என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள `தங்கல்' படத்தின் வசூல் சாதனையை சீனாவின் மூத்த அரசியல் தலைவர் லியூ யுன்ஷன் பாராட்டி இருக்கிறார்.
    சமீபகாலமாகவே இந்திய படங்களுக்கு சீனாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே சீனாவில் திரையிடப்பட்ட அமீர்கானின் ‘3 இடியட்ஸ்’, ‘பிகே’ உள்ளிட்ட படங்கள் சீன மக்களால் விரும்பி பார்க்கப்பட்டது. இதையடுத்து, நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர் கான் நடித்து வெளிவந்த ‘தங்கல்’ படம் கடந்த மாதம் சீனாவில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில், தங்கல் படத்திற்கு சீனாவில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    இதற்கு முன்பு சீனாவில் திரையிடப்பட்ட அனைத்து இந்திய படங்களின் சாதனைகளையும் முறியடித்துள்ள தங்கல், சீனாவில் மட்டும் ரூ.1100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. மொத்த வசூலில் ரூ.1900 கோடியை நோக்கி வெற்றி நடைபோட்டு வருகிறது.



    சீனாவில் வெளியான ஹாலிவுட் அல்லாத படங்களில் ‘தங்கல்’ முதல் இடத்தை பிடித்திருக்கிறது. சீனாவில் மட்டும் இதுவரை 12 மில்லியனுக்கும் அதிமான மக்கள் இதுவரை ‘தங்கல்’ படத்தை பார்த்து இருக்கின்றனர்.

    இந்நிலையில், ‘தங்கல்’ படத்தின் இத்தகைய சாதனையை சீனாவின் மூத்த அரசியல் கட்சித் தலைவர் லியூ யுன்ஷன் பாராட்டி உள்ளார். சீனாவில் சமீபத்தில் வெளியான படங்களில் அதிக வசூலை ‘தங்கல்’ படம் வசூலித்திருக்கிறது. ‘தங்கல்’ படத்தால் இந்தியா பெருமைப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ‘தங்கல்’ படத்திற்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

    `தங்கல்' படத்தின் வெற்றியை அடுத்து, `பாகுபலி-2' படம் வருகிற ஜுலை மாதம் சீனாவில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.
    நிரஞ்சன் இயக்கத்தில் அவரும், காயத்ரியும் இணைந்து நடித்திருக்கும் நீதான் ராஜா படத்தின் விமர்சனம்.
    நாயகன் நிரஞ்சன் தனது நண்பனை பார்ப்பதற்காக ஒரு கிராமத்துக்கு வருகிறார். தன்னுடைய தங்கையை எப்படியாவது டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். இந்நிலையில், தன்னுடைய நண்பன் மூலம் நாயகியின் அறிமுகம் கிடைக்கிறது. நாயகி காயத்ரி அந்த ஊரில் ஆசிரமம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

    அந்த ஆசிரமத்தை கைப்பற்றுவதற்கு, அந்த ஊரில் வசிக்கும் செல்வந்தரான காக்கா ஆசைப்படுகிறார். இதனால், நாயகிக்கும் ஆசிரமத்திற்கும் பல்வேறு இடைஞ்சல்களை கொடுக்கிறார். இதையெல்லாம் நாயகனிடம் முறையிடுகிறாள் நாயகி. ஆனால், நாயகனோ அவளது பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாததுபோல் நடந்து கொள்கிறார். இதனால் நாயகன் மீது நாயகிக்கு வெறுப்பு வருகிறது.



    ஆனால், மறுநாள் ஆசிரமத்தை தாக்க வரும் காக்காவின் ஆட்கள் அனைவரையும் நாயகன் அடித்து துவம்சம் செய்கிறார். அதன்பிறகு, ஆசிரமத்தை தாக்க சொன்ன காக்காவை தேடி அவரது வீட்டுக்கு செல்கிறார். அங்கு சென்றதும், காக்காவின் அண்ணன் நாயகனை முன்பே சந்தித்ததுபோல் கூப்பிட்டு தன்னுடன் அழைத்து செல்கிறார்.

    பிறகு நாயகன் அவர்களிடமே வேலைக்கு சேர்கிறார். இது நாயகிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. காக்காவிடம் நல்ல பிள்ளையாக நடந்துகொள்ளும் நாயகன், நாயகியிடமிருந்து ஆசிரமத்தை கைப்பற்றி அவர்களிடம் ஒப்படைப்பதாக கூறிவிட்டு செல்கிறார்.



