பராசக்தி படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ நாளை வெளியாகிறது

பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14, 2026-இல் இப்படம் திரைக்கு வருகிறது.
பராசக்தி படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ நாளை வெளியாகிறது
Published on

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவரது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது.

இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.

அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14, 2026-இல் இப்படம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில், 'பராசக்தி' திரைப்படத்தின் முதல் பாடலின் ப்ரொமோ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com