என் மலர்
ஆசிரியர் தேர்வு
- வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
- இப்படத்தில் இரண்டு தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலம்பரசன் டி.ஆர். (STR), ரசிகர்களால் சிம்பு என்றும் அழைக்கப்படும் இவர், தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
இப்படத்தில் STR முற்றிலும் இளமையான தோற்றம் பெற வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார். இப்படத்தில் இரண்டு தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
படத்தின் ப்ரோமோ வீடியோ படமாக்கப்பட்ட நிலையில் அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
இந்நிலையில், ப்ரோமோ வீடியோ வெளியாகும் தகவலை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, எஸ்டிஆர்49 படத்தின் ப்ரோமோ வீடியோவை யூடியூபில் வெளியிடுவதற்கு முன்பு, நேரடியாக தியேட்டர்களில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது.
அதுவும், ரஜினியின் கூலி திரைப்படத்துடன் ஆகஸ்டு 2வது அல்லது 3வது வாரத்தில் இந்த ப்ரோமோ வீடியோ வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
- பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மூலம் கொல்லப்பட்டனர்.
- தேசிய பாதுகாப்பிற்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கவில்லை என கடுமையாக சாடினார் அமித்ஷா.
புதுடெல்லி:
ஆபரேஷன் சிந்தூர் குறித்து மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நெற்றியில் சுட்டுக்கொல்லப்பட வேண்டுமென மக்கள் நினைத்தனர். அதேபோல், பயங்கரவாதிகள் 3 பேரும் நெற்றியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தேசிய பாதுகாப்பிற்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஆனால், அரசியலுக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கிறது.
காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலை திருப்திப்படுத்தவே முக்கியத்துவம் கொடுக்கிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்துவிட்டது. ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பா.ஜ.க. அரசு மீட்கும் என தெரிவித்தார்.
- லீக் சுற்றின் முடிவில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
- முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் - பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் நாளை மோத இருந்தது.
லீட்ஸ்:
2025 உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் - பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளும் 2-வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதவுள்ளனர்.
இந்நிலையில் முதல் அரையிறுதியில் இந்தியா- பாகிஸ்தான் மோதவிருந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய வீரர்கள் மறுத்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி அரையிறுதியில் விளையாடமலே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
பஹல்காம் தாக்குதல் காரணமாக, ஜுலை 20-ம் தேதி நடக்கவிருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் விளையாட ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான் உள்ளிட்ட வீரர்கள் விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது.
- இரண்டு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் 25 சதவீதம் வரி விதிப்பு.
- ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வரிவிதிப்பு தொடர்பாக இரண்டு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் கூறியிருந்த நிலையில் அறிவித்துள்ளார்.
- பூத் கமிட்டி கூட்டம், மாநாடு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
- 'வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு' என்ற செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.
2026 தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி தமிழக வெற்றிக்கழகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பூத் கமிட்டி கூட்டம், மாநாடு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் MY TVK எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக 'வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு' என்ற செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.
இந்நிலையில், "வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு செயலியை தொடங்கி விஜய்க்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய அவர்," 2026 தேர்தல் திருப்புமுனையாக அமையும். தேர்தல் திருப்புமுனையை நோக்கிதான் அனைவரும் பயணப்படுகிறோம்" என்றார்.
- ரஷியாவின் கம்சட்கா பகுதியில் சுனாமி தாக்கியது.
- ஜப்பானிலும் சுனாமி அலைகள் தாக்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்
ரஷியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கம்சட்கா பகுதியில் சுனாமி தாக்கியது. இதனை தொடர்ந்து ஜப்பானிலும் சுனாமி அலைகள் தாக்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் பரவியது. ஆனால் இந்தியாவிற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆகவே கடலோர பகுதி மக்கள் தேவையின்றி அச்சப்பட வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- ஜெயலலிதா இருக்கும் வரை ஒன்றிய அரசின் ‘உதய் மின் திட்டத்தில்’ அவர் கையெழுத்து போடவில்லை.
- திரைக்கதை எழுதி நாடகம் போட்டவர்களே உங்கள் தரம் தாழ்ந்த எண்ணங்களை உலகிற்கு பறைசாற்றாதீர்கள் !
சென்னை :
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒரு சில நாட்களுக்கு முன்பு "முதலமைச்சர் அவர்கள் பூரண நலம் பெற வேண்டும்" என "சுந்தரா டிராவல்ஸ்" யாத்திரையில் சொன்ன அதே எதிர்கட்சி தலைவரின் நாக்குதான் இப்போது 'ஆஸ்பத்திரியில் டேபிள் மீட்டிங்' என நர்த்தனம் ஆடுகிறது. அது சரி பொதுவாக எல்லோரும் டேபிள் முன்பு அமர்ந்துதான் மீட்டிங் போடுவார்கள் என்பது தெரியாமல்தானே பழனிசாமி பாவம் டேபிளுக்கு அடியில் மீட்டிங் போட்டார் !
