என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நமீதா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
    `சரவணன் இருக்க பயமேன்' படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தற்போது, `பெதுவாக என் மனசு தங்கம்', `இப்படை வெல்லும்' ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக தேசிய விருது இயக்குநர் பிரியதர்ஷனுடன் இணையவிருப்பதாக நேற்று முன்தினம் உதயநிதி அவரது டுவிட்டர் பக்கத்தில தெரிவித்திருந்தார்.

    மூன்ஷீட் எண்டர்டெயிண்ட்மன்ட் நிறுவனம் சார்பில் சந்தோஷ் தயாரிக்க இருக்கும் இப்படம் ஒரு மலையாள படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது. திலீஷ் போத்தன் இயக்கத்தில், பகத் பாஷில் நடிப்பில் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `மகேஷின்ட பிரதிகாரம்'. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 



    இப்படத்தில் உதயநிதி ஜோடியாக மலையாளத்தின் முன்னணி நடிகையாக வலம் வரும் நமீதா பிரமோத்திடம் படக்குழு பேசி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே `என் காதல் புதிது' என்ற தமிழ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நமீதா பிரமோத் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்தியில் வெற்றியடைந்த ‘குயின்’ ரீமேக்கில் காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ‘தாம்தூம்’ படத்தில் நடித்த கங்கனா ரணாவத் இந்தியில் நடித்த ‘குயின்’ படம் அவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. இதையடுத்து, இந்த படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் வாங்கியிருந்தார்.

    இதையடுத்து, இப்படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. தென்னிந்திய மொழிகளில் தமிழில் இப்படத்தை ரேவதி இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. சுஹாசினி படத்திற்கான வசனத்தை எழுதப்போவதாக கூறப்பட்டது. கூடவே, படத்தின் நாயகியாக தமன்னா நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியானது. பின்னர், கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலகிவிட்டதாகவும் கூறப்பட்டது.



    இந்நிலையில் தற்போது ரேவதிக்கு பதிலாக ‘குயின்’ தமிழ் ரீமேக்கை பிரபல நடிகரும், இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவரே கன்னடத்திலும் இப்படத்தை இயக்கவிருக்கிறாராம். மேலும், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

    அதேபோல், இப்படத்தில் எமி ஜாக்சனும் நாயகியின் தோழியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மற்ற மொழிகளிலும் இவரே நாயகிக்கு தோழியாக நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    `ஏஏஏ' போஸ்டர் குறித்து லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்த கருத்தை அடுத்து சிம்பு அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவுக்கு லக்‌ஷ்மி அழைப்பு விடுத்திருக்கிறார்.
    சிம்பு நடித்துள்ள `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் ரம்ஜான் வெளியீடாக வருகிற ஜுன் 26-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கான புரமோஷன் வேலைகளில் படக்குழு தற்போது ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அவ்வப்போது சில போஸ்டர்களையும் படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் சிம்பு மற்றும் தமன்னா நிற்பது போன்ற போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டர் குறித்து, இயக்குநரும், நடிகையுமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.



    அதாவது, `ஏஏஏ' போஸ்டரில் ஆண் (சிம்பு) தனது உடலை முழுவதுமாக மறைத்திருக்கிறார், ஆனால் பெண் (தமன்னா) அரைகுறை ஆடையுடன் உடலை காட்டிக் கொண்டு நிற்க்கிறாரே? என்ற ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் இதுகுறித்த வார்த்தைப் போரும் நடந்தது. இந்நிலையில் அவரது கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக நடிகர் சிம்பு, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.

    அதனை லக்‌ஷ்மி, அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, சிம்பு என்னை தொடர்பு கொண்டு பேசினார். இதில் இருவரும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டோம். முக்கியமாக பெண்களுக்கு எதிராக, பெண்களை அவமதிக்கும் விதமாக நடக்கும் போருக்கு எதிராக சிம்பு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டதாக லக்‌ஷ்மி குறிப்பிட்டிருந்தார்.
    தம்பி ராமையாவின் மகன் நடிக்கும் படத்தின் டிரைலரை சிவகார்த்திகேயன் வெளியிடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக நடித்துவரும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. இப்படத்தின் மூலம் தெலுங்கில் வளர்ந்து வரும் கதாநாயகியான ரேஷ்மா ரத்தோர் தமிழில் அறிமுகமாகிறார். நகைச்சுவை கலந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் கருணாகரன் படம் முழுக்க வருகிறார். பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், மனோபாலா, யோக்ஜேப்பி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    ஒரு சாதாரண கிடார் இசை கலைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் ஒரு வித்தியாசமான சம்பவமும் அது தொடர்பான பல திருப்பங்களும் நிறைந்த நகைச்சுவை கலந்த பயணமே ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’.

