என் மலர்
பாரதிராஜாவை குரங்கு என நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் வித்தியாசமாக பாராட்டி உள்ளார்.
நித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் குரங்கு பொம்மை. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி. நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இயக்குநர் இமயம் பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர், மனோபாலா, பார்த்திபன், இயக்குநர் தரணி, சிபிராஜ், விதார்த், தயாரிப்பாளர், நடிகர் பி.எல்.தேனப்பன், ஞானவேல்ராஜா, மைம்கோபி, டான்ஸ் மாஸ்டர் ராதிகா, ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி. நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
குரங்கு பொம்மை, பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய, பார்த்திபன் தன் குருவின் குருவை வித்தியாசமாக பாராட்டினார்.

விழாவில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பேசுகையில், இயக்குநர் இமயம், பாரதிராஜா அவர்களை பாராட்டுவதற்கு வாழ்நாள் போதாது. தமிழ் சினிமா ஒட்டுமொத்தமாக பாரதிராஜா அவர்களுக்கு ஒரு பெரிய பாராட்டுவிழா எடுக்க வேண்டும். இந்த படத்தின் தலைப்பு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. எனவே இயக்குநர் இமயம் அவர்களை வித்தியாசமாக பாராட்ட ஆசைப்படுகிறேன்.
பாரதிராஜா நல்ல இயக்குநர் என்று எல்லாரும் சொல்வார்கள். பாரதிராஜா சிறந்த மனிதர் என்றும் சொல்வார்கள். ஆனால், என்னை பொறுத்தவரையில், பாரதிராஜா ஒரு சிறந்த “குரங்கு”. குரங்கு நான்கு எழுத்து.
கு - நல்ல குணவான்
ர - சிறந்த ரசனையாளர்
ங் - இங்கிதம் தெரிந்தவர்
கு - குவாலிட்டியானவர்

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘காலா’ படத்தின் முன்னோட்டம்.
ரஜினிகாந்த் நடிக்கும் 164-வது படம் ‘காலா’. இதன் படப்பிடிப்பு கடந்த 28 -ம் தேதி மும்பையில் தொடங்கியது. இந்த படத்தை, பா.ரஞ்சித் இயக்குகிறார்.
தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் 12-வது படம் இது. ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ரஜினி நடித்த ‘கபாலி’ ஆகிய வெற்றிப்படங்களை அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் படம் இது.
‘காலா’ படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார்.
இவர்களுடன், ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட் டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்தி குச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

பாடல்கள் - கபிலன், உமாதேவி, ஒளிப்பதிவு - முரளி ஜி. இவர் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.
கலை - டி.ராமலிங்கம், படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத், சவுண்ட் டிசைனர் - ஆன்டனி பி ஜெயரூபன், சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், நடனம் - சாண்டி
‘காலா’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறுகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் 2001-ஆம் ஆண்டுக்கு பிறகு புதுமையான முறையில் திரையரங்குகளை மீண்டும் மிரட்ட வருகிறார்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2001-ல் வெளியான படம் `ஆளவந்தான்'. தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாச முயற்சியில் ஈடுபடும் கமல், இப்படத்தில் போலீஸ் அதிகாரி, சைகோ என இரு வேடத்தில் நடித்திருந்தார். இதில் சைகோ கமலின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது.
எனினும் வசூலில் இப்படம் நல்ல வரவேற்பை பெறவில்லை என்று தான் கூற வேண்டும். கமல் எழுதத்தில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்த இப்படம், தமிழ் சினிமாவை ஒரு புதுமையான கண்ணோட்டத்தோடு பார்க்க வைத்தது.

அதன்படி இப்படத்திற்கு பின்னர் பல வித்தியாசமான கதைகள் கொண்ட படங்கள் வெளியாகி வரவேற்பை பெறத் தொடங்கின. தற்போதைய சூழலை பொறுத்தவரை, சினிமா ரசிகர்கள் புதுமையை ரசிக்கிறார்கள். அதனை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள். வசனங்கள் பெறும் வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், `ஆளவந்தான்' படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றியமைத்து மீண்டும் வெளியிட படத்தின் தயாரிப்பாளரான தாணு முடிவு செய்திருக்கிறார். மேலும் நீளம் கருதி குறைக்கப்பட்ட சண்டைக் காட்சிகளும் இணைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை சுமார் 500 திரையரங்குகளில் வெளியிட தாணு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் ரவீனா தண்டன், மனீஷா கொய்ராலா, வல்லப் வியாஸ், கோலாபுடி மாருதி ராவ், சரத் பாபு, அனு ஹாசன், ரியாஸ் கான் என பலர் நடித்திருந்தனர்.

