என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்
    X

    அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்

    • ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் மதுரையில் சசிகலாவை சந்தித்தனர்.
    • முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் சேர்ந்து ஒன்றாக பங்கேற்று, தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

    ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் அங்கு சசிகலாவையும் சந்தித்தனர்

    இதற்கிடையே, செங்கோட்டையன் மீது நடவடிக்கை பாயுமா என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டதற்கு, அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும் தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்கா விட்டால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். அவரிட ம் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×