    இது ஒரு கற்பனை கதை என்றாலும் நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் என்றோ ஒருநாள் நம் வாழ்க்கையில் கடந்து வந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் அடிப்படையிலேயே இந்த திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதால் கதாநாயகனின் வாழ்க்கையோடு நம்மை நிச்சயமாக பொருத்தி பார்த்து கொள்ள முடியும்.



    இப்படத்திற்காக மீண்டும் மீண்டும் கேட்டு மகிழும் வகையில் அட்டகாசமான பாடல்களை உருவாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான். பாடல் வரிகளை செதுக்கியிருக்கிறார் யுகபாரதி. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் குறிப்பாக ‘ஏன்டி நீ என்னை இப்படி’ என்கிற பாடல் இணையத்தில் இதுவரை 20 லட்சத்திற்கும் மேலான ரசிகர்களால் ரசிக்கப்பட்டும், நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களால் பாடி பதிவேற்றப்பட்டும் வருகிறது.

    இப்படத்திற்கு ‘அட்டகத்தி’ மற்றும் ‘குக்கூ’ படங்களின் ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி.மதன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இன்பசேகர். சில்வர் ஸ்க்ரின் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பாக சிவரமேஷ்குமார் தயாரிக்கிறார்.

    இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் காட்சியின் வெளியீட்டு விழா வரும் நாளை 8-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த டிரைலர் மற்றும் பாடல் காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். இப்படத்தை இம்மாதம் 16-ம் தேதி வெளியிடவுள்ளனர்.

    மனிஷா கொய்ராலா தன்னுடைய திருமண முறிவுக்கு தான்தான் காரணம் என்று கூறியுள்ளார்.

    இந்தி நடிகை மனிஷா கொய்ராலாவுக்கும், நேபாள தொழில் அதிபர் சாம்ராட் தஹாலுக்கும் 2010-ம் ஆண்டு காட்மாண்டுவில் திருமணம் நடந்தது. ஆனால் 2012-ம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதுபற்றி கூறியுள்ள மனிஷா...

    “திருமணம் பற்றி ஏதேதோ கனவு கண்டேன். ஆனால் எங்கள் உறவு மோசமான நிலையில் இருந்தது. எனவே, திருமண பந்தத்தில் இருந்து வெளியேறுவது நல்லது என்று கருதினேன். அதில் எந்த வருத்தமும் இல்லை. அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகு இது எனக்கு ஒத்து வராது என்பதை புரிந்து கொண் டேன். எனவே, பிரிந்தேன். இதில் யார் தவறும் இல்லை. இதற்கு நானே முழு பொறுப்பையும் ஏற்கிறேன். இது என் தப்புதான்.


    என் வாழ்க்கை, என் வேலை நிம்மதியாக இருக்கிறது. இப்படியே வாழ்ந்து விட நினைக்கிறேன். இனி என் வாழ்வில் காதல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. பிறகு பார்க்கலாம்.

    நான் புற்று நோயுடன் போராடிய போது எனக்கு நெருக்கமானவர்கள் என்னை கண்டு கொள்ளவில்லை. நோயுடன் நான் போராடியதை பார்க்க விரும்பாததால் அவர்கள் வரவில்லை என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

    விஜய் பிறந்தநாள் இந்த ஆண்டு உலக அளவில் கொண்டாடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    நடிகர் விஜய்க்கு வருகிற ஜுன் 22-ந் தேதி பிறந்தநாள் ஆகும். விஜய்யின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவருடைய ரசிகர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அதேபோல், ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையிலும் தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் விஜய் நடித்த ஹிட் படங்கள் பிரத்யேகமாக திரையிடப்படும்.