    அதன்பிறகு உண்மையில் என்ன நடந்தது? நாயகன் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்? என்ன காரணத்திற்காக அவர் இந்த கிராமத்திற்கு வந்தார்? அவருடைய தங்கையை மருத்துவ படிப்பு படிக்க வைக்கவேண்டும் என்று அவரது நினைவில் அடிக்கடி வருவதன் காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகனான நிரஞ்சனே இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். பார்ப்பதற்கு ஹீரோவுக்குண்டான தோற்றம் இருந்தாலும், நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பான அறிமுகமாக இருந்திருக்கும். நீதான் ராஜா என்ற தலைப்பிற்கு ஏற்ப, படத்தில் இவரே ராஜாவாக வலம்வர முயற்சி செய்திருக்கிறார். அதற்காக படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் இவரை புகழ்பாடுவதாகவே அமைத்திருப்பது வெறுப்பைத்தான் வரவழைத்திருக்கிறது. அதேபோல், படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் கோர்வை இல்லாமல் தனித்தனியாக கொடுத்திருப்பது படத்தை பார்ப்பதற்கே தடையாக நிற்கிறது.



    நாயகி காயத்ரி ஒருசில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைக்கிறார். அதேபோல் நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் லீமா செண்டிமெண்ட் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து நடித்திருக்கலாம். நாயகனின் நண்பனாக வரும் ரவிசாந்த் நிறைய படங்களில் பார்த்த முகம்தான். நடிப்பில் ஓகே சொல்ல வைத்திருக்கிறார். காக்காவாக நடித்திருப்பவர் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அதேபோல், அவருடைய அண்ணனாக வருபவரும் ஆரம்பத்தில் மென்மையானவராகவும், பிறகு மிரட்டலாகவும் வந்து கவர்கிறார்.

    தஷியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் பெரிதாக மிரட்டல் இல்லை. தினேஷின் ஒளிப்பதிவும் பாராட்டும்படியாக இல்லை.

    மொத்தத்தில் ‘நீதான் ராஜா’ முடிசூடவில்லை.
    மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக இன்று மும்பையிலிருந்து சென்னை திரும்பிய ரஜினி தெரிவித்துள்ளார்.
    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் புதிதாக உருவாகிவரும் படம் ‘காலா’. இப்படத்தை தனுஷ் தயாரிக்க பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக ரஜினி கடந்த மாதம் மும்பை சென்றார். மே 28-ந்தேதி முதல் அங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்தது.

    படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொண்ட வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ரஜினி இன்று சென்னை திரும்பினார். மீண்டும், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக வருகிற ஜுன் 24-ந் தேதி மீண்டும் மும்பை செல்லவிருக்கிறார்.



    சென்னை திரும்பிய ரஜினி இன்னும் 2 மாதங்களுக்குள் மீண்டும் தனது ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். கடந்த மாதம் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி, தான் அரசியலுக்கு வருவது குறித்து பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இது அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகர் கமல்ஹாசனை சந்திக்க விரும்புவதாக நடிகர் ராஜ்குமார் ராவ் கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    இந்தி நடிகர் ராஜ்குமார் ராவும், நடிகை சுருதிஹாசனும் ‘பெஹன் ஹோகி தேரி’ என்ற இந்திப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், ராஜ்குமார் ராவ் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் கமல்ஹாசன் மிகப்பெரிய திறமைசாலி. அவர் எங்களுக்கு எப்போதும் உத்வேகமாக திகழ்கிறார். நிறைய படங்களில் அவரது நடிப்புத்திறமையை கண்டு வியந்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். ஆனாலும், ‘அப்பு ராஜா’ (தமிழில் அபூர்வ சகோதரர்கள்) படத்தில் அவரது நடிப்பு என்னை மிகவும் ஈர்த்தது.

    நான் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகன். அவரை சந்திக்க விரும்புகிறேன். அவருடன் சினிமா பற்றி நிறைய பேச வேண்டும். இதற்காக ஏற்பாடு செய்து தருமாறு சுருதிஹாசனிடம் கேட்டிருக்கிறேன். அவரும் ஏற்பாடு செய்வதாக கூறி இருக்கிறார்.

