என் மலர்
முத்தையா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் - மஹிமா நம்பியார், பூர்ணா, சனுஷா நடிக்க உள்ள கொடிவீரன் படத்தில் அவருக்கு வில்லாக நடிக்க இயக்குநர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
‘குட்டிப்புலி’ படத்தை தொடர்ந்து சசிகுமார் - முத்தையா மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘கொடிவீரன்’. இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. மஹிமா நம்பியார், பூர்ணா, ‘ரேணிகுண்டா’ நாயகி சனுஷா உள்ளிட்ட மூன்று கதாநாயகிகள் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க உள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படத்தை சசிகுமார் அவரது சசிகுமார் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரிக்கவுள்ளார்.

இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் அர்ஜுனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் படக்குழு இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், `மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இப்படத்தில் சசிகுமாருக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, அவரது அடுத்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் இணைந்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மகேஷ் பாபு தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `ஸ்பைடர்' படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. `ஸ்பைடர்' மூலம் மகேஷ் பாபு நேரடியாக தமிழில் அறிமுகமாகிறார்.
இந்த படத்தை முடித்து பிறகு, அடுத்ததாக கோரதாலா சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் மகேஷ் பாபு நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் நடிகர் சரத்குமாரும் நடிக்க இருக்கிறாராம். மகேஷ் பாபுவின் அப்பா கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சரத்குமார் தற்போது தமிழில் `அடங்காதே', `சென்னையில் ஒரு நாள்-2', `ரெண்டாவது ஆட்டம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதுதவிர மலையாளம், தெலுங்கு, கன்னடத்திலும் பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரையில் பிரபலமான ப்ரியா பவானி ஷங்கர் வெள்ளித்திரையில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சந்தானம், சிவகார்த்திகேயன் என பலரும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து நடிகர்களாக உயர்ந்திருக்கின்றனர். அந்த வகையில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான ப்ரியா பவானி ஷங்கர் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார்.
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ப்ரியா பவானி ஷங்கர். பின்னர் சின்னத்திரையில் ஒரு சில தொடர்களிலும் நடித்து வந்தார். பின்னர் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றினார்.

இந்நிலையில், தனது படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ள ப்ரியா, விரைவில் திரைப்படம் ஒன்றில் நடிகையாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இதுகுறித்து ப்ரியா தரப்பில் இருந்து தெரிவிக்கப்படும் தகவல்களாவது,
படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகஉள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆந்திராவில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்த சரித்திர கதையான ‘கவுதமி புத்ர சாதகர்ணி’ படத்தின் முன்னோட்டம்.
‘பாகுபலி-1’ ‘பாகுபலி-2’ படங்களை போன்ற மற்றொரு சரித்திர படம் ‘கவுதமி புத்ர சாதகர்ணி’.
பாலகிருஷ்ணாவின் 100 வது படமான இது ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி உள்ளது.
இதில் நாயகி ஸ்ரேயா, கபீர்பேடி தணிகலபரணி, சுபலே காசுதாகர் இவர்களுடன் இந்தி நடிகை ஹேமாமாலினி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - ஞானசேகர், இசை - சிரஞ்சன், நடனம் - பிருந்தா, ஸ்வர்ணா, ஸ்டண்ட் - ராம்லஷ்மண், பாடல்கள் - வைரமுத்து, மருத பரணி. வசனம், தமிழாக்கம் - மருதபரணி.

இயக்கம் - கிரிஷ். இவர் தமிழ், தெலுங்கு, இந்தியில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.
ஆந்திராவில் 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு 150 கோடியை வசூலித்த படம் இது.
“இந்த கதை நடந்தது முதலாம் நூற்றாண்டில். இந்த முழு பாரத கண்டத்தின் வடக்கே நஹபாணன் தெற்கே சாதகர்ணி ஆண்டு வந்தனர். கொடுக்கோல் ஆட்சி செய்த நஹ பாணனை வீழ்த்த, சாதகர்ணி அம்மா கவுதமியின் ஆசிர்வாதத்துடன் போருக்கு கிளம்பினான். வெற்றி வீரன் ஆனான் அவனை தாயின் பெயரை சேர்த்து மக்கள் பாராட்டினார்கள் என்பது கதை” என்று படக்குழுவினர் தெரிவித்தனர். இதன் படப்பிடிப்பு மொராக்கோ ஜார்ஜியா மற்றும் மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது. 80 நாட்களில் படப்பிடிப்பை முடித்து இயக்குனர் பாராட்டு பெற்றார்.
ஆந்திராவில் சாதனை படைத்த இந்த படம் அதே பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு திரைக்கு வருகிறது.