    அந்த வகையில் இந்த வருடம் விஜய் பிறந்தநாளை உலக அளவில் கொண்டாடவுள்ளனர். விஜய் பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் விஜய் நடித்த ஹிட் படங்கள் திரையிடப்படுகின்றன. அதேவேளையில், விஜய்க்கு தமிழகத்தை தாண்டி கேரளாவில் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. எனவே, கேரளாவிலும் விஜய் பிறந்தநாளையொட்டி பல்வேறு திரையரங்குகளில் விஜய் மாஸ் ஹிட் படங்களை திரையிடவுள்ளார்களாம்.



    இந்தியாவைத் தாண்டி தற்போது ஆஸ்திரேலியாவிலும் பிரபல திரையரங்கில் விஜய்யின் மாஸ் திரைப்படங்களில் ஒன்றான ‘துப்பாக்கி’ படம் திரையிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஒரு நடிகரின் பிறந்தநாளின்போது ஆஸ்திரேலியாவில் அவருடைய படத்துக்கு ஸ்பெஷல் காட்சி ஏற்பாடு செய்வது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது. 
    ஜி.கே.வெங்கடேஷ் தலையிட்டு, சம்மதிக்க வைத்தார்பாரதிராஜா டைரக்ட் செய்த முதல் படம் "16 வயதினிலே.'' ஏற்கனவே பாரதிராஜாவிடம் செய்திருந்த சபதம் காரணமாக, இந்தப் படத்துக்கு இசை அமைக்க இளையராஜா மறுத்தார்.
    ஜி.கே.வெங்கடேஷ் தலையிட்டு, சம்மதிக்க வைத்தார்பாரதிராஜா டைரக்ட் செய்த முதல் படம் "16 வயதினிலே.'' ஏற்கனவே பாரதிராஜாவிடம் செய்திருந்த சபதம் காரணமாக, இந்தப் படத்துக்கு இசை அமைக்க இளையராஜா மறுத்தார். கடைசியில், குரு ஜி.கே.வெங்கடேஷ் தலையிட்டு, இளையராஜாவை சம்மதிக்க வைத்தார்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "16 வயதினிலே கதையைக் கேட்டு ராஜ்கண்ணு `ஓ.கே' சொன்னதும், கதாநாயகனாக யாரைப்போடலாம் என்று கேட்டார். அப்போது சிவகுமார் நடித்த "அன்னக்கிளி'' போன்ற படங்கள் நன்றாகப் போனதால் ராஜ்கண்ணு பாரதிராஜாவிடம், "சிவகுமாரைப் போடலாமே'' என்று கூறியிருக்கிறார்.

    பாரதிராஜாவோ திட்டவட்டமாக மறுத்து, "இந்தக் கதைக்கு கமலஹாசன்தான் சரியாக இருப்பார்'' என்று தன்பக்க காரணங்களை எடுத்து வைத்திருக்கிறார். அதனால் "கமலஹாசனே நடிக்கட்டும்'' என்று ராஜ்கண்ணு கூறிவிட்டார்.

    பாரதி சொன்னது சரிதான். சிவகுமார் நன்றாகவே செய்திருக்கலாம். கமலஹாசன் இடத்தில் சிவகுமாரை இப்போது நம்மால் கற்பனைசெய்து பார்க்க முடியுமா?

    இசையமைப்பாளர் யார்?

    அடுத்து இசையமைக்க யாரைப் போடலாம் என்ற பேச்சு வந்தபோது, பாரதி, "இளையராஜாவைப் போடலாம்'' என்று என் பெயரை சொல்லியிருக்கிறார்.

    "என்ன பாரதி! விளையாடறீங்களா? இளையராஜாவாவது கிடைக்கிறதாவது? அவர் இருக்கிற பிஸியில இதுமாதிரி படத்துக்கெல்லாம் வருவாரா?'' என்று கேட்டிருக்கிறார், ராஜ்கண்ணு.

    "இல்லையில்லை. இளையராஜா என் நண்பன்தான்'' என்று பாரதி சொல்ல, ராஜ்கண்ணு நம்பவே இல்லை.

    உடனடியாக நம்ப வைக்க ஏதாவது செய்தாக வேண்டுமே என்று எண்ணிய பாரதி, என் அண்ணன் பாஸ்கரை அழைத்துக்கொண்டு ராஜ்கண்ணுவை போய் பார்த்திருக்கிறார்.