    இவ்வாறு ராஜ்குமார் ராவ் தெரிவித்தார்.
    ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் வழக்கில் நடிகை மம்தா குல்கர்னியை தலைமறைவு குற்றவாளி என தானே கோர்ட்டு அறிவித்துள்ளது.
    மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் உள்ள அவ்யான் லைப் சயின்ஸ் என்ற நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தானே குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள ‘எபெட்ரின்’ என்ற போதைப்பொருள் சிக்கியது.

    இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் நிர்வாகிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

    இந்த போதைப்பொருள் வழக்கில் சர்வதேச போதைப்பொருள் மன்னன் விக்கி கோஸ்வாமி மற்றும் அவரது மனைவியும், இந்தி நடிகையுமான மம்தா குல்கர்னி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.



    இதுபற்றி அறிந்ததும் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் விக்கி கோஸ்வாமி கென்யாவில் அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே கணவன், மனைவி இருவருக்கும் எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து தானே செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த நிலையில், இந்த போதைப்பொருள் வழக்கில் நடிகை மம்தா குல்கர்னியை தானே கோர்ட்டு தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில், அவரது கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடிக்க உள்ளார்.
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில், அவரது கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடிக்க உள்ளார்.

    2006-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பத்தாண்டுகள் இந்திய பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங், பிரதமராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக, அவரது ஊடக ஆலோசகரான சஞ்சய் பாரு எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் ‘தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்” என்ற பெயரில் திரைப்படம் உருவாக உள்ளது.

    இப்படத்தில் இயக்குநர் அனுபம் கெர் மன்மோகன் சிங் வேடத்தில் நடிக்க இருக்கிறார். தனது டிவிட்டர் செய்தியில் இதை தெரிவித்துள்ள அனுபம் கெர், "தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்" என்ற திரைப்படத்தில் மன்மோகன் சிங் வேடத்தில் நடிக்க ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    2014 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை இழந்த மன்மோகன் சிங் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியை, அனுபர் கெர் அடிக்கடி விமர்சித்திருக்கிறார். "சமகால வரலாற்றை சேர்ந்தவர்கள் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது மிகவும் சவாலானது" என்று அனுபம் கெர் கூறியுள்ளார். மேலும், "சவால்களை எதிர்கொள்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு, என்னுடைய முதல் படமான சாரன்ஷ்-இல் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து நான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமுடன் இருக்கிறேன். எனவே, பிரதமர் மன்மோகன் சிங்கை சித்தரிக்கும் அனுபவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

    எனினும், இத்திரைப்படம் தொடர்பாக மன்மோகன் சிங்கிடம் இருந்து எந்த கருத்துக்களும் வெளியாகவில்லை.
    "16 வயதினிலே'' படத்தில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடவேண்டிய ஒரு பாடலை, அவருக்கு தொண்டை கட்டிக்கொண்டதால் மலேசியா வாசுதேவன் பாடினார்.
    "16 வயதினிலே'' படத்தில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடவேண்டிய ஒரு பாடலை, அவருக்கு தொண்டை கட்டிக்கொண்டதால் மலேசியா வாசுதேவன் பாடினார்.

    "16 வயதினிலே'' படத்தின் பாடல் பதிவு அனுபவம் பற்றி இளையராஜா தொடர்ந்து கூறியதாவது:-

    "பட்ஜெட் படம் என்னும்போது செலவுகளை ஆரம்பத்தில் இருந்தே மட்டுப்படுத்தியாக வேண்டும். அதை மனதில் வைத்தே என் இசை சம்பந்தப்பட்ட பாட்டு விஷயத்தில் நானும் முயற்சி செய்தேன். அந்த அடிப்படையில்தான் கவிஞரின் உதவியாளர் கண்ணப்பனிடம் பாட்டுக்கான சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொள்ளச் சொன்னேன்.

    நான் கேட்டுக்கொண்ட சம்பளக் குறைப்பு பற்றி கண்ணப்பன் கவிஞரிடம் சொல்லியிருக்கிறார். அவரோ, "பணம் என்னடா பணம்! அதெல்லாம் ஒரு விஷயமா! வா, ராஜாவுக்கு நாம பாட்டு எழுதிட்டு வரலாம்'' என்று புறப்பட்டு நேராக வந்துவிட்டார்.

    பாடல் வரவேண்டிய இடத்துக்கான காட்சியை கவிஞரிடம் பாரதி விவரித்து சொன்னார். உடனே என்னைப் பார்த்த கவிஞர் "என்ன டிïன்?'' என்று கேட்டார்.

