என் மலர்

  நீங்கள் தேடியது "Umar Akmal"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீரர்களின் கடினமான காலத்தில் அவர்களுக்கு துணையாக கிரிக்கெட் வாரியம் இருக்க வேண்டும்.
  • வீரர்களுக்கு எப்படி ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதற்கு பிசிசிஐ ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.

  கராச்சி:

  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிக முக்கிய வீரராக ஒரு காலத்தில் விளங்கியவர் உமர் அக்மல். கம்ரான் அக்மலின் தம்பியான உம்ரான் அக்மல் பாகிஸ்தானுக்கு 16 டெஸ்ட், 121 ஒருநாள் போட்டி மற்றும் 84 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

  உமர் அகமல் ஸ்பாட் பிக்சிங் செய்ய சொல்லி புக்கிகள் தன்னை அணுகியது குறித்து புகார் அளிக்காத குற்றச்சாட்டுக்காக பாகிஸ்தான் அணியில் இருந்து உமர் மாலிக் தடை விதிக்கப்பட்டார்.

  எனினும் தமது செயலுக்கு அவர் மன்னிப்பு கூறியதையடுத்து தடை நீக்கப்பட்டு உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டார்.ஆனால் இதுவரை ஒரு முறை கூட மீண்டும் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சேர்க்க வாய்ப்பு தரவில்லை.

  இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா உமர் அக்மலின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைந்து விட்டதாக வெளிப்படையாக கூறியிருந்தார்.

  தற்போது இதற்கு பதில் அளித்துள்ள உமர் அகமல்:-

  ரமீஸ் ராஜா இவ்வாறு கூறியதற்கு நான் உண்மையிலே வெட்கப்படுகிறேன். பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்து இருக்கிறேன். ஆனால் என்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தப்படும் விதம் சரியல்ல. வீரர்களின் கடினமான காலத்தில் அவர்களுக்கு துணையாக கிரிக்கெட் வாரியம் இருக்க வேண்டும்.

  உதாரணத்துக்கு விராட் கோலியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் கிரிக்கெட் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றாலும் அவருக்கு தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் வாய்ப்பு கொடுத்தது. இதன் மூலம் தற்போது அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி உள்ளார். வீரர்களுக்கு எப்படி ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதற்கு பிசிசிஐ ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.

  ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அப்படி செய்யவில்லை ரமீஷ் ராஜா என் பெயரை குறிப்பிடாமல் எனக்கு வாய்ப்பில்லை என்று சொல்லியிருந்தால் கூட என் மனது அமைதியாக இருக்கும் என்று உமர் அக்மல் வேதனை தெரிவித்துள்ளார்.

  அண்மையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்பிராஸ் அகமதுக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைத்த நிலையில், உமர் அக்மலும் மீண்டும் அணிக்குள் வர போராடுகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இரண்டு பந்தை லீவ் செய்வதற்காக இரண்டு லட்சம் டாலர் விலை பேசினார்கள் என உமர் அக்மல் கூறியுள்ளார். #UmarAkmal
  பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் உமர் அக்மல். அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது இவரது வழக்கம். தற்போது உடற்தகுதி பிரச்சனையால் அணியில் இடம்பிடிக்க முடியாமல் இருக்கிறது சமீபத்தில் டிவி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின்போது இரண்டு பந்தை லீவ் செய்வதற்கு இரண்டு லட்சம் டாலர் பணம் தருவதாக தன்னை அணுகிறார்கள் என்ற வெடிகுண்டை தூக்கிப்போட்டார்.

  மேலும், இதுகுறித்து அக்மல் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக விளையாடிய ஒவ்வொரு போட்டியில் சூதாட்டக்காரர்கள் என்னை அணுகிறார்கள். பெரும்பாலும் ஐசிசி தொடர் மற்றும் ஆசிய கோப்பை தொடரின்போது இந்த சம்பவங்கள் நடைபெற்றன.

  ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்ற 2015 உலகக்கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவில் இடம்பிடித்திருந்தது. இதில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இந்த போட்டியில் உமர் அக்மல் நான்கு பந்துகளை சந்தித்து டக்அவுட் ஆனார். இந்த தொடரின்போதுதான் தன்னை அணுகிறார்கள் என்று கூறியுள்ளார். இதுகுறித்து டிவிக்கு அவர் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு பந்துகளை லீவ் செய்தற்காக என்னை அணுகிறார்கள். அதற்காக இரண்டு லட்சம் டாலர் தருவதாக கூறினார்கள்.  உலகக்கோப்பையில் இது எங்களுடைய முதல் போட்டி. இந்தியாவிற்கு எதிராக நான் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் என்னை அணுகிறார்கள். ஆனால், நான் அவர்களிடம், நான் மிகவும் கண்டிப்பானவன், பாகிஸ்தானுக்காக விளையாடும்போது, இதுகுறித்து என்னிடம் மீண்டும் பேசக்கூடாது என்றேன்’’ என்று கூறியுள்ளார்.

  இவரது பேட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் எதிர்ப்பு பிரிவிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு உமர் அக்மலுக்கு சம்மன் வழங்கியுள்ளது.
  ×