    "வாங்க பாரதி'' என்றவர், "இவர் யாரு?'' என்று பாஸ்கரை கேட்டிருக்கிறார். "இவர் இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர்'' என்று பாரதி சொல்ல, உடனே பாஸ்கருக்கு ராஜமரியாதை கிடைத்திருக்கிறது. இப்போது `உண்மையிலேயே இளையராஜா பாரதிராஜாவின் நண்பர்தான் போலிருக்கிறது' என்று நம்ப ஆரம்பித்திருக்கிறார்.

    ராஜ்கண்ணு பாஸ்கரிடம், "தம்பியிடம் சொல்லி படத்துக்கு இசையமைக்க ஏற்பாடு செய்யவேண்டும்'' என்று சொல்லியிருக்கிறார்.

    "அதுக்கென்ன சார்! இதில் ஒரு பிரச்சினையும் இல்லே. தம்பிகிட்ட நான் சொல்றேன்'' என்று பாஸ்கரும் தன் பங்குக்கு படுகூலாக சொல்லிவிட்டார்.

    அதே வேகத்தில் என்னிடம் வந்து, "டேய்.. பாரதிக்கு படம் வந்திருக்கிறது. நாமதான் மிïசிக்'' என்று சொன்னார்.

    நான் அண்ணனிடம், "பாரதியின் இந்தப் படத்திற்கு நான் இசையமைக்கப்போவதில்லை'' என்றேன்.

    அண்ணன் அதிர்ந்து போனார். "என்னடா சொல்றே?'' என்று, தன் அதிர்ச்சியை வார்த்தைகளிலும் வெளிப்படுத்தினார்.

    பாரதிக்கும், எனக்கும் ஏற்கனவே இருந்த பந்தயம் பற்றி அண்ணனிடம் விவரித்தேன். "பாரதியின் முதல் படத்துக்கு அண்ணன் ஜி.கே.வெங்கடேஷ்தான் இசையமைக்க வேண்டும். இரண்டாவது படத்துக்குகூட நான் இசையமைக்கும்படி ஜி.கே.வி.தான் சொல்ல வேண்டும்'' என்றேன்.

    பாஸ்கருக்கு என் பிடிவாத குணம் தெரியும். ஒரு முடிவெடுத்தால் அதில் இருந்து என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்பதை அறிவார். அதனால் பாரதியை சந்தித்தவர், "விடு! எங்கே போயிடப்போறான்? இரண்டு மூணு நாள் விட்டுப் பிடிச்சா எல்லாம் சரியாப் போயிடும்'' என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்.

    அவர் சொன்ன மூன்று நாள் மட்டுமல்ல... மூன்று வாரம் போனபோதும் என் நிலை அதுவாகத்தான் இருந்தது.

    வாரங்கள் ஓடி மாதங்களானபோது, சகோதரர்களுக்குள் பிரச்சினை ஆகிவிட்டது. பாஸ்கரும், அமரும் (கங்கை அமரன்) என்னை பாரதி படத்துக்கு இசையமைக்க வற்புறுத்தினார்கள்.

    பாரதியோ, இந்த காலக்கட்டத்தில் என்னைப் பார்க்க வரவேயில்லை. நானும் இறங்கி வருவதாக இல்லை.

    ராஜ்கண்ணுவோ, "என்னாச்சு? என்னாச்சு?'' என்று என் விஷயமாய் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார்.

    இனியும் பொறுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்த பாஸ்கர், நேராக ஜி.கே.வி.யிடம் போய்விட்டார். அவரிடம் முழு விஷயத்தையும் சொல்லியிருக்கிறார்.

    ஜி.கே.வி. என்னை கூப்பிட்டு அனுப்பினார். என்னிடமும் விஷயத்தைக் கேட்டுக்கொண்டவர், "சரிடா! போ! வேலையைச் செய்''

    என்றார்."இல்லண்ணா! நான் சொன்னா சொன்னதுதான்'' என்றேன்.