    நான் பக்கவாத்தியங்களோடு அந்த மெட்டை பாடிக்காட்டினேன். பாரதி, அரைகுறை மனதுடன் "ஓகே'' செய்த மெட்டு அது.

    "16 வயதினிலே'' கிராமத்து பின்னணியில் அமைந்த படம் என்பதை மனதில் கொண்ட கவிஞர், சிறிது நேரம் யோசித்துவிட்டு, "செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா ஹோய் சின்னக்கா'' என்று எழுதினார்.

    இரண்டாவது பாடல், மயிலிடம் சப்பாணி பாடுவதுபோல் வருகிறது. சந்தைக்குப் போகும் சப்பாணியும் மயிலும் நடந்து போகும் வழியில் பாடும் பாட்டு. மயில் வருத்தத்தில் இருக்க அவளை சப்பாணி சந்தோஷப்படுத்த முயற்சிக்கிற மாதிரியான பாட்டு.

    இதில் சப்பாணி (கமலஹாசன்) பாடிக்கொண்டே போக, இடையில் ஒரு ஹம்மிங்கோடு ஒரு பெண் குரல் ஒன்று ஒலிக்கிறது.

    மயிலும் சப்பாணியும் எங்கிருந்து வருகிறது அந்தப் பெண் குரல் என்று தேடித்தேடி பார்க்கிறார்கள். கடைசியில் ஒரு கிழவி பாடுவதாக காட்டப்படும் என்று பாரதி, கவிஞரிடம் விளக்கினார்.

    நானும் பாரதியும் ஏற்கனவே இந்தப் பாட்டி பற்றி யோசித்து வைத்திருந்தோம். "என்ன பாட்டி! மஞ்சக் குளிச்சிருக்கியே!'' என்று கேட்டு, "பழைய நினைப்புடா பேராண்டி'' என்று சொல்லும் கிராமத்துப் பேச்சை நினைவில் வைத்திருந்தோம். அதாவது, இப்படி கிழவி சொல்கிற மாதிரி முடிந்தால் நன்றாக இருக்கும் என்பது எங்கள் கருத்து. ஆனால் அதை கவிஞரிடம் சொல்லவில்லை.

    கவிஞரோ பாடலை "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு'' என்று தொடங்குவதாக அமைத்து கிழவி காட்டப்படும்போது "பழைய நினைப்புடா பேராண்டி... பழைய நினைப்புடா!'' என்று அவள் சொல்வது போல் முடித்தார்.

    நாங்கள் சொல்லாமலே, கவிஞர் எங்கள் மனதில் இருந்ததை எழுதியது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கவிஞருக்கு இருந்த சரஸ்வதி கடாட்சம் அது.

    "செவ்வந்தி பூ முடிச்ச'' பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை பாட வைக்கலாம் என்று முடிவு செய்து, ரிகர்சலுக்கு அழைத்தோம். பாலு வந்தார். ரிகர்சல் எல்லாம் முடிந்து கிளம்பும்போது பாலுவை தனியாக அழைத்தேன். "பாலு ராத்திரியெல்லாம் வெளியே சுத்தறதை விட்டுடு. நண்பர்களுக்காக வெளியே போனேன். விடிய விடிய ஊர் சுத்தினதுல தொண்டை கட்டிக்கிட்டுதுன்னு சொல்லாதே. இல்லேன்னா இந்தப் பாடல் வேறு யாருக்காவது போய்விடும்'' என்று சொன்னேன்.

    பாலுவும் `சரி' என்று சொல்லிப் போனதோடு சரி.

    மறுநாள் காலை 7 மணிக்கு ஏவி.எம்.மில் பாடலுக்கான மிïசிக்கையெல்லாம் கம்போஸ் செய்து விட்டேன். `டிபன் பிரேக்'கை தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் பூஜை தொடங்கியது.

    ரிகர்சல் தொடங்கி பாடலுக்கான வடிவங்களை தயார் செய்த நிலையில் 11 மணி.

    பாலு அப்போதும் வரவில்லை. ஆளாளுக்கு தேடினோம். 11-30 மணிக்கு பாலு என்னிடம் நேராக வந்து, "டேய்! தொண்டையெல்லாம் கட்டிப் போச்சுடா...'' என்று, கட்டைக்குரலில் விஷயத்தை சொன்னான்.

    "பார்த்தியா? நேத்தே நான் சொன்னேன் இல்லையா? அதையே செஞ்சிட்டு வந்து நிக்கறியே'' என்றேன்.