இளையராஜாவை, தனது 3 படங்களுக்கு இசை அமைக்க "ஏவி.எம்'' அதிபர் மெய்யப்ப செட்டியார் ஒப்பந்தம் செய்தார்.

"அன்னக்கிளி'' படத்திற்குப் பிறகு இளையராஜாவின் இசையில் வெளிவந்த சில படங்கள், எதிர்பார்த்த வெற்றியைப் பெற+வில்லை. என்றாலும் இசையமைப்புப் பணியில் தீவிரமாகவே இருந்தார் இளையராஜா.
இந்த நேரத்தில் அவர் கொஞ்சமும் எதிர்பார்த்திராத சம்பவம் நடந்தது. அது ஏவி.எம். பட அதிபர் மெய்யப்ப செட்டியாரிடம் இருந்து வந்த அழைப்பு.
அதுபற்றி இளையராஜா கூறுகிறார்:
"இசையமைத்த பாடல்கள் பேசப்பட்டாலும், அந்தப் படங்கள் வெற்றிகரமாக ஓடினால்தானே படைப்பாளிக்கான திருப்தி கிடைக்கும். "அன்னக்கிளி''க்கு அடுத்து பெரிய வெற்றியை எதிர்பார்த்த நேரத்தில்தான் ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஏவி.எம். ஸ்டூடியோவில் அவரை சந்திக்கப் போனேன்.
என்னைப் பார்த்ததும் "நீங்கள்தான் இளையராஜாவா?'' என்று கேட்டவர், நேரடியாக விஷயத்துக்கு வந்தார். "நீங்கள் ஏவி.எம். சம்பந்தப்படும் மூன்று படங்களுக்கு இசையமைக்க வேண்டும்'' என்றார்.
ஏவி.எம். அவர்களே கேட்கிறார். என்ன சொல்வது என்று யோசனையில் இருந்தபோது, அவரே "என்ன சம்பளம் வாங்குகிறீர்கள்?'' என்று கேட்டார்.
இதற்கும் என் பதில் வருவதற்குள் அவரே தொடர்ந்தார். "நாங்கள் எடுக்கும் முதல் படத்துக்கு இவ்வளவு தருகிறோம்'' என்று ஒரு தொகையைச் சொன்னார். இரண்டாவது படத்துக்கு அதைவிட ஐயாயிரமும், மூன்றாவது படத்துக்கு இன்னும் ஐயாயிரமும் சேர்த்துத் தருகிறோம்''
என்றார்.இப்படிச் சொன்னதோடு, "மூன்று படத்துக்குமாக இதை அட்வான்சாக வைத்துக் கொள்ளுங்கள்'' என்று ஒரு தொகையை என் கையில் வைத்தார். ஐயாயிரம் ரூபாய் இருந்தது.
சந்தோஷமாக விடைபெற்று வந்தேன்.
இதற்கிடையே பாரதிராஜா, கிருஷ்ணன் நாயர், சங்கரய்யர், அவினாசி மணி போன்ற பல டைரக்டர்களிடம் உதவியாளராக இருந்து, அந்த அனுபவத்தில் சொந்த ஊரான பொள்ளாச்சியில் இருந்து படம் தயாரிக்கும் ஆர்வத்துடன் வந்திருக்கிறார் ராஜ்கண்ணு.
வந்த வேகத்தில் பாரதிராஜாவை சந்தித்து தன் விருப்பத்தை சொன்னார்.
பாரதிராஜா ஏற்கனவே என்.எப்.டி.சி. நிதி உதவியுடன் தயாரிக்க தயார் நிலையில் வைத்திருந்த "மயில்'' படத்தின் கதையைச் சொல்ல, ராஜ்கண்ணுவுக்கு பிடித்துவிட்டது. "மயில்'' கதையை படமாக்கும் முடிவுக்கு வந்தார். இந்தப்படம் மூலமாக டைரக்டராகிவிட்ட பாரதிராஜாவுடன், நான் இசையமைப்பாளராக கைகோர்ப்பேன் என்பது நானே எதிர்பார்த்திராத விஷயம்.
அப்போது நடிகர் திலகம் சிவாஜியை வைத்து, நடிகர் பாலாஜி தொடர்ச்சியாக படங்கள் எடுத்து வந்தார். பாலாஜி ஒரு மலையாளப்படத்தை தமிழில் எடுக்கப்போவதாகவும், நான் இசையமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மலையாளப்படத்தை எனக்கு திரையிட்டுக்
காட்டினார்.தமிழில் அதற்கு "தீபம்'' என்று பெயர் சூட்டினார்கள். ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதினார். இவர் பார்ப்பதற்கு என் அண்ணன் `பாவலர்' போலவே இருப்பார். சிரிப்பது, பேசுவது எல்லாமே எனக்கு அண்ணனை ஞாபகப்படுத்தும். என்னவொரு வித்தியாசம் என்றால் அண்ணன் கறுப்பு.
இந்த `தீபம்' படம்தான் என் இசை வாழ்வில் எனக்கு இரண்டாவது வெற்றிப்படமாக அமைந்தது.
அதுவரை அண்ணன் சிவாஜியை பார்த்ததில்லை. வாகினி ஸ்டூடியோவில் `தீபம்' பட பூஜை நடந்தபோது, சிவாஜி வந்திருந்தார். பாலாஜியும், ஏ.எல்.நாராயணனும் என்னை சிவாஜியிடம் அறிமுகப்படுத்தினார்கள்.
அப்போது எனக்கு டைரக்டர் மகேந்திரன் (அப்போது அவர் டைரக்டர் ஆகியிருக்கவில்லை) சொன்ன ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.
அப்போது, சிவாஜி நடித்து வெற்றிகரமாக ஓடிய "தங்கப்பதக்கம்'' படத்தின் வசனகர்த்தா, மகேந்திரன்.
அவரும் கதாசிரியர் - டைரக்டர் குகநாதனும் சிவாஜியை பார்த்துவர அவரது வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். அவர் அவர்களிடம் பேசினாரே தவிர, உட்காரச் சொல்லவில்லை.
அதே நேரத்தில் வசனகர்த்தா பாலமுருகன் வந்திருக்கிறார். அவரைப் பார்த்ததும் "வாடா பாலமுருகா! உட்கார்!'' என்று உட்காரச் சொல்லியிருக்கிறார்.
பாலமுருகனோ மகேந்திரன் நிற்பதைப் பார்த்து "உட்காருங்கள்'' என்று சொல்லிய பிறகே சிவாஜி "உட்கார், மகேந்திரா!'' என்று சொன்னார்.
பாலமுருகன் வசனம் எழுதி சிவாஜி நடித்த "ராஜபார்ட் ரங்கதுரை'' தோல்வி அடைந்திருந்த நேரம் அது.
சிவாஜியின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட மகேந்திரன், "இல்லண்ணே! நான் இப்படியே நிற்கிறேன்'' என்று சொல்லியிருக்கிறார்.