    "என்ன, சொன்னா சொன்னதுதான்! நான் இசையமைக்கச் சொன்னாத்தான் பாரதி படத்துக்கு இசையமைப்பேன்னு சொல்லியிருக்கே அதானே?'' ஜி.கே.வி. கேட்க, "ஆமா! அதுமட்டுமில்ல. பாரதிக்கு முதல் படம் நீங்கதான் இசையமைக்கணும். இரண்டாவது படத்தைக்கூட நீங்க சொன்னாத்தான் நான் இசையமைக்கறதா ஐடியா.''

    அவருக்கு கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்தது. "என்னடா இதெல்லாம், சின்னப்பசங்க மாதிரி! நான்தான் சொல்றேனில்லே... போடா, போய்ச் செய்'' என்றார். இதற்குப்பிறகும் மறுக்க முடியவில்லை. ஒத்துக்கொண்டேன்.

    பாடல் பதிவுடன் பூஜை என்று முடிவு செய்யப்பட்டது. கம்போசிங்கிற்காக ராஜ்கண்ணுவின் ஆபீசுக்குப் போனேன்.

    பூஜைப் பாடலாக, சப்பாணியை வெறுத்து வந்த மயிலுக்கு மனமாற்றம் ஏற்பட்டு, அந்த மனமாற்றம் சப்பாணிக்கும் தெரிய வருகிற ஒரு பாடலை கம்போஸ் செய்யலாம் என்று பாரதி சொன்னார்.

    இதற்கிடையில், என்னுடைய ஒரு டிïனை என்னைக் கேட்காமல் பாரதியிடம் பாஸ்கர் பாடிக்காட்டி, "ஓ.கே''யும் செய்து வைத்திருக்கிறார். இது எனக்குத் தெரியாது. கம்போசிங் தொடங்கும் முன்பு அதைப் பாடிக்காட்டச் சொன்னார்கள்.

    `சும்மா கேட்பதற்காகத்தான் போலிருக்கிறது' என்று எண்ணி நான் அந்த டிïனை பாடிக்காட்டினேன்.

    "இதுவே போதும். இது ஓ.கே'' என்றார் பாரதி.

    அந்த டிïனை பஞ்சு சார் (பஞ்சு அருணாசலம்) ஏற்கனவே அவரது `கவிக்குயில்' படத்துக்கு "ஓ.கே'' செய்து இருக்கிறார்.

    இப்போது இவர்களும் "ஓ.கே'' சொல்லியிருக்கிறார்கள்!

    எனக்கு மனசுக்கு கஷ்டமாயிருந்தது. என் இக்கட்டான நிலையை பாரதியிடம் விளக்கினேன்.

    பாரதியோ, "பாஸ்கர் இதை பாடிப்பாடி அதற்கேற்ப எப்படி எப்படி `ஷாட்ஸ்' எடுக்கவேண்டும் என்று மனதில் நிறைய கற்பனைகளை செய்து வைத்துவிட்டேன்'' என்றார். அதோடு, "நான் நினைத்திருக்கும் அந்தக் காட்சிக்கு இதுபோல எந்த டிïனுமே அமையாது'' என்றும் உறுதிபடக் கூறிவிட்டார்.

    நான் விடவில்லை. "அது எப்படி பாரதி? நான் பஞ்சு சார் செலக்ட் பண்ணின டிïனை `இது பாரதிக்கு வேணுமாம்' என்று எப்படிச் சொல்வேன்? இதைவிட நல்லா டிïனா உனக்குப் போடறேன்'' என்றேன்.

    பாரதி வேண்டா வெறுப்பாக, "ம்... ம்... உன் இஷ்டம்'' என்றார்.

    டிïன் கம்போஸ் செய்யத் தொடங்கியபோது, உற்சாகமின்றி உட்கார்ந்திருந்தார். என்ன பாடினாலும் கவனிக்காமல் சிரத்தையின்றி இருந்தார். கடைசியாக ஒரு டிïனை அடிக்கடி பாடிக்காட்டி "இது நல்லா வரும்'' என்றேன்.

    பாரதி அரை மனதுடன்தான் அந்த டிïனுக்கு `ஓ.கே' சொன்னார். பாடலை எழுத கவிஞர் கண்ணதாசனை அழைக்கலாம் என்று

    சொன்னேன்."கவிஞருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமோ? அதற்கு புரொடிïசர் என்ன சொல்வாரோ?'' என்றார், பாரதி.   "அதை நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்றேன்.