    என்னிடமும் பாரதியிடமும் `சாரிடா' என்று சொல்லிவிட்டு பாலு கிளம்பிவிட்டான்.

    எல்லாம் ரெடியாகிவிட்டது. ஜானகி கோரஸ் ரிகர்சல் கூட முடிந்து விட்டது.

    பாலுவுக்குப்பதிலாக யாரை பாட வைப்பது? அப்போது  `டிராக்'கை தனியாக ரெக்கார்டு செய்யும் பழக்கம் கிடையாது. மேலும் அது பூஜையின்போது பதிவு செய்யப்படும் பாட்டு. பாடுபவர் இருக்க வேண்டும்.

    என் கண்ணில் பூஜைக்கு வந்த மலேசியா வாசுதேவன் பட்டார்.

    மலேசியா வாசுதேவனை அழைத்தேன். "இந்தப் பாட்டை கத்துக்கோ'' என்று பாடலை சொல்லிக் கொடுத்தேன்.

    அதன்படி வாசுவும் பாட, பாடலை பதிவு செய்தேன்.

    மதிய உணவுக்குப்பிறகு, "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு'' பாடலை பதிவு செய்யவேண்டும்.

    இதை சப்பாணி போலவே பாட வைக்க வாசுவை தயார் செய்தேன்.

    ஆனால் வாசுவோ ரிகர்சலில் எல்லாம் சரியாக பாடிவிட்டு, "டேக் போகும்போது மாற்றி பாடிவிட்டார். `பாடத் தெரியாதவன் போல் பாடினால் நமக்கு பாடத்தெரியாது என்று எல்லோரும் நினைத்து விடுவார்களோ' எனப்பயந்து, சாதாரண பின்னணி பாடகர் போல

    பாடிவிட்டார்.இதுவரை வராத பாடலாக இருக்க வேண்டும் என நான் எடுத்த முயற்சியெல்லாம் இப்போது விழலுக்கிறைத்த

    நீராகிவிட்டது.இப்போதும் அந்தப் பாடலை நீங்கள் கேட்டுப் பாருங்கள். ஒரு அறியாத பட்டிக்காட்டான் பாட்டில் வரும் எளிமைத்தனம் அதில் இருக்காது. விவரம் புரிந்த கிராமத்தான் பாடுவது போல்தான் இருக்கும்.

    இதுபோன்ற இழப்புகள் ஒரு இசையமைப்பாளர் என்ற முறையில் ஏராளம்.

    அடுத்த பாடல் ரெக்கார்டிங் செய்யவேண்டிய நேரம் வந்தது.

    மயில் (ஸ்ரீதேவி) தன் கற்பனையில் தனக்கு வரும் காதலன் எப்படி இருப்பான் என்று கனவு காணும் மனநிலையில் பாடும் பாட்டு என்று பாரதி சொன்னார்.

    அப்போதெல்லாம் எந்த டைரக்டரும் இசையமைப்பாளரிடம் `இந்தப்பாடல் இதுபோல இருக்கலாம். அல்லது இந்த மாதிரி இருக்கலாம்' என்று அபிப்ராயமோ, ஆலோசனையோ சொல்வது கிடையாது. பாடல் சூழ்நிலையை விளக்கிவிட்டு, அத்துடன் விட்டுவிடுவார்கள். இசையமைப்பாளரும், கவிஞரும் என்ன கொடுக்கிறார்களோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.

    தேவைப்பட்டால் சிறுசிறு மாற்றம் வேண்டுமென்று கேட்பார்கள். அதை அவர்களும் உடனே செய்து விடுவார்கள்.

    அந்தப் பாடல் காட்சிக்கு சில டிïன்களை போட்டேன். எதுவும் பாரதிக்கு பிடித்த மாதிரி தெரியவில்லை. பின்னர் ஒரு டிïனை போட்டு, "பாரதி! இது நன்றாக இருக்கும்'' என்று வற்புறுத்தினேன். அதுதான் "செந்தூரப்பூவே...'' பாடல் மெட்டு. மெட்டு நன்றாக அமைந்துவிட்டதால் மேற்கொண்டு `டிïன்' எதுவும் கம்போஸ் செய்யாமல் விட்டுவிட்டேன். அதனால் அந்த டிïன்தான் அந்தக் காட்சிக்கென்று முடிவாகிவிட்டது.