சிவாஜியை "தீபம்'' பட செட்டில் பார்க்கப் போகிற நேரத்தில் மகேந்திரன் சொன்ன சம்பவம் நினைவுக்கு வர, இதோ மேக்கப் ரூமில் இருந்த சிவாஜியை நெருங்கி விட்டேன். பாலாஜி என்னை சிவாஜியிடம் அறிமுகப்படுத்தினார். உடனே அவர், பாலாஜியையும், ஏ.எல்.நாராயணனையும் உட்காரச் சொன்னார். அவர்கள் உட்கார்ந்தார்கள். அவர்களுடன் நானும் `படக்'கென உட்கார்ந்துவிட்டேன். அதிலிருந்து என்னை எங்கே கண்டாலும் உடனே உட்காரச் சொல்லிவிடுவார்.
பிற்காலத்தில் இதை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். அவர் முன் நின்றால் என்ன தவறு? உட்கார்ந்தால் மட்டும் சிவாஜியோடு சரி சமம் ஆகிவிடுவேனா! என்று என்னையே நான் பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
பெரியவர்களுக்கு மரியாதை அளிக்கும் பண்பு இளைய தலைமுறையிடம் எப்படி மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். அதாவது `அன்றைய' நானே உதாரணம்!
தீபம் படம் 100 நாள் ஓடி சாந்தி தியேட்டரில் விழா எடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து டைரக்டர் ஏ.சி.திரிலோகசந்தரிடம் இருந்து வந்ததே "பத்ரகாளி'' படத்துக்கான அழைப்பு.
இங்கேதான் முதன்முதலாக கவிஞர் வாலி என் இசையமைப்பில் பாடல் எழுதினார். அப்போது எனக்கும், அவருக்குமான ஒரு பழைய சம்பவத்தை வாலி நினைவுபடுத்தினார்.
பிரசாத் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் `பிதாயி' என்ற இந்திப்படம் வந்தது. இந்தப்படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்தார் தயாரிப்பாளர். படத்துக்கு `பிரியாவிடை' என்று பெயர் வைக்கப்பட்டது.
இசை ஜி.கே.வெங்கடேஷ். இந்திப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் `ஒரு சீட்டுக்கட்டு ராஜாராணி' போல நாயகன் - நாயகியை மாற்றி, முழுக்க முழுக்க `ஸ்லோமோஷனில்' பாடல் முழுவதையும் உதட்டசைவு மாறாத வகையில் படமாக்கி இருந்தார். இந்த இந்திப்பாடல் `ஹிட்' ஆனதால் அதே மெட்டை தமிழிலும் போட எல்.வி.பிரசாத் விரும்பினார். ஜி.கே.வெங்கடேஷும் "ஓ.கே'' சொன்னார்.
பாட்டெழுத கவிஞர் கண்ணதாசன் வந்து விட்டுப் போனார். அந்தப்பாடல் டைரக்டருக்கும், எல்.வி.பிரசாத்துக்கும் பிடிக்கவில்லை. அதனால் வாலியை பாட்டெழுத அழைத்தார்கள். அவரும் வந்தவுடன் டிïனை கேட்டுவிட்டு, "ராஜாவைப் பாருங்க'' என்று பல்லவியை தொடங்கி
விட்டார்.இது எல்லாருக்கும் பிடிக்க ஓ.கே. சொல்லிவிட்டார்கள்.
நான் மட்டும் வாலி அண்ணனிடம், "அண்ணா! வரிகள் டிïனுக்கு சற்று மாறி வந்திருக்கிறது'' என்றேன்.
"எப்படி?'' என்று திருப்பிக் கேட்டார் வாலி.
"டிïனின் சத்தம் `தானா தானானா', `தானானத் தானானா' என்று வருகிறது. இதில் முதல் `சந்தம்' தானா என்று தான் வருகிறது. நீங்கள் `ராஜாவை' என்று தொடங்கியதால் சந்தம் `தானானா' என்று மாறி வருகிறது'' என்றேன்.
"இன்னொரு தடவை சொல்லு'' என்றார் வாலி.
"தானா தானானா தானானத் தானானா'' என்று பாடினேன்.
உடனே அவர், "ராஜா பாருங்க! ராஜாவைப் பாருங்க என்று வைச்சுக்கோ'' என்றார்.
"இது சரியாக இருக்கிறது'' என்றேன்.
அன்றிரவு எம்.எஸ்.விஸ்வநாதனின் பிறந்த நாள் பார்ட்டியில் ஜி.கே.வெங்கடேஷை பார்த்த வாலி, "யோவ்! சாதாரண கிட்டார்காரனைவுட்டு சந்தத்துக்கு சரியா பாட்டெழுதலைன்னு சொல்லவெச்சு என்னை அவமானப்படுத்திட்டேயில்ல?'' என்று சத்தம் போட்டிருக்கிறார்.
ஜி.கே.வி.யும் விட்டுக் கொடுக்காமல், "அதெல்லாம் இல்ல வாலி! சரியா வர்றதுக்குத்தானே எல்லாரும் சொல்வாங்க. அதிலென்ன தப்பு?'' என்று சொல்லி சமாதானப்படுத்தியிருக்கிறார்.
இந்த சம்பவத்தை இப்போது என்னிடம் நினைவு கூர்ந்த வாலி, "இப்போ, பத்ரகாளி படத்துக்கான பாட்டு என்ன சிச்சுவேஷன்?'' என்று கேட்டார்.
சிச்சுவேஷனை வசனகர்த்தா ஆரூர்தாஸ் சொல்ல, நான் டிïனை பாடிக்காட்டினேன். தம்பி கங்கை அமரன் எழுதி, பக்திப்பாடலாக்க முயற்சி செய்த டிïன் அது.
அதை வாசித்தேன். கேட்டு விட்டு "கண்ணன் ஒரு கைக்குழந்தை'' என்று ஆரம்பித்து முழுப்பாடலையும் முடித்தார்.
அடுத்த பாடல்தான் "வாங்கோன்னா, அட வாங்கோன்னா.''
இந்தப் படத்தில் நாயகியாக நடித்த ராணி சந்திரா விமான விபத்தில் மரணமடைந்து விட்டார். திரிலோகசந்தர் ஒருவழியாக சமாளித்து படத்தை முடித்தார். படம் பெரிய வெற்றி.
இந்தப்படத்தின் பின்னணி இசையமைப்பின்போதுதான் இரண்டாவது தடவையாக மூகாம்பிகை போகமுடிந்தது.
இது என் மூன்றாவது வெற்றிப்படம்.''

