search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரமீஸ் ராஜா"

    • வீரர்களின் கடினமான காலத்தில் அவர்களுக்கு துணையாக கிரிக்கெட் வாரியம் இருக்க வேண்டும்.
    • வீரர்களுக்கு எப்படி ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதற்கு பிசிசிஐ ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.

    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிக முக்கிய வீரராக ஒரு காலத்தில் விளங்கியவர் உமர் அக்மல். கம்ரான் அக்மலின் தம்பியான உம்ரான் அக்மல் பாகிஸ்தானுக்கு 16 டெஸ்ட், 121 ஒருநாள் போட்டி மற்றும் 84 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

    உமர் அகமல் ஸ்பாட் பிக்சிங் செய்ய சொல்லி புக்கிகள் தன்னை அணுகியது குறித்து புகார் அளிக்காத குற்றச்சாட்டுக்காக பாகிஸ்தான் அணியில் இருந்து உமர் மாலிக் தடை விதிக்கப்பட்டார்.

    எனினும் தமது செயலுக்கு அவர் மன்னிப்பு கூறியதையடுத்து தடை நீக்கப்பட்டு உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டார்.ஆனால் இதுவரை ஒரு முறை கூட மீண்டும் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சேர்க்க வாய்ப்பு தரவில்லை.

    இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா உமர் அக்மலின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைந்து விட்டதாக வெளிப்படையாக கூறியிருந்தார்.

    தற்போது இதற்கு பதில் அளித்துள்ள உமர் அகமல்:-

    ரமீஸ் ராஜா இவ்வாறு கூறியதற்கு நான் உண்மையிலே வெட்கப்படுகிறேன். பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்து இருக்கிறேன். ஆனால் என்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தப்படும் விதம் சரியல்ல. வீரர்களின் கடினமான காலத்தில் அவர்களுக்கு துணையாக கிரிக்கெட் வாரியம் இருக்க வேண்டும்.

    உதாரணத்துக்கு விராட் கோலியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் கிரிக்கெட் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றாலும் அவருக்கு தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் வாய்ப்பு கொடுத்தது. இதன் மூலம் தற்போது அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி உள்ளார். வீரர்களுக்கு எப்படி ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதற்கு பிசிசிஐ ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.

    ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அப்படி செய்யவில்லை ரமீஷ் ராஜா என் பெயரை குறிப்பிடாமல் எனக்கு வாய்ப்பில்லை என்று சொல்லியிருந்தால் கூட என் மனது அமைதியாக இருக்கும் என்று உமர் அக்மல் வேதனை தெரிவித்துள்ளார்.

    அண்மையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்பிராஸ் அகமதுக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைத்த நிலையில், உமர் அக்மலும் மீண்டும் அணிக்குள் வர போராடுகிறார்.

    • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.
    • புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக கடந்த ஆண்டு செப்டம்பரில் ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டார்.

    பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து, பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை 3-0 என கைப்பற்றியது. இதனால் பாகிஸ்தான் நிர்வாகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

    இந்நிலையில், இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமினம் செய்யப்பட்டுள்ளார்.

    • 14 வருடங்களாக இந்திய அணி பாகிஸ்தானிற்கு செல்லவில்லை.
    • இந்திய அணி மறுப்பு தெரிவித்தால், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

    உலகில் அதிக அளவிலான கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானும். இந்த இரு அணிகளும் மோதிக்கொண்டால் அந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது. எனவே, சர்வதேச போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளும் பல ஆண்டுகளாக இரு தரப்பு போட்டிகளில் மோதிக்கொள்வதில்லை. ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை போன்ற பொதுவான தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருகின்றன. இந்தியா அணி பாகிஸ்தான் சென்று கடைசியாக விளையாடியது 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டிக்குத்தான். அதேபோல், பாகிஸ்தான் அணி கடைசியாக 2016-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்தியா வந்தது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் மோதல் போக்கே இதற்கு காரணம்.

    குறிப்பாக, 2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று விளையாடப் போவதில்லை என் முடிவெடுத்து. எனவே, 14 வருடங்களாக இந்திய அணி பாகிஸ்தானிற்கு செல்லவில்லை.

    இந்நிலையில், 2023-ம் ஆண்டில் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானிலும், அதன் பின்னர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன. முதலாவதாக ஆசிய கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில், இதில் இந்திய அணி பங்கேற்காது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். இது பாகிஸ்தான் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "பாகிஸ்தானிற்கு வந்து விளையாட இந்திய அணி மறுப்பு தெரிவித்தால், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியும் பங்கேற்காது.

    பாகிஸ்தான் தொடரில் பங்கேற்கவில்லை என்றால் போட்டிகளை யார் பார்க்கப் போகிறார்கள். எங்கள் அணி சிறப்பான முறையில் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணியின் பொருளாதாரத்தை முன்னேற்ற நாம் சிறப்பாக விளையாடினால்தான் முடியும். கடந்த ஒரு ஆண்டில், பாகிஸ்தான் அணி இந்திய அணியை இரு முறை வீழ்த்தியுள்ளது" என்று அதில் கூறியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இவ்வாறு அதிரடி முடிவு எடுத்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் அதற்கு என்ன பதில் தரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    • குரூப் 12-ல் திணறிய பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு முன்னேறியது.
    • முதல் இடம் பிடித்த இந்தியா அரையிறுதியோடு வெளியேற்றம்.

    இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்து உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    உலகின் பிரபலமான டி20 கிரிக்கெட்டான ஐ.பி.எல். இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தானைத் தவிர மற்ற நாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டும் ஐ.பி.எல். தொடரில் இருந்து தனது விளையாட்டை மேம்படுத்திக் கொண்டேன் என பல்வேறு நாட்டு வீரர்கள் தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியால் ஐ.பி.எல். தொடங்கிய பிறகு உலகக் கோப்பையை வென்றது கிடையாது.

    பாகிஸ்தான் ரசிகர்கள், முன்னாள் தலைவர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில், அந்நாட்டு கிரிக்கெட சங்கத்தின் தலைவர் ரமீஸ் ராஜா, ஐ.பி.எல். தொடரை குறைத்து மதிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ''பில்லியன் டாலர் லீக் அணிகள் எங்களுக்கு பின்னால் உள்ளன. பாகிஸ்தான் வீரர்கள் பில்லியன் டாலர் லீக் கிரிக்கெட் வீரர்களை விட சிறந்தவர்கள். நாங்கள் ஏதோ ஒன்றை சரியாக செய்து கொண்டிருக்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

    ×