என் மலர்

  நீங்கள் தேடியது "Adangathey"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்து வரும் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் உள்ளிட்ட பல சம்பவங்கள் படமாக்கப்பட்டுள்ளது. #GVPrakash #Adangathey
  சரத்குமார், ஜிவி.பிரகாஷ், சுரபி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அடங்காதே’. இப்படத்தை அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கி இருக்கிறார். படம் பற்றி கூறும்போது ‘இந்து முஸ்லீம் கலவரங்களின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது.

  கோவை கலவரம், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் உள்ளிட்ட பல உண்மை சம்பவங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. இந்தியா என்பது எல்லோரும் சேர்ந்து வாழும் நாடு என்று ஒற்றுமையை வலியுறுத்தும் கதை.

  சரத்குமார் ஒரு அரசியல் கட்சி தலைவராகவும், ஜி.வி.பிரகாஷ் காசியில் வசிக்கும் பைக் மெக்கானிக்காகவும் வருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் ஒரு அரசியல்வாதி நல்லவராக இருப்பது சாத்தியமா என்ற கேள்விக்கு சரத்குமாரின் கதாபாத்திரம் பதில் அளிக்கும். விஜயசாந்தி நடிக்க வேண்டிய ஒரு போலீஸ் வேடத்தில் மந்த்ரா பேடி நடித்துள்ளார்.  படத்தின் டீசரில் இருந்த சில வசனங்களால் எனக்கு எதிர்ப்புகளும் மிரட்டல்களும் வருகின்றன. எனக்கு ஹவாலா பணம் வருவதாக எழுதுகிறார்கள். சிரிப்புதான் வருகிறது’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜி.வி.பிரகாஷ், சுரபி நடிப்பில் உருவாகி வரும் அடங்காதே படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். #Adangathey
  ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அடங்காதே’. இதில் இவருக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும் சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

  விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் பணிகள் மற்றும் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தின் இசை மற்றும் டிரைலரை ஆகஸ்ட் 25ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.  ஸ்ரீ கிரீன் புரோடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரித்து வரும் இப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகவும் உருவாக்கி இருக்கிறார்கள். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜி.வி.பிரகாஷ், சுரபி நடிப்பில் உருவாகி வரும் அடங்காதே படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து டப் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. #Adangathey
  ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அடங்காதே’. இதில் இவருக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும் சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

  விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது டப்பிங் பணியை இன்று தொடங்கி இருக்கிறார்கள். இதில், ஜி.வி.பிரகாஷ் தனது காட்சிக்கான டப்பிங்கை பேசியுள்ளார்.

  ஸ்ரீ கிரீன் புரோடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரித்து வரும் இப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகவும் உருவாக்கி இருக்கிறார்கள்.   விரைவில் இப்படத்தின் இசை வெளியிடு மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. 
  ×