என் மலர்

சினிமா

‘காலா’ எந்த மாதிரியான படம் - ரகசியத்தை வெளியிட்ட அஞ்சலி பாட்டீல்
X

‘காலா’ எந்த மாதிரியான படம் - ரகசியத்தை வெளியிட்ட அஞ்சலி பாட்டீல்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ எந்தமாதிரியான படம் என்ற ரகசியத்தை இந்த படத்தில் நடித்திருக்கும் அஞ்சலி பாட்டீல் வெளியிட்டிருக்கிறார். #Kaala #Rajinikanth
ரஜினியின் ‘காலா’ படம் யு.ஏ. சான்றிதழ் பெற்று திரைக்கு வர தயாராக இருக்கிறது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இதில் ஹீமா குரோஷி, அஞ்சலி பாட்டீல் நடித்திருக்கிறார். 

இந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களில் நடித்திருக்கும் அஞ்சலி பாட்டீல், இந்த படத்தில் தாராவி பகுதியில் வாழும் தமிழ் பேசத்தெரிந்த மராத்தி பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

டி.வி. பேட்டி ஒன்றில் ‘காலா’ படம் பற்றி அஞ்சலி பாட்டீல் அளித்த பேட்டி....

“ ‘காலா’ ஒரு அரசியல் படம். இந்த படத்தில் எனது கதாபாத்திரத்தின் பெயர் சாருமதி கெய்க்வாட். இதில் ரஜினிசாரின் காதலியாக ஹீமா குரோஷி நடித்திருக்கிறார். எனக்கு கதையை நகர்த்திச் செல்லும் முக்கியமான பாத்திரம். படத்தில் அழுத்தமான அரசியல் கருத்து உண்டு.இதில், நான் ரஜினி சாருடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகளும் இருக்கின்றன. படத்தின் பாதி காட்சிகளை மராட்டிய மாநிலத்திலும், மீதியை தமிழ்நாட்டிலும் எடுத்திருக்கிறார்கள்.

இதில் மராட்டியம் தொடர்பான வி‌ஷயங்கள் உள்ளன. இதனால் தான் இந்த படத்தை நான் தேர்ந்து எடுத்தேன். ரஜினிசார் மிகவும் எளிமையானவர். அவரிடம் இருந்து மனித தன்மையையும், பொறுப்புடன் நடந்து கொள்ளும் முறையையும் கற்றுக்கொள்ள முடியும்”. #Kaala #Rajinikanth
Next Story