என் மலர்
சினிமா

அடங்காதே டப்பிங்கை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ், சுரபி நடிப்பில் உருவாகி வரும் அடங்காதே படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து டப் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. #Adangathey
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அடங்காதே’. இதில் இவருக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும் சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது டப்பிங் பணியை இன்று தொடங்கி இருக்கிறார்கள். இதில், ஜி.வி.பிரகாஷ் தனது காட்சிக்கான டப்பிங்கை பேசியுள்ளார்.
ஸ்ரீ கிரீன் புரோடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரித்து வரும் இப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகவும் உருவாக்கி இருக்கிறார்கள்.

விரைவில் இப்படத்தின் இசை வெளியிடு மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
Next Story