அரசு அலுவல்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறுகிறதா என அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்வது, "உங்களுடன் ஸ்டாலின்" எனும் மகத்தான திட்டத்திற்கான முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா என தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்பது, காணொளிக் காட்சி வாயிலாக கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துவது. பொதுமக்களுடன் வீடியோ காலில் பேசி முகாமின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி மக்களுக்கு சென்றடைகின்றனவா என்று நேரடியாக பயனாளிகளிடம் கேட்டறிதல், மாண்புமிகு பிரதமர் மோடியின் தமிழ்நாட்டுப் பயணத்தின் போது மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாம் பெற வேண்டிய திட்டங்களுக்காக கடிதம் தயார் செய்து அனுப்பி வைத்தது என மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி சில நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோதும் தொடர்ந்து தடையின்றி தனது மக்கள் பணியை செய்தார் திராவிட நாயகன் நமது முதலமைச்சர் அவர்கள் !
ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது துள்ளத் துடிக்கத் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைப் பலி வாங்கிவிட்டு, "டிவியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்" எனச் சொன்னவர் தான் இந்த எதிர்க்கட்சித் தலைவர்.
எந்த காலத்திலும் உருப்படியாக முதலமைச்சர் பணிகளையே செய்யாத எதிர்க்கட்சித் தலைவருக்கு இவையெல்லாம் ஆச்சரியமாகத்தான் இருக்கும். "அம்மா இட்லி சாப்பிட்டார்; செவிலியர்களுடன் பந்து விளையாடினார்; விரைவில் வீடு திரும்புவார்; டிவி பார்த்தார்; கிச்சடி சாப்பிட்டார்; நர்ஸ்களுக்குப் பரிசு கொடுத்தார்; டாக்டர்களுக்கே அறிவுரை கூறினார்" என்றெல்லாம் திரைக்கதை எழுதி நாடகம் போட்டவர்களே உங்கள் தரம் தாழ்ந்த எண்ணங்களை உலகிற்கு பறைசாற்றாதீர்கள் !
அம்மையார் ஜெயலலிதா இருக்கும் வரை ஒன்றிய அரசின் 'உதய் மின் திட்டத்தில்' அவர் கையெழுத்து போடவில்லை. அவர் மறைந்த பிறகு ஓடோடிப்போய் கையெழுத்து போட்டு தமிழ்நாட்டை வஞ்சித்தது சந்துகளில் இருந்து குரல் கொடுக்கும் ஷாக்க்ஷாத் பழனிசாமிதான் என்பது ஊருக்கே தெரிந்தபோதும் இன்று அவரே "மின்கட்டணம் உயர்ந்துவிட்டது" என நீலிக் கண்ணீர் வடித்திருக்கிறார்.
இப்படி, தானே ஏற்றிய மின்கட்டண உயர்வைக் குறித்து தானே பேசிவரும் பழனிசாமி, ஒன்றிய அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறித்து ஏன் பேச அஞ்சுகிறார்? 2014ம் ஆண்டு ரூ.414-ஆக இருந்த சமையல் காஸ் சிலிண்டர் விலை தற்போது ரூ.868.50-ஆக உயர்ந்து வளர்ந்து நிற்பது எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரியாதா? அல்லது எப்போதும் போல நடிக்கிறாரா ?
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- ரஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின.
- ரஷியாவின் கம்சட்கா பகுதியில் சுனாமி தாக்கியது.
ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.6 ரிக்டர் அளவுகோலில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரஷியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கம்சட்கா பகுதியில் சுனாமி தாக்கியது.
இதனை தொடர்ந்து ஜப்பானிலும் சுனாமி அலைகள் தாக்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.
- தனுசுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார்.
- D54 படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் D54 படத்தின் சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.
'போர் தொழில்' என்ற ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். இப்படத்தில் தனுஷுக்கு மமிதா பைஜு நடிக்கிறார். D54 திரைப்படற்கு ஜிவி பிரகாஷ்குமார இசையமைக்கிறார்,
இந்நிலையில், 'D54' படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் தனுஷ் இருக்கும் புகைப்படத்தை படக்குழு பகிர்ந்துள்ளது.
அந்த பதிவில், D54 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது என்று படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.
- எஸ்பிஐ வங்கியில் மட்டும் ரூ.19,239 கோடி உள்ளது.
- எச்டிஎஃப்சி வங்கியில் ரூ.1,609 கோடி மற்றும் ஆக்சிஸ் வங்கியில் ரூ.1,360 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகைகள் உள்ளன.
இந்திய வங்கிகளில் ரூ.67,000 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகைகள்(deposit) உரிமை கோரப்படாமல் கிடப்பில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜூன் 30, 2025 நிலவரப்படி இந்த புள்ளிவிவரங்களை நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
பொதுத்துறை வங்கிகள் 87 சதவீத உரிமைகோரப்படாத வைப்புத்தொகையை வைத்திருக்கின்றன. பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இதுபோன்ற வைப்புத்தொகைகளில் அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.
எஸ்பிஐ வங்கியில் மட்டும் ரூ.19,239 கோடி உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி (ரூ.6,910.67 கோடி), கனரா வங்கி (ரூ.6,278.14 கோடி), பாங்க் ஆஃப் பரோடா (ரூ.5,277.36 கோடி) மற்றும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா (ரூ.5,104.50 கோடி) ஆகியவை அதிக அளவு உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகளைக் கொண்ட பிற பொதுத்துறை வங்கிகளாகும்.