ஜிஎஸ்டி வரியில் இருந்து பிராந்திய மொழிப் படங்களை காப்பாற்ற வேண்டும் என்று டுவிட்டரில் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு நடிகர் கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:
வருகிற ஜுலை 1-ந் தேதி முதல் மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரவிருக்கிறது. சினிமாவுக்கு 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகளில் டிக்கெட் விலை உயரும் என்ற அச்சம் நிலவியுள்ளது.
இதனையடுத்து, ஜி.எஸ்.டி வரியால் சினிமா உலகம் பெரிதும் பாதிக்கப்படும் என்று நடிகர் கமல் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். மேலும், சினிமா மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன் என்றும் அழுத்தமாக கமல் தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஜிஎஸ்டி வரியில் இருந்து பிராந்திய மொழிப் படங்களை காப்பாற்ற வேண்டும் என்று டுவிட்டரில் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு நடிகர் கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கமல் கூறியிருப்பதாவது:-
இது அழுத்தம் இல்லை. துன்பத்தில் இருக்கும் பிராந்திய சினிமாவின் கோரிக்கை. ஜி.எஸ்.டி வரியால் பிராந்திய மொழிப் படங்கள் அழிந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. பிராந்திய மொழிப் படங்களை காப்பற்ற ஜிஎஸ்டி கவுன்சில் அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார்.

