search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AAA"

    ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' பட பிரச்சனையில், அவதூறு பரப்பியதாக நடிகர் விஷால் மீது சிம்பு வழக்கு பதிவு செய்த நிலையில், விஷால் பதிலளிக்க ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #AAA #STR #Vishal
    மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் நடிகர் சிம்பு நடித்து வெளியான படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்'. இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர் சிம்புக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசப்பட்டது. ரூ.1 கோடியே 51 லட்சம் மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படம் தோல்வி அடைந்தது. இதையடுத்து சிம்புவுக்கு பாக்கித் தொகை வழங்கப்படவில்லை.

    இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு புகார் செய்தார். அதேபோல, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் புகார் செய்தார்.

    இந்த புகாரை விசாரித்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், சிம்புவுக்கு எதிராகவும், மைக்கேல் ராயப்பனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிம்பு குறித்து, அவதூறு செய்தியை விஷால் பரப்பியதாகவும் கூறப்பட்டது.



    இதனால், நடிகர் விஷாலிடம், ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் சிம்பு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், விஷாலுக்கு எதிராக நான் செயல்பட்டேன். இந்த பகையை மனதில் வைத்து, இந்த விவகாரத்தில்எனக்கு எதிராக விஷால் செயல்படுகிறார். அவர் உள்நோக்கத்துடன், எனக்கு எதிராக அவதூறு பரபரப்பி உள்ளார். எனவே, எனக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். அதற்குள் நடிகர் விஷால் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். #AAA #STR #Vishal

    சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தை தடை செய்ய ஏஏஏ படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் முயற்சி செய்து வருவதாக சிம்பு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #STR
    சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். சிம்பு 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டு 27 நாட்களே நடித்து கொடுத்தார் என்றும், படப்பிடிப்பில் ஒத்துழைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.

    இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புவிடம் விளக்கம் கேட்டது. தனக்கு நஷ்ட ஈடு கொடுக்காமல் புதிய படங்களில் சிம்பு நடிக்கக்கூடாது என்று மைக்கேல் ராயப்பன் வற்புறுத்திய நிலையில், மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்து அந்த படமும் ரிலீசாகிவிட்டது.



    தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்த நிலையில் மைக்கேல் ராயப்பன் மீண்டும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “சிம்புவை வைத்து படம் எடுக்கக்கூடாது என்ற தயாரிப்பாளர் சங்க முடிவை சுந்தர்.சி மீறி இருப்பது கண்டிக்கத்தக்கது. பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடுகிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்கம் ஓரிரு நாளில் கூடி இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டுவதாக தெரிவித்து உள்ளது” என்றார்.

    இந்த நிலையில் விஷாலும், மைக்கேல் ராயப்பனும் சிம்பு படத்தை வெளிவரவிடாமல் தடுப்பதாக சிம்பு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளனர். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. #STR #VandhaRajavaathaanVaruven

    ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை தராமல் சிம்பு படங்களில் நடிக்கக்கூடாது என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். #STR #MichaelRayappan
    சிம்பு நடிப்பில் கடைசியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இந்த படம் தோல்வியடைந்தது. சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்தார். 

    ‘‘சிம்பு 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டு 27 நாட்கள் மட்டுமே நடித்து கொடுத்தார். டூப் நடிகரை வைத்து பல காட்சிகளை படமாக்கினோம். படம் முடிந்த நிலையில் அதை இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்றார். இரண்டாம் பாகத்தில் அவர் நடித்துக்கொடுக்கவில்லை. படப்பிடிப்பில் அவர் ஒத்துழைப்பு அளிக்காததால் படம் திரைக்கு வந்து நன்றாக ஓடவில்லை. இதனால் ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதை சிம்பு ஈடு செய்ய வேண்டும்’’ என்று புகார் மனுவில் கூறியிருந்தார். 

    இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் விசாரணை நடத்தியது. ஆனாலும் இரு தரப்புக்கும் இடையே இன்னும் சமரசம் ஏற்படவில்லை. 



    இந்த நிலையில் சிம்பு செக்கச்சிவந்த வானம் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு மைக்கேல் ராயப்பன் எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘‘சிம்புவால் நஷ்டமடைந்ததற்கு எனக்கு நியாயம் வேண்டும். இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தை நம்பி இருக்கிறேன். எனது பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் சிம்பு வேறு படங்களில் நடிக்கக்கூடாது. இப்போது அவர் சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும், ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் வெளியான தகவல் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்புகொண்டு மீண்டும் புகார் செய்து இருக்கிறேன். படப்பிடிப்பு நடத்த அனுமதிக்ககூடாது. தயாரிப்பாளர் சங்கம் எனக்கு நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும்’’

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #AAA #STR #Simbu #MichaelRayappan #AnbanavanAsaradhavanAdangadhavan

    ×