    கவிஞர் அப்போது ஒரு பாட்டுக்கு ஆயிரமோ ஆயிரத்து ஐநூறோ வாங்கிக் கொண்டிருப்பார். நான் கவிஞரின் உதவியாளர் கண்ணப்பனிடம், "இது சின்னக் கம்பெனி படம். பாட்டுக்கு 750 ரூபாய் வாங்கிக்கச் சொல்லுங்க'' என்றேன்.

    `காலா' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்புகிறார். ரசிகர்களை மீண்டும் சந்திக்கவும் முடிவு செய்துள்ளார்.
    நடிகர் ரஜினிகாந்தின் 164-வது படம் ‘காலா’. தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் இதன் படப்பிடிப்பு கடந்த 28-ந் தேதி மும்பையில் தொடங்கியது. ரஜினியுடன் சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வருகிறார்கள். இதில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார்.

    இது நெல்லையில் இருந்து மும்பை சென்று வாழ்பவர்கள் தொடர்பான கதை. எனவே, தாராவி உள்ளிட்ட பகுதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரஜினி வயதான தோற்றத்தில் நடித்து வருகிறார். அவர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

    10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற ‘காலா’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நாளை முடிவடைகிறது. இதையடுத்து, ரஜினி நாளை சென்னை திரும்புகிறார். மும்பையில் பருவ மழை தொடங்கிவிட்டது. எனவே அடுத்து சென்னையில் ‘காலா’ படப்பிடிப்பு நடைபெறுகிறது.



    சென்னையில் ஏற்கனவே தாராவி செட் போடப்பட்டுள்ளது. இங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. சில தினங்கள் ஓய்வுக்குப் பிறகு ரஜினி சென்னை படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.

    இதற்கிடையே இந்த மாதம் நடுவில், அல்லது 3-வது வாரத்தில் ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 15 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை ரஜினி சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    விடுபட்ட மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை இந்த மாதம் சந்திப்பார். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது ரஜினி அவரது அரசியல் பிரவேசம் பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பதில் அளிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

    `பாகுபலி' வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் தற்போது சாஹோ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை முடித்த பிறகு ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் மீண்டும் நடிக்க இருக்கிறாராம்.
    ‘பாகுபலி 2’ வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் இந்தியா முழுவதும் தெரிந்த ஹீரோ ஆகி இருக்கிறார். தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவருக்கு இந்தி படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. இப்போது பிரபாஸ் ‘சாஹோ’ என்ற படத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

    இதிலும் பிரபாஸ் ஜோடி அனுஷ்கா என்று கூறப்படுகிறது.

    இந்தி, தெலுங்கு, தமிழில் தயாராகும் இந்த படத்தை சுஜீத் இயக்குகிறார். ரூ.150 கோடி செலவில் உருவாகும் இதை வம்சி கிருஷ்ண ரெட்டி தயாரிக்கிறார். தற்போது அமெரிக்காவில் இருக்கும் பிரபாஸ் இருந்து திரும்பியதும் படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர்.



    இது தவிர ‘பாகுபலி-2’ படத்தின் இந்தி பதிப்பை வெளியிட்ட இயக்குனர் கரண் ஜோஹர், பிரபாசை நேரடி இந்தி படத்தில் ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க வைக்க விரும்பினார். அதை பிரபாசிடமே சொன்னார். இது வரை பதில் சொல்லாமல் இருந்த பிரபாஸ், இப்போது அதை ஏற்க முடிவு செய்துள்ளார். இது பற்றி கூறிய அவர், “இந்தி பட உலகில் உடனே கால் வைக்கும் திட்டமில்லை.

    ஆனால் இது இன்ட்ரஸ்டிங் ஆக உள்ளது ராஜமவுலியுடன் இத்தனை ஆண்டுகள் வேலை செய்துள்ளேன். மீண்டும் அவருடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் வசதியானது” என்று தெரிவித்துள்ளார்.
    பிரபாஸ் உடன் கிசுகிசுக்கப்படும் அனுஷ்கா குறித்து வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
    தமிழ், தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா. பிரபாஸ் உடன் அவர் இணைந்து நடித்த பாகுபலி படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், `பாகுபலி’ படத்தில் நடிக்கும் போதே பிரபாசுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி கிசுகிசுக்கப்பட்டன. இதை இருவரும் உடனடியாக மறுக்கவில்லை.

