என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெமிமா ரோட்ரிக்ஸ்"

    • சஞ்சு சாம்சன் கர்த்தருக்கு நன்றி கூறும் வகையில் சிலுவை பிரார்த்தனை செய்து கொண்டாடினார்.
    • சஞ்சு சாம்சனின் இந்த கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 40 ரன்கள் எடுத்தார். ஹோலட்ர் 37 ரன்னும், பாவெல் 34 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    அடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது. அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    இந்த போட்டியில் அரைசதம் அடித்த சஞ்சு சாம்சன் கர்த்தருக்கு நன்றி கூறும் வகையில் சிலுவை பிரார்த்தனை செய்து கொண்டாடினார். அதே போல வெற்றிக்கான கடைசி ரன்னை அடித்தவுடன் தரையில் அமர்ந்து இறைவனிடம் வேண்டி சிலுவை பிரார்த்தனை செய்து கொண்டாடினார். சஞ்சு சாம்சனின் இந்த கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்கு பின்பு பேசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், "நான் இயேசுவுக்கு நன்றி கூறுகிறேன், இதை நான் தனியாகச் செய்திருக்க முடியாது. அவர் என்னைவழி நடத்தினார்" என்று தெரிவித்தார். இதனையடுத்து இணையத்தில் ஜெமிமாவின் மதத்தை குறிவைத்து எண்ணற்ற ட்ரோல்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • இது எனக்கும், என் குடும்பத்திற்கும் உண்மையிலேயே ஒரு கனவு ஆண்டாக அமைந்துள்ளது.
    • இதுவரை விளையாடிய 27 போட்டிகளில் 139.66 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 507 ரன்கள் குவித்துள்ளார்.

    டெல்லி கேபிடல்ஸ் (DC) அணியின் புதிய கேப்டனாக இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் அறிவிக்கப்பட்டார். டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மெக் லானிங் ஏலத்தில் UP வாரியர்ஸ் அணியால் வாங்கப்பட்ட நிலையில், டெல்லியால் தக்கவைக்கப்பட்ட ஜெமிமா கேப்டனாக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஜெமிமா,

    "டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய பெருமை. அணியை வழிநடத்த என் மீது நம்பிக்கை வைத்த உரிமையாளர்களுக்கும், துணைப் பணியாளர்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகக் கோப்பையை வென்றது, இப்போது, WPL-இன் முதல் சீசனிலிருந்தே என் இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கும் இந்த அணியில் இந்த அற்புதமான வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது என, இது எனக்கும், என் குடும்பத்திற்கும் உண்மையிலேயே ஒரு கனவு ஆண்டாக அமைந்துள்ளது.

    கடந்த மூன்று ஆண்டுகளில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். இந்த அணி எனது குடும்பம். பழைய வீரர்களை மிஸ் செய்வேன். அதே நேரத்தில் பழக்கமான முகங்கள் மற்றும் புதிய வீரர்களுடன் புதிய நினைவுகளை உருவாக்குவதில் நான் உற்சாகமாக இருக்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.  

    ஜெமிமா ரோட்ரிக்ஸ் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இதுவரை விளையாடிய 27 போட்டிகளில் 139.66 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 507 ரன்கள் குவித்துள்ளார். இதில் மூன்று அரை சதங்கள் அடங்கும். மேலும் முதல் மூன்று சீசன்களிலும் அணியின் துணைத்தலைவராக ஜெமிமா செயல்பட்டார்.


    ×