என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வெற்றி என்ற ஒற்றை இலக்கு மட்டும்தான்..! மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு
    X

    வெற்றி என்ற ஒற்றை இலக்கு மட்டும்தான்..! மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு

    • கூட்டணி கட்சிகளில் நம்மை பிடிக்காத சிலர் இருக்கத்தான் செய்வார்கள்.
    • தேவையில்லாத கருத்துகளை பேசி கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த அவர்கள் நினைக்கலாம்.

    திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    கூட்டணி கட்சிகளில் நம்மை பிடிக்காத சிலர் இருக்கத்தான் செய்வார்கள். தேவையில்லாத கருத்துகளை பேசி கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த அவர்கள் நினைக்கலாம். அத்தகைய சூழ்ச்சிக்கு நாம் யாரும் பலியாகக் கூடாது.

    கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை நான் பார்த்துக் கொள்கிறேன். 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து தேர்தலில் 100% களப் பணியாற்ற வேண்டும்

    நல்லா கேட்டுக்கோங்க... தேர்தல் நெருங்கிடுச்சு, இனி நம் சிந்தனை- செயல் எல்லாத்துலயும் வெற்றி என்ற ஒற்றை இலக்கு மட்டும்தான் இருக்க வேண்டும்.

    இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

    Next Story
    ×