என் மலர்
கிரிக்கெட் (Cricket)

5ஆவது டெஸ்டில் அறிமுகமாக தயாராகும் அர்ஷ்தீப் சிங்: ஓவலில் தீவிர பயிற்சி..!
- மான்செஸ்டர் டெஸ்டில் விளையாட இருந்த நிலையில், காயத்தால் விலகினார்.
- ஓவல் மைதானத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் அறிமுகமாக வாய்ப்பு இருந்தது. ஆனால் கையில் ஏற்பட்ட காயத்தால் வாய்ப்பு எட்டவில்லை. இதனால் அன்ஷுல் கம்போஜ் அணியில் இடம் பெற்றார்.
தற்போது காயம் குணமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 5ஆவது போட்டி நடைபெறும் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று காலை தீவிர பயிற்சி மேற்கொண்டார். இதனால் 5ஆவது போட்டியில் அறிமுகமாக வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பும்ரா மூன்று போட்டியில் மட்டுமே விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. அவர் மூன்று போட்டிகளில் விளையாடி விட்டார். இதனால் கடைசி போட்டியில் விளையாடுவாரா? என்பது தெரியவில்லை.
இதற்கிடையே ஆகாஷ் தீப் 4ஆவது போட்டியில் விளையாடவில்லை. அவரும் 5ஆவது போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப் ஆகியோர் களம் இறங்கினால் பும்ரா மற்றும் அன்ஷுல் கம்போஜ் அல்லது ஷர்துல் தாகூர் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.