    "இந்த மெட்டுக்கு கவிஞரை வைத்து பாட்டு எழுதச் சொல்லலாமா?'' என்று பாரதியிடம் கேட்டேன். "புதிதாக யாரையாவது வைத்து எழுதலாம்'' என்றார் பாரதி. அதோடு நில்லாமல், "ஏன் அமரனே எழுதட்டுமே'' என்றார்.

    அமர் உள்பட எங்கள் எல்லோருக்குமே கவிஞர் கண்ணதாசன் மட்டுமே கவிஞராகத் தெரிந்தாரேயன்றி, வேறு யாரையும் கவிஞராகக் கருத முடியவில்லை. `அமரன் எழுதட்டும்' என்று பாரதி சொன்னதற்கு நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அமரன் வேண்டாம் என்று தடுக்கவும் இல்லை.
    ரஜினிகாந்த் இலங்கைக்கு வருவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரவி கருணாணயாகே தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி விரும்பினால் இலங்கை வரலாம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
    இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கடந்த மாதம் இலவச வீடுகள் வழங்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, இலங்கை தமிழர்களுக்கு வீடுகளை வழங்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு லைகா நிறுவனத்தின் தலைவரும், ரஜினியின் `2.0' படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்தவருமான சுபாஷ்கரன் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து அவரது அழைப்பை ஏற்று ரஜினியும் இலங்கை செல்வதாக இருந்தது.

    ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் ரஜினி இலங்கைக்கு செல்லக் கூடாது என்று வலியுறுத்தியதை அடுத்து, ரஜினி தனது இலங்கை பயணத்தை ரத்து செய்தார். மேலும் தான் ஒரு நடிகன். எனது முடிவுகளை, பயணங்களை அரசியலாக்க வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.



    இந்நிலையில், இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ரவி கருணாணயாகே ரஜினி விரும்பினால் இலங்கை வரலாம் என அழைப்பு விடுத்திருக்கிறார். இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் ரஜினிகாந்த் பிரபலமானவரே என்று குறிப்பிட்ட ரவி, இலங்கையில் ரஜினிக்கு அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றார். இலங்கை தரப்பில் அவருக்கு எதிராக எந்த எதிர்ப்பும் கிடையாது. ரஜினி ஆசைப்பட்டால் இலங்கை வரலாம் என்று கூறியிருக்கிறார்.
    இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பல்வேறு முகங்களை கொண்ட பிரபுதேவா தனது நண்பர் விஜய்க்காக மீண்டும் களமிறங்கியிருக்கிறார்.
    ‘பிரேமம்’ மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியுள்ளவர் சாய் பல்லவி. அப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இதையடுத்து, மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் கவர்ந்துள்ளார்.

    இந்நிலையில், சாய் பல்லவி தற்போது நானி ஜோடியாக `ஃபிடா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் `கரு' என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக உள்ள இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.



    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. அந்த போஸ்டரை இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா வெளியிடுகிறார். `தேவி' படத்தின் மூலம் பிரபுதேவா - ஏ.எல்.விஜய் நெருங்கிய நண்பர்களாகி இருக்கின்றனர்.

    அதன் காரணமாக ஏ.எல்.விஜய் இயக்கிய `வனமகன்' படத்தை பிரபுதேவா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். ஜெயம் ரவி - சாயிஷா நடிப்பில் உருவாகி உள்ள வனமகன் படம் ரம்ஜான் வெளியீடாக வருகிற 23-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
    கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் அந்த நடிகர், சம்பள பிரச்சனையால் தனது பட வாய்ப்புகளை இழந்து வருகிறாராம்.
    தான் நடிக்கும் படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ரவுடி நடிகர், அவரது கொள்கையை தற்போது மாற்றிவிட்டாராம். அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றியை தழுவ, தற்போது கதைகளுக்கு பதிலாக சம்பளத்தை வைத்து தான் படத்தை தேர்வு செய்கிறாராம். தற்போது அவர் நடித்து வரும் படங்களையும், இனி நடிக்கப் போகும் படங்களையும் சம்பளத்தை வைத்து தான் முடிவு செய்கிறாராம்.

    சம்பளம் பிரச்சனையால் தான், சமீபத்தில் தேசிய விருது இயக்குநரின் படத்தில் இருந்தும் நடிகர் விலகினாராம். தேசிய விருது இயக்குநரின் சென்னை படத்தில் விஐபி நடிகருடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகிய ரவுடி நடிகர் சமீபத்தில் அந்த படத்தில் இருந்து விலகியிருந்தார்.



