வதேச ஆர்ய மகா சம்மேளனம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாளையும், ஆர்ய சமாஜத்தின் சமூக சேவையின் 150 ஆண்டுகளையும் நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாளையும், சமூகத்திற்கு ஆர்ய சமாஜம் ஆற்றிய 150 ஆண்டுகால சேவையையும் குறிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
சுவாமி தயானந்த சரஸ்வதியின் பாதங்களில் வணங்கி அவருக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்துகிறேன். அவரது 200-வது பிறந்தநாள் விழாவைத் தொடங்கி வைக்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது.
இன்று உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பெண் பட்டதாரிகளைக் கொண்ட நாடு இந்தியா என்று நாம் பெருமையுடன் கூறலாம்.
துரதிர்ஷ்டவசமாக அரசியல் காரணங்களால் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்ய சமாஜத்தின் பங்கிற்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. ஆர்ய சமாஜம் தேசபக்தர்களின் அமைப்பாக இருந்து வருகிறது.
இந்தியா முன்னேற வேண்டுமானால் நமது சமூகங்கள் இடையே உள்ள அடிமைத்தனத்தை அகற்ற வேண்டும் என்பதை சுவாமி தயானந்த சரஸ்வதி அறிந்திருந்தார். எனவே, அவர் ஜாதி, தீண்டாமை மற்றும் பாகுபாட்டைக் கண்டித்தார் என தெரிவித்தார்.
- ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் மதுரையில் சசிகலாவை சந்தித்தனர்.
- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் சேர்ந்து ஒன்றாக பங்கேற்று, தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் அங்கு சசிகலாவையும் சந்தித்தனர்
இதற்கிடையே, செங்கோட்டையன் மீது நடவடிக்கை பாயுமா என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டதற்கு, அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும் தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்கா விட்டால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். அவரிட ம் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என தெரிவித்துள்ளது.
- ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.
- பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
பாட்னா:
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 243 தொகுதிகள் கொண்ட சட்ட சபைக்கு இரு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி 121 தொகுதிகளுக்கு நடக்கிறது.
லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. எனப்படும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையில் எதிர்க்கட்சிகளின், மகாகட்பந்தன் கூட்டணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது. முதல் மந்திரி நிதிஷ்குமார், பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் வெளியிட்டனர். அதன் விபரம் பின்வருமாறு:
ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு நிதி உதவி ரூ.6,000ல் இருந்து ரூ.9,000ஆக உயர்த்தப்படும்.
பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவு வழங்கப்படும்.
பீகாரில் மேலும் 4 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்படும்.
இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐஐடியும் அமைக்கப்படும்.
பீகாரில் பத்து புதிய தொழில் பூங்காக்கள் திறக்கப்படும்.
பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.10 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
புதிய வீடுகள், இலவச ரேஷன், 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
- தங்கத்தின் முதலீட்டு தேவை வலுவாக இருந்துள்ளது.
- பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால் முதலீட்டு வாங்குதல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த நிதியாண்டின் 2-ம் காலாண்டில் தங்கத்தின் தேவை 16 சதவீதம் குறைந்துள்ளது. தங்கம் விலை வரலாற்று உச்சத்தைத் தொட்டதால் நுகர்வோரின் வாங்கும் ஆர்வம் மந்தமானது.
அதன் தரவுகளின்படி, 2-ம் காலாண்டில் தங்கத்தின் மொத்த தேவை கடந்தாண்டின் 248.3 டன்னிலிருந்து 209.4 டன்களுக்கு குறைந்தது. இது 16 சதவீதம் குறைவாகும். ஆனால், விலை அடிப்படையில் தேவையின் மதிப்பு 23 சதவீதம் உயர்ந்து ரூ.2,03,240 கோடியாக உயர்ந்தது (கடந்த ஆண்டு ரூ.1,65,380 கோடி). உலகின் 2-வது பெரிய தங்க நுகர்வோர் சந்தையாக உள்ள இந்தியாவில் தங்க நகை தேவை 31 சதவீதம் குறைந்து 171.6 டன்னிலிருந்து 117.7 டன்களாக வீழ்ந்தது. எனினும், நகை வாங்குதலின் மதிப்பு சுமார் ரூ.1,14,270 கோடியில் நிலைத்திருந்தது. ஏனென்றால் வாங்குபவர்கள் உயர்ந்த விலைக்கு வாங்கவும் தங்களை தயார்படுத்தி கொண்டனர்.
மாறாக, தங்கத்தின் முதலீட்டு தேவை வலுவாக இருந்துள்ளது. தங்கத்தின் மீதான முதலீடு 20 சதவீதம் அதிகரித்து 91.6 டன்களாகவும், மதிப்பில் 74 சதவீதம் உயர்ந்து ரூ.51,080 கோடியில் இருந்து ரூ.88,970 கோடியாகவும் உயர்ந்ததாக உலக தங்க கவுன்சில் தெரிவித்தது. பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால் முதலீட்டு வாங்குதல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க இறக்குமதி 37 சதவீதம் குறைந்து 308.2 டனிலிருந்து 194.6 டன்களாகவும், மறுசுழற்சி 7 சதவீதம் குறைந்து 21.8 டன்களாகவும் சரிந்தது. மொத்தமாக, 2025-இல் தங்க தேவையை 600-700 டன் என மதிப்பிடப்படுகிறது. முதல் 9 மாதங்களில் தேவை 462.4 டனாக இருந்தது. உலகளவில் இதற்கு எதிராக, 2-ம் காலாண்டில் தங்க தேவை 1,313 டனாக உயர்ந்தது. இதுவே இதுவரை பதிவான மிக உயர்ந்த அளவாகும்.
- நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன்.
- கடவுள் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் கொடுப்பார்.
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்களுடனும் (134 பந்து, 14 பவுண்டரி), அமன்ஜோத் கவுர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். எக்ஸ்டிரா வகையில் 15 வைடு உள்பட 26 ரன்கள் கிடைத்தது.
மகளிர் ஒரு நாள் போட்டி வரலாற்றில் ஒரு அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு (சேசிங்) இது தான். இதற்கு முன்பு இதே உலகக் கோப்பையில் இந்தியாவுக்குஎதிரான லீக்கில் 331 ரன் இலக்கை ஆஸ்திரேலியா துரத்திப்பிடித்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனையை முறியடித்ததுடன், அந்த தோல்விக்கும் இந்தியா சுடச்சுட பதிலடி கொடுத்து இருக்கிறது.
மேலும் மகளிர் உலக கோப்பையில் தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் வீறுநடையும் முடிவுக்கு வந்தது.
இதனிடையே, 127 ரன்கள் திரட்டி ஆட்டநாயகியாக ஜொலித்த இந்திய மிடில் வரிசை பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் வெற்றி பெற்றதும் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்த கண்ணீர் விட்டார்.
இதையடுத்து அவர் பேசுகையில், முதலில் நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எல்லாம் கனவு போல் இருக்கிறது. இந்தியாவை வெற்றி பெறச் செய்வதே எனது எண்ணமாக இருந்தது. கடந்த ஆண்டு உலக கோப்பையில் இருந்து நீக்கப்பட்டேன். அந்த வலி இன்னும் மனதில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அழுதிருக்கிறேன். நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன். கடவுள் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் கொடுப்பார். தன்மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி என்று கூறி நெகிழ்ந்தார்.