"அன்னக்கிளி'', "பாலூட்டி வளர்த்தகிளி'' ஆகிய படங்களுக்கு இசை அமைத்து பிரபல இசை அமைப்பாளர் ஆன பிறகும், இசை கற்பதில் ஆர்வம் காட்டினார், இளையராஜா.

அவரது இரண்டாவது படமான `பாலூட்டி வளர்த்த கிளி' சரியாகப் போகவில்லை. என்றாலும், அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த "கொலை கொலையா முந்திரிக்கா'' பாடல் ஹிட்டாகி, இளையராஜா பெயரை தக்க வைத்துக்கொண்டது.
இரண்டாவது படம் வெளியான பிறகும் இளையராஜா தொடர்ந்து `இசை' கற்றுக் கொள்வதில் தீவிரமாக இருந்தார். இதற்கென சுவாமி தட்சிணாமூர்த்தி என்ற இசை அமைப்பாளரிடம் கற்றுக்கொள்ள முடிவு செய்தார்.
இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
"சினிமாத்துறையில் காலெடுத்து வைத்த நேரத்திலேயே சுவாமி தட்சிணாமூர்த்தியின் சங்கீதம் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. இப்போது இரண்டு படங்களுக்கு இசையமைத்துவிட்ட நிலையிலும் அவரிடம் கற்றுக்கொள்ளும் ஆசை எனக்குள் இருந்தே வந்தது. இனியும் தள்ளிப்போடலாகாது என்ற முடிவுக்கு வந்து, சென்னை மந்தைவெளியில் இருந்த அவரது வீட்டுக்குப்போய் கேட்டேன்.
என் ஆர்வம் புரிந்து கொண்டவர், "நாளையில் இருந்து பாடம் தொடங்கலாம்'' என்று சொல்லிவிட்டார்.
மறுநாளே பூ, பழம், கற்பூரம், ஊதுபத்தி, வெற்றிலை பாக்கு தட்டுடன் போனேன்.
அவர் அதிகாலையில் எழுந்து நீராடி பூஜை முடித்து, எனக்கு பாடம் தொடங்கினார்.
ஆரம்பப் பாடமான சரளி வரிசையில் இருந்து பாடத்தை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்தேன்.
அவரோ ஏதோவொரு கீர்த்தனையைத் தொடங்கி விட்டார். அவர் சொல்லித் தரும் பாடங்களை குறித்துக்கொள்ள `நோட்டு' கொண்டு போயிருந்தேன். கீர்த்தனையில் இருந்து தொடங்கி விட்டதால் எழுதும் வேலை ஒன்றும் இல்லை.
பாடினார். அதையே என்னைத் திரும்பப் பாடச் சொன்னார். அவர் பாடிய மாதிரி வரவில்லை.
சரி செய்தார். மறுபடியும் பாடினேன்.
ஊஹும். அவர் மாதிரி வரவேயில்லை. அன்றைய பாடம் இப்படியே முடிந்தது.
அன்று மட்டுமில்லை. அடுத்து நான் போன மூன்று மாதங்களிலும் இதே தான் என் நிலை. அவர் பாடியதில் நூற்றில் ஒரு பங்கு கூட எனக்கு வரவில்லை என்பது தெரிந்து போயிற்று. என்றாலும் அவர் பாடுவதும், அவர் பாட்டுக்கு நான் பாடிப்பார்ப்பதுமாக 6 மாதங்கள் ஓடிப்போயிற்று.
சுவாமி அப்போது, "நந்தா என் நிலா'', "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது'' போன்ற படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார்.
நானும் இரண்டொரு படங்களுக்கு இசையமைப்பை தொடர்ந்ததோடு, ஜி.கே.வி.யிடமும் பிசியாக இருந்தேன்.
இதற்கிடையே சுவாமி ஒருநாள் என்னிடம் தனது படம் ஒன்று பின்னணி இசை சேர்ப்புக்கு (ரீரிகார்டிங்) வந்துவிட்டதாகவும், அதற்கு `காம்போ' (இசைக் கருவி) வாசிக்க யாரும் கிடைக்கவில்லை என்றும் என்னிடம் சொன்னார்.
நான் கொஞ்சம் கூட யோசிக்காமல், "அதனாலென்ன சுவாமி! நான் இல்லையா? நீங்க சொல்றப்போ வந்துடறேன்'' என்றேன்.
சொன்னது போலவே அவரது படத்துக்கு `கம்போ' வாசிக்கப்போனேன். படங்களுக்கு இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளராக என்னை உணர்ந்தவர்களுக்கு, நான் ஒரு உதவியாளர் நிலையில் காம்போ வாசிக்க வந்தது அதிர்ச்சியாக இருந்தது போலும். அங்கிருந்த எல்லாரும் என்னை ஆச்சரியமாக பார்த்தார்கள்.
ஸ்டூடியோவில் வேலை செய்வோருக்கும் ஷூட்டிங் புளோருக்கு வந்தவர்களுக்கும், பக்கத்து ஸ்டூடியோவில் ரெக்கார்டிங் வந்தவர்களுக்கும் தகவல் பரவ, என்னை வேடிக்கை பார்க்க வந்துவிட்டார்கள். நான் "காம்போ'' வாசித்த நாலு நாட்களும் இந்த வேடிக்கை தொடர்ந்தது.