அரபு பாலைவனத்தில் புதைக்குழியில் ஷாருக்கான் மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
ஷாருக்கான் தனது தோழி மற்றும் பாதுகாவல்கள் இருவருடன் அரபு நாட்டில் உள்ள பாலைவனம் ஒன்றில் பயணம் மேற்கொண்ட போது, ஷாருக்கானின் கார் அங்கிருந்த புதைக்குழி ஒன்றில் சிக்குகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஷாருக்கான் மற்றும் அந்த காரில் இருந்த அனைவரும் உடனடியாக காரின் மேற்புறமாக வெளியேறி தப்பிக்க முயற்சி செய்கின்றனர். இவ்வாறாக முயற்சி செய்யும் பாதுகாவலர்கள் இருவரும் தவறுதலாக அந்த குழியில் விழுந்து, சிறிது நேரத்தில் மூழ்கி விடுகின்றனர். காரும் மெல்ல மெல்ல குழியில் இறங்கிக் கொண்டே செல்ல ஷாருக் கானின் தோழி அலற ஆரம்பிக்கிறாள்.

அவளது அலறலைக் கேட்டு அங்கிருந்த குகை ஒன்றிலிருந்து ராட்சத உடும்பு ஒன்று புதைக்குழி நோக்கி வருகிறது. இந்நிலையில், செய்வதறியாது தவித்த ஷாருக்கான் அந்த குழியில் உள்ள மண், சகதியை தூக்கி அந்த உடும்பு மீது வீசுகிறார்.
நொடிக்கு நொடி பதற்றம் கூடிக் கொண்டே செல்ல, அந்த ராட்சத உடும்புவின் உடலில் இருந்து ஒரு மனிதன் வெளியேறுகிறான். பின்னர் தான் இது ஷாருக்கானை ஏமாற்றுவதற்காக செய்யப்பட்ட சேட்டை என்பது தெரிய வருகிறது. அந்த குழியும் போலியாக செய்யப்பட்டது தான்.

