என் மலர்

  சினிமா

  காலா படத்தில் புதிய அவதாரம் எடுத்த விவேக்
  X

  காலா படத்தில் புதிய அவதாரம் எடுத்த விவேக்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஜினியின் ‘காலா’ படத்தின் பாடல்கள் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில், பாடல் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது. இதில் ஒரு பாடலை பாடலாசிரியர் விவேக் பாடியுள்ளார். #Kaala #Rajinikanth
  ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மே 9-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 

  அதற்கு முன்னதாக படத்தின் பாடல் முன்னோட்ட வீடியோ இன்று வெளியானது. இதில் காலா படத்தின் தமிழ் பதிப்பில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன. மற்ற மொழிகளில் 9 பாடல்கள் உள்ளன. இதில் ஒரு பாடலில் ஒரு பகுதியை பாடியிருப்பதில் மகிழ்ச்சி என்று பாடலாசிரியர் விவேக் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.   பா.இரஞ்சித் இயக்கத்தில் மும்பையை பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கும் இந்த படத்தை தனுஷ் அவரது வுண்டர்பார் பிலம்ஸ் மூலம் தயாரித்துள்ளார். 

  சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். #Kaala #Rajinikanth

  Next Story
  ×