என் மலர்

  சினிமா

  ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
  X

  ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்து வரும் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் உள்ளிட்ட பல சம்பவங்கள் படமாக்கப்பட்டுள்ளது. #GVPrakash #Adangathey
  சரத்குமார், ஜிவி.பிரகாஷ், சுரபி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அடங்காதே’. இப்படத்தை அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கி இருக்கிறார். படம் பற்றி கூறும்போது ‘இந்து முஸ்லீம் கலவரங்களின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது.

  கோவை கலவரம், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் உள்ளிட்ட பல உண்மை சம்பவங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. இந்தியா என்பது எல்லோரும் சேர்ந்து வாழும் நாடு என்று ஒற்றுமையை வலியுறுத்தும் கதை.

  சரத்குமார் ஒரு அரசியல் கட்சி தலைவராகவும், ஜி.வி.பிரகாஷ் காசியில் வசிக்கும் பைக் மெக்கானிக்காகவும் வருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் ஒரு அரசியல்வாதி நல்லவராக இருப்பது சாத்தியமா என்ற கேள்விக்கு சரத்குமாரின் கதாபாத்திரம் பதில் அளிக்கும். விஜயசாந்தி நடிக்க வேண்டிய ஒரு போலீஸ் வேடத்தில் மந்த்ரா பேடி நடித்துள்ளார்.  படத்தின் டீசரில் இருந்த சில வசனங்களால் எனக்கு எதிர்ப்புகளும் மிரட்டல்களும் வருகின்றன. எனக்கு ஹவாலா பணம் வருவதாக எழுதுகிறார்கள். சிரிப்புதான் வருகிறது’ என்றார்.
  Next Story
  ×