பின்னர் குழியில் விழுந்த அனைவரும் வெளியே தூக்கப்படுகின்றனர். ஷாருக்கான் அதிலிருந்து வெளியேறி உடன் இந்த திட்டத்திற்கு காரணமானரை சென்று அடிக்க செல்கிறார். பின்னர் கடுமையாக அவரை திட்டிவிட்டு அங்கிருந்து செல்ல முயற்சிக்கிறார். ஆனால் அந்த நபர் ஷாருக்கை விடுவதாக தெரியவில்லை. தொடர்ந்து அவர் பின்னாலேயே சென்று ஷாருக்கானை சமாதானம் செய்வது போல அந்த வீடியோ முடிகிறது.
வீடியோ:

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘காலா’ ரகசியத்தை அப்படத்தில் நடிக்கும் நடிகையான ஹூமாகுரேஷி வெளியிட்டுள்ளார்.
ரஜினியின் ‘காலா’ படப்பிடிப்பு கடந்த 28-ந்தேதி தொடங்கியது. பா.ரஞ்சித் இயக்கும் இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ந்து நடைபெறுகிறது. தினமும் ரஜினியை பார்க்க பெரும் கூட்டம் வருவதால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
முதலில் ரஜினி, சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நடித்த புகைப்படங்கள் வெளியாகின. அடுத்து ரஜினி பேசிய பஞ்ச் வசனம் வெளியானது. இந்த படத்தின் நாயகியாக நடிக்கும் இந்தி நடிகை ஹூமாகுரேஷி பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகின. ஆனால் ‘காலா’ படத்தில் அவருக்கு என்ன வேடம் என்பது ரகசியமாக இருந்தது. இப்போது அதையும் ஹூமாகுரேஷி போட்டு உடைத்திருக்கிறார்.. இதுபற்றி டுவிட்டரில் தெரிவித்துள்ள அவர், ‘காலா’ படத்தில் எனது பெயர் ஜரீனா. நான் ஜரீனாவாக மாறிக் கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விடவில்லை. அவருக்கு நடிப்பதற்காக கொடுக்கப்பட்ட காட்சி பற்றிய குறிப்பு அடங்கிய பேப்பர்களையும் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள படத்தில் காலா பீம்ஜியுடன் பைக்கில் செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் மூலம் இன்னும் ஏராளமான தகவல்கள் வெளியாகலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

`டார்லிங்-2' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமான ரமீஸ் ராஜா அடுத்ததாக `விதி-மதி உல்ட்டா' என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
ரமீஸ் ராஜா தனது ரைட் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் `டார்லிங்-2' படத்தை தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரமீஸ் ராஜா. சதீஷ் சந்திரசேகரன் இயக்கத்தில் ஹாரர் படமாக உருவாகியிருந்த இந்தப் படத்தில் இவருடன் கலையரசன், முனீஷ், காளி வெங்கட், மெட்ராஸ் ஜனனி, அர்ஜுனன், மாயா என்ற புதுமுக நாயகி நடித்திருந்தார்.
இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் விஜய பாலஜியின் இயக்கத்தில் தற்போது `விதி-மதி உல்ட்டா' என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் விஜய் பாலாஜி இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படத்தில், இவருடன் இணைந்து டேனியல் பாலாஜி, கருணாகரன், செண்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தன் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். ஜனனி ஐயர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தபடத்தில் ஜி.வி.பிரகாஷ் கானாபாலா ஒரு பாடலை பாடியிருக்கின்றனர்.

கொடூரமான தாதாவிடம் சிக்கிக் கொள்ளும் தனது குடும்பத்தையும், காதலியையும், ஒரு மிடில்கிளாஸ் பையன் எப்படி காப்பாற்றுகிறான் என்பதை தான் இப்படத்தின் திரைக்கதையாக அமைத்திருக்கிறார்கள். இதை காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறார்கள். தாதாவிடம் மோதும் மிடில்கிளாஸ் பையனாக ரமீஸ் ராஜா நடித்திருக்கிறார். இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா வரும் ஜுலை மாதம் நடைபெற இருக்கிறது.
ரமீஸ் ராஜா கதாநாயகனாக நடிக்கும் 3-வது படமாக மர்டர் மிஸ்ட்ரி கதையமைப்புக் கொண்ட படம் உருவாகி வருகிறது. இதில் முன்னணி நடிகர், நடிகையர்கள் பணியாற்றவிருக்கிறார்கள். இந்தப்படத்திற்கான டைட்டிலும், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் விரைவில் அறிவிக்கப்படும் என்று நாயகன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