இப்படி பார்த்துப் போனவர்களில் ஒருவரான டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் இன்று என்னைப் பார்த்தால்கூட அந்த சம்பவம் பற்றி வியந்து பேசுவார்.
சுவாமிக்கும் என் மீது பிரியம் அதிகமாகிவிட்டது. `இத்தனை பெயர் வாங்கியிருந்தாலும் இன்னும் இந்தப் பையன் பெரியவர்களை மதிக்கும் பண்போடு இருக்கிறானே என்று ஏற்பட்ட ஆச்சரியம்தான் என்மேல் அவருக்கான அன்பை கூட்டிற்று என்றும் சொல்லலாம்.
அப்புறம் அந்த இசைப் பயிற்சி என்னாயிற்று என்று கேட்பீர்கள். அது அவ்வளவுதான்.
இந்த நேரத்தில் மாஸ்டர் தன்ராஜை பார்க்க விரும்பினேன். தன்னிடம் இசை கற்றுக்கொண்டவர்களில் ஒருவராவது தன்னை வந்து பார்க்கவில்லை என்று அவர் குறைப்பட்டுக் கொள்வதை கவனித்திருக்கிறேன்.
ஜோசப்பிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததில் இருந்து மாஸ்டரின் தொடர்பு நின்று போனது. இருந்தாலும் அவர் மீதான மரியாதையும் அன்பும் குறையவே இல்லை.
ஒருநாள் கையில் ஒரு ஐயாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அவரைப் பார்க்கப்போனேன்.
என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர், "நீ ரொம்பவும் பிசியா இருப்பதை கேள்விப்பட்டேன். இருந்தாலும் இசையில் மேற்கொண்டு தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்குங்கறதை மறந்துடக்கூடாது. உனக்கு இதுக்காக எப்ப `டைம்' ஒதுக்கி வர முடியுமோ வா. நான் இருக்கிறேன்'' என்றார்.
அவர் கையில் ஐயாயிரம் ரூபாய் பணத்தை வைத்தேன். இப்போது அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர் போலானார். "என்கிட்ட எத்தனையோ பசங்க கத்துக்கிட்டு சினிமாவில் நல்லா சம்பாதிக்கிறானுக. இதில் ஒருத்தன்கூட என்னை கவனிக்கணும்னோ, பார்க்கணும்னோ நினைச்சது கிடையாது. பிசியா இருக்கிற நீ என்னை பார்க்க வந்ததே பெரிசு. பணம், காசு கிடக்கட்டும். ஆனா ராஜா நீ `கிரேட்'டுடா!''
இப்படி அவர் சொன்னது எனக்கு ஆசீர்வாதமாகவே பட்டது.''
இவ்வாறு இளையராஜா கூறினார்.
தொடர்ந்து வந்த படங்களுக்கான இசையமைப்பின்போது "ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்'' என்ற பாடல், ஒத்திகையின்போது சின்னதாய் ஒரு சிக்கலை ஏற்படுத்தியது இளையராஜாவுக்கு.
அதுபற்றி கூறுகிறார்:
`அன்னக்கிளி' டைரக்டர்கள் தேவராஜ் - மோகன், "பாலூட்டி வளர்த்த கிளி'' படத்துக்குப் பிறகு "உறவாடும் நெஞ்சம்'' என்ற படத்தை இயக்கினார்கள். இதே நேரத்தில் பஞ்சுவின் "அவர் எனக்கே சொந்தம்'' படமும், காரைக்குடி நாராயணனின் `துர்காதேவி' படம் சங்கரய்யர் டைரக்ஷனிலும் தொடங்கியது.
"உறவாடும் நெஞ்சம்'' படத்தில் "ஒருநாள், உன்னோடு ஒரு நாள்'' பாடல் பதிவாகும் போது அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது. பின்னணி இசையில் வயலினோடு ஆர்க்கெஸ்ட்ராவுக்கு கம்போஸ் செய்யப்பட்ட இசை, ஒரு ஒத்திகையிலும் சரியாக வரவில்லை. நேரம் வேறு ஆகிக்கொண்டிருந்தது.
கோவர்த்தன் மாஸ்டர், "சரிய்யா, டேக் போகலாம். அதற்குள் எப்படியாவது பிராக்டீஸ் செய்து வாசிப்பார்கள். சரியாக வந்துவிடும்'' என்று நம்பிக்கை கொடுத்தார்.
`டேக்' போய் விட்டோம். எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் - ஜானகியும் பாடிக்கொண்டிருந்தார்கள். நிறைய டேக்குகள் ஆகிக்கொண்டிருந்ததே தவிர, மிïசிக் சரியாக வரவில்லை.
கடைசியாக ஒரேயொரு டேக்கில் மிகவும் சரியாக வாசித்து விட்டார்கள். அதுதான் இசைத் தட்டில் இன்றும் இருப்பது.
இதுபோல எத்தனை பாடல்களில் ஒரேயொரு டேக்கில் மட்டும் சரியாகப் பாடியிருப்பார்கள் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.''