தனியார் வங்கிகளில் மட்டும் ரூ.8,673.72 கோடி மதிப்புள்ள உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகள் உள்ளன. ஐசிஐசிஐ வங்கியில் அதிகபட்சமாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகள் உள்ளன.
ஐசிஐசிஐ வங்கியில் ரூ.2,063.45 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகைகள் உள்ளன. எச்டிஎஃப்சி வங்கியில் ரூ.1,609 கோடி மற்றும் ஆக்சிஸ் வங்கியில் ரூ.1,360 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகைகள் உள்ளன.
ஒரு சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் 10 ஆண்டுகளுக்கு எந்தப் பரிவர்த்தனையும் இல்லை என்றால், அந்தக் கணக்கில் உள்ள தொகை 'செயல்படாத வைப்புத்தொகை' என்று கருதப்படுகிறது. இது பொதுவாக கணக்கு வைத்திருப்பவர் இறக்கும் போது நடக்கும்.
இந்த நிதிகள் 10 ஆண்டு வரம்பிற்குப் பிறகு இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) பராமரிக்கப்படும் வைப்புத்தொகையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்படும்.
பழைய கணக்குகளில் பணம் இருக்கிறதா என்பதை சரிபார்க்க, இந்திய ரிசர்வ் வங்கி UDGM (Unclaimed Deposits-Gateway to Access Information) என்ற மையப்படுத்தப்பட்ட இணையதள போர்ட்டலைத் தொடங்கியுள்ளது.
இந்த போர்டல் மூலம், பல்வேறு வங்கிகளில் உள்ள உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகளை எளிதாகத் தேடலாம்.
இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதன் மூலம், பழைய மற்றும் பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
- மான்செஸ்டர் டெஸ்டில் விளையாட இருந்த நிலையில், காயத்தால் விலகினார்.
- ஓவல் மைதானத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் அறிமுகமாக வாய்ப்பு இருந்தது. ஆனால் கையில் ஏற்பட்ட காயத்தால் வாய்ப்பு எட்டவில்லை. இதனால் அன்ஷுல் கம்போஜ் அணியில் இடம் பெற்றார்.
தற்போது காயம் குணமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 5ஆவது போட்டி நடைபெறும் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று காலை தீவிர பயிற்சி மேற்கொண்டார். இதனால் 5ஆவது போட்டியில் அறிமுகமாக வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பும்ரா மூன்று போட்டியில் மட்டுமே விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. அவர் மூன்று போட்டிகளில் விளையாடி விட்டார். இதனால் கடைசி போட்டியில் விளையாடுவாரா? என்பது தெரியவில்லை.
இதற்கிடையே ஆகாஷ் தீப் 4ஆவது போட்டியில் விளையாடவில்லை. அவரும் 5ஆவது போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப் ஆகியோர் களம் இறங்கினால் பும்ரா மற்றும் அன்ஷுல் கம்போஜ் அல்லது ஷர்துல் தாகூர் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.
- மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்றது.
- பாகிஸ்தானின் அணு ஆயுத பிளாக்மெயில் பலனளிக்கவில்லை என்றார் பிரதமர் மோடி.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவில் வன்முறைகளைப் பரப்புவதற்கான சதி திட்டமே இது. அந்த சதித்திட்டம், ஒற்றுமையால் முறியடிக்கப்பட்டு உள்ளது என்பதற்காக நான் நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏப்ரல் 22-ம் தேதி நான் வெளிநாட்டில் இருந்தேன். உடனடியாக நான் நாடு திரும்பினேன். திரும்பி வந்ததும், கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்தினேன். அப்போது, இது நம்முடைய தேசம் தொடர்பான விசயம். பயங்கரவாதத்திற்கு சரியான பதிலடி தரப்பட வேண்டும் என்று தெளிவாக அறிவுறுத்தினேன்.
பாகிஸ்தான் நாட்டின் தொலைதூர பகுதிக்குள் சென்று இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ராணுவத்திற்கு முழு அளவில் சுதந்திரம் அளிக்கப்பட்டது. எந்த பகுதியில், எப்போது, எப்படி பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என ராணுவமே முடிவு செய்தது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட டிரோன்கள், ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு, பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. முப்படைகளும் கூட்டாக இணைந்து திட்டமிட்டு செயல்பட்டன. அந்நாட்டின் விமான தளங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தியாவின் பதிலடியை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை. அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடி பணியாது. அந்த மிரட்டல் இனி எடுபடாது. இந்தியா ஒருபோதும் பயப்படாது.
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்தில் எந்த நாட்டு தலைவரும் தலையிடவில்லை.
மே 9-ம் தேதி அமெரிக்க துணை அதிபர் மைக் வின்ஸ் தொலைபேசியில் பேசினார். பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடுத்தார்.
பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தேன் என்றார்.
இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு தானே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிவரும் நிலையில், பிரதமர் மோடி இன்று பதிலளித்துள்ளார்.