பிரதமர் முன்பு கால் மேல் கால்போட்டு உட்கார்ந்த பிரியங்காவை குறை சொல்லக்கூடாது என்று கவர்ச்சி நடிகை சன்னிலியோன் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பெர்லின் சென்ற பிரதமர் மோடியை, இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா சந்தித்தார். அப்போது கால் தெரியும் படி உடை அணிந்து, பிரதமர் முன்பு கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து பேசினார்.
இது பெரும் விமர்சனத்துக் குள்ளானது. பிரியங்கா சோப்ராவின் இந்த செயலுக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதத்தில், அதில் தவறு இல்லை. என்பது போன்று பிரியங்கா சோப்ராவும், அவருடைய அம்மாவும் கால் தெரியும் படி உடை அணிந்திருந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தனது ஆதங்கத்தை தீர்த்துக்கொண்டார்.

இந்த நிலையில் பிரியங்கா சோப்ராவுக்கு சன்னிலியோன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி கூறியுள்ள அவர், “ நாம் மிகவும் ஸ்மார்ட் ஆன மனிதரைதான் இந்திய பிரதமராக தேர்வு செய்து இருக்கிறோம். அவர் மனதில் பட்டதை பேசக்கூடியவர். பிரியங்கா உடை அணிந்து சென்றதில் பிரச்சினை இருந்திருந்தால் பிரதமர் நிச்சயம் கூறி இருப்பார். ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை.
எனக்கு பிரியங்காவை நன்றாக தெரியும். அவர் மக்களிடம் நல்ல விதமாக பழகுபவர். சமூகத்துக்கு உதவி செய்பவர். எனவே, அவருடைய நடவடிக்கைகளை வைத்து அவரை மதிப்பிடலாமே தவிர உடையை வைத்து அல்ல” என்று தெரிவித்து இருக்கிறார்.

அட்லி இயக்கத்தில் விஜய் - காஜல் அகர்வால் - சமந்தா - நித்யா மேனன் இணைந்து நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் முக்கிய வேடத்தில் காமெடி நடிகர் ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். சென்னை, மதுரை, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. விஜய் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜுன் 22-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.
இப்படத்தில் முதன்முறையாக விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்து வருகின்றனர். மேலும் சத்யராஜ், ஹரீஷ் பேரடி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குநரும், நருகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

காமெடியை பொறுத்த வரை வடிவேலு, சத்யன், கோவை சரளா என நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்திருக்கிறது. இந்நிலையில், காமெடிக்கு மேலும் தெம்பூட்டும் வகையில் யோகி பாபுவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
`இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

தற்போது நடித்து வரும் இரு படங்களை முடித்த பிறகு உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக தேசிய விருது இயக்குநருடன் இணைவிருக்கிறார்.
எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான `சரவணன் இருக்க பயமேன்' வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், உதயநிதி தற்போது `பெதுவாக என் மனசு தங்கம்', `இப்படை வெல்லும்' ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக தேசிய விருது இயக்குநருடன் உதயநிதி இணையவிருக்கிறார்.
தமிழில் வெளியான `காஞ்சிவரம்' என்ற படத்திற்காக தேசிய விருது வென்ற பிரியதர்ஷன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் உதயநிதி நடிக்க இருக்கிறார். இதுகுறித்த தகவலை உதயநிதியே அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,
"தனது அடுத்த படத்தில் பிரியதர்ஷனின் இயக்கத்தில் நடிக்க இருப்பதில் மகிழ்ச்சி. அந்த படத்தை மூன்ஷீட் எண்டர்டெயிண்ட்மன்ட் நிறுவனம் சார்பில் சந்தோஷ் தயாரிக்க இருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
திலீஷ் போத்தன் இயக்கத்தில், கடந்த ஆண்டு மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்ற படம் `மகேஷின்ட பிரதிகாரம்'. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.