பிரபல நடிகர் சாமிக்கண்ணு சென்னையில் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். இவர் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
பிரபல நடிகர் சாமிக்கண்ணு சென்னையில் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.
கடந்த 1954-ம் ஆண்டு வெளியான ‘புதுயுகம்’ என்ற படத்தில் சாமிக்கண்ணு அறிமுகம் ஆனார். அன்னக்கிளி, வண்டிச் சக்கரம், ஜானி, முள்ளும் மலரும், போக்கிரி ராஜா, சகலகலாவல்லவன், என் ராசாவின் மனசிலே, மகா பிரபு உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
டைரக்டர்கள் மகேந்திரன், ராமநாராயணன், ராஜ சேகர், ராஜ்கிரண் உள்ளிட்ட பலருடன் சாமிக்கண்ணு இணைந்து பணியாற்றியுள்ளார். தனது 8 வயதில் இருந்தே நாடகக் கம்பெனிகளில் பணிபுரிந்துள்ளார்.
வயோதிகம் காரணமாக சாமிக்கண்ணு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் மரணம் அடைந்தார்.
சாமிக்கண்ணுவின் இறுதிச்சடங்கு சென்னை பள்ளிக்கரணை மயானத்தில் இன்று மாலை 4மணிக்கு நடைபெறுகிறது.
மறைந்த நடிகர் சாமிக்கண்ணுவுக்கு தயானந்தன் உள்பட 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.

செத் கோர்டன் இயக்கத்தில் டுவைன் ஜான்சன் - ஜாக் எஃப்ரான் - பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பேவாட்ச்' படத்தின் விமர்சனம்.
ப்ளோரிடாவில் இருக்கும் எமரால்டு பீச், நாயகன் டுவைன் ஜான்சன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பேவாட்ச்சின் உயிர் காப்பாளரான (லைஃப்கார்டு) அவரின் கீழ் ஒரு குழுவும் செயல்பட்டு வருகிறது. அந்த குழுவில் ஜான்சனின் கீழ், கெல்லி ரோர்பக், இல்பன்ஸ் ஹட்ரா, ஜான் பாஸ் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். அற