    இதுகுறித்து கடந்த வாரம் அனுஷ்கா தெரிவித்த போது, நானும் பிரபாசும் படத்தில் பொருத்தமான ஜோடி தான். ஆனால் உண்மையில் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து நல்ல நண்பர்கள் என்றாலும் காதலர்கள் என்று தான் அர்த்தம் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. இதனால் கடுப்பான அனுஷ்கா தன்னை பற்றி தவறான செய்திகள் பரப்பினால் அவர்களை சட்டத்தின் மூலமாக சந்திப்பேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.



    முன்னதாக இருவரும் காதலிப்பதாக வதந்தி கிளப்பிவிட்டதற்காக அனுஷ்கா அவரது உதவியாளர் ஒருவரை வேலையில் இருந்து நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அனுஷ்கா தற்போது `பாக்மதி' என்ற தெலுங்கு படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

    ‘பாகுபலி-2’ படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ படத்திலும் அவருக்கு அனுஷ்காவே ஜோடியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
    மதுரையில் நேற்று நடைபெற்ற மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற விஜய் சேதுபதி, அவரது கண்ணை தானம் செய்துள்ளதாக தெரிவித்தார். அவரது ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. படத்தில் நடிப்பதோடு நிற்காமல், சமூக நலத்திற்காக அவ்வப்போது குரல் கொடுத்தும் வருகிறார். அந்த வகையில் சினிமா துறையில் உள்ள பல்வேறு துறையை சேர்ந்த 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் தங்க நாணயம் வழங்கியிருந்தார்.

    இந்நிலையில், நேற்று மதுரையில் உள்ள பிரபல தனியார் கண் மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழா நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, கே.வி.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் மருத்துவமனையை திறந்து வைத்த விஜய் சேதுபதி கண் தானம் குறித்து பேசினார்.



    அதில் அவர் கூறியதாவது,

    தானத்தில் சிறந்தது கண்தானம் என்பதால், எனது கண்ணை தானம் செய்துவிட்டேன். பார்வை இல்லாமல் தவிக்கும் அனைவருக்கும் பார்வை கிடைக்க வேண்டும். அவர்களும் இந்த உலகத்தை எட்டிப் பார்க்க வேண்டும். அதற்கு அனைவருமே அவர்களது கண்களை தானம் செய்ய உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் தனது ரசிகர்களையும் கண் தானம் செய்யச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார்.
    முல்லை, கோதண்டம் தமிழ் சினிமாவின் அடுத்த கவுண்டமணி செந்தில் என்று நேற்று சென்னையில் நடைபெற்ற ஒண்டிக்கட்ட படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் பரணி பேசினார்.
    `பெரியண்ணா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகமானவர் பரணி. `பார்வை ஒன்றே போதுமே', `சார்லி சாப்ளின்', `சுந்தரா டிராவல்ஸ்' உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், தற்போது `ஒண்டிக்கட்ட' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

    பிரண்ட்ஸ் சினி மீடியா பட நிறுவனம் சார்பில், மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

    பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர்களுடன் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.



    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர்கள் தீனா, எஸ்.ஏ.ராஜ்குமார், சத்யா, அம்ரீஷ், இயக்குநர்கள் சக்தி சிதம்பரம், மனோஜ்குமார், பாரதிகணேஷ், சாய்ரமணி, விஜய்சந்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பரணி தெரிவித்ததாவது, ஒரு நல்ல கதை அமைந்ததால் `ஒண்டிக்கட்ட' படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறேன். ஒரு உண்மைக் கதையை நல்ல திரைக்கதையாக்கி அதை படமாக்கி இருக்கிறோம். தையமுத்து, நல்லதம்பி, பஞ்சவர்ணம் என்ற மூன்று கதாப்பாத்திரங்கள் கதையின் உயிர் நாடி. முல்லை, கோதண்டம் இருவரும் கவுண்டமணி - செந்தில் மாதிரி காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். பாடல்களுக்கு நானே இசையமைத்து இருக்கிறேன். பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பும் என்றார்.
    ×