    நடிகரின் விலகலுக்கு கால்ஷீட் பிரச்சனை தான் காரணமாக கூறப்பட்டது. ஆனால் நடிகர் விலகியதற்கு கால்ஷீட் பிரச்சனை காரணமில்லையாம். சம்பள பிரச்சனையால் தான் நடிகர் விலகியதாக சென்னை படக்குழுவினரிடம் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நடிகர் தனது கொள்கைக்கு மீண்டும் திரும்பினால் அவருக்கு நல்லது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
    `பாகுபலி' படத்தில் முக்கிய காட்சியில் பிரபாஸ் செய்ததை, நடிகர் உதயநிதி ஸ்டாலின் தான் நடித்துள்ள அடுத்த படமாக `பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தில் செய்திருக்கிறார்.
    தளபதி பிரபு இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் `பொதுவாக எம்மனசுல தங்கம்'. தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் உதயநிதி கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறார். இன்றைய தலைமுறை கிராமத்திலிருந்து வசதியான இடத்தை நோக்கி போகாமல், இருக்கும் இடத்தை வசதியாக்க வேண்டும் என்ற நோக்கத்தை, கதைகளமாக்கி காமெடி கலந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் படம் இருக்கும் என்று இயக்குநர் கூறியிருக்கிறார்.

    இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபனும், டைகர் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் சூரி, உதயநிதி நண்பனாக நடித்திருக்கிறார். மேலும் மயில்சாமி, நமோ நாராயணன், சுந்தர், ரமா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.



    இதில் `பாகுபலி' படத்தின் முதல் பாகத்தில் முக்கிய காட்சியில் பிரபாஸ், சிவ லிங்கத்தை தனது தோளில் தூக்கியபடி செல்வார். அதே போல் இந்த படத்தில் ஒரு காட்சியில் அதிக எடை கொண்ட திரௌபதி அம்மனின் சிலையை, உதயநிதி தனது தலைமீது சுமந்து கொண்டு காலில் செருப்பு அணியாமல் கிராமத்தையே சுற்றி வந்து நடித்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோவில், திருவிழா சம்பிரதாயங்கள் மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக திருவிழா செட் அமைத்து, இரண்டாயிரம் துணை நடிகர்களுடன் ஐந்து நாட்கள் மதுரை, தேனியில் படமாக்கப்பட்டுள்ளது.

    டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஜுன் 9-ஆம் தேதி வெளியாகிறது. அதைத் தொடர்ந்து படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
    செரா.கலையரசன் இயக்கத்தில் ‘காக்காமுட்டை’ விக்னேஷ், ‘பாபநாசம்’ எஸ்தர் ஜோடி சேரும் ‘குழலி’ படத்தின் முன்னோட்டம்.
    ஓம் பெரியாண்டவர் மூவிஸ் சார்பில் பி.டி. குப்புசாமி தயாரிக்கும் படம் ‘குழலி’.

    இதில் ‘காக்காமுட்டை’ விக்னேஷ், ‘பாபநாசம்’ எஸ்தர் நாயகன் - நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் தீனா, ரசாத், ஜானகி, இயக்குனர் மூர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.

    ஒளிப்பதிவு - பாண்டியன், இசை - ஜோகன், பாடல்கள் - கபிலன், எடிட்டிங் - எல்.வி.கே.தாஸ், நடனம் - சங்கர், இணை தயாரிப்பு - துரை பாண்டியன், தயாரிப்பு - பி.டி.குப்புசாமி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - செரா.கலையரசன்.



    “எல்லா பெற்றோர்களுக்கும், தம் பிள்ளைகள் நன்றாக வர வேண்டும் என்ற ஆசை உண்டு. பிள்ளைகளின் பருவங்கள் மாறுபடும் பொழுது பெற்றோர்களுக்கு எதிராக மனநிலை மாறுகிறது. பிள்ளைகளின் மனநிலையை பெற்றோர்கள் ஏற்றார்களா? என்ற யதார்த்தமான பதிவை ஏற்படுத்துவதே ‘குழலி’.

    16 வயதில் நடக்கும் சம்பவங்களே 90 வயது வரை மறக்க முடியாத பதிவாக இது இருக்கும்” என்றார்.

    கம்பம், குமுளி, சுருளிப்பட்டி, மூணாறு போன்ற இடங்களில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    ×