என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ப்ரோமோ பாடல்"

    பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14, 2026-இல் இப்படம் திரைக்கு வருகிறது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவரது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது.

    இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார்.

    இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.

    படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.

    அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14, 2026-இல் இப்படம் திரைக்கு வருகிறது.

    இந்நிலையில், 'பராசக்தி' திரைப்படத்தின் முதல் பாடலின் ப்ரொமோ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    • வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
    • இப்படத்தில் இரண்டு தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிலம்பரசன் டி.ஆர். (STR), ரசிகர்களால் சிம்பு என்றும் அழைக்கப்படும் இவர், தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

    இப்படத்தில் STR முற்றிலும் இளமையான தோற்றம் பெற வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார். இப்படத்தில் இரண்டு தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    படத்தின் ப்ரோமோ வீடியோ படமாக்கப்பட்ட நிலையில் அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

    இந்நிலையில், ப்ரோமோ வீடியோ வெளியாகும் தகவலை படக்குழு அறிவித்துள்ளது.

    அதன்படி, எஸ்டிஆர்49 படத்தின் ப்ரோமோ வீடியோவை யூடியூபில் வெளியிடுவதற்கு முன்பு, நேரடியாக தியேட்டர்களில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது.

    அதுவும், ரஜினியின் கூலி திரைப்படத்துடன் ஆகஸ்டு 2வது அல்லது 3வது வாரத்தில் இந்த ப்ரோமோ வீடியோ வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

    • போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • போட் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இயக்குனர் சிம்புதேவன் அடுத்ததாக யோகி பாபுவை வைத்து `போட்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இக்கதை சூழல் இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு 80 வருடங்களுக்கு முன் நடக்கும் கதையாக அமைந்து இருக்கிறது.

    ஜப்பான் நாடு, மெட்ராஸ் ப்ரெசிடன்சி மீது குண்டு வீசிய போது அங்கு இருந்து 10 நபர்கள் பே ஆஃப் பெங்கால் கடற்கரையில் உயிர் தப்பிக்க பதுங்குகிறார்கள்.

    இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் இரண்டு பாடல்கள் கடந்த வாரத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், இன்று யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடா வா என்ற படத்தின் ப்ரோமோ பாடலை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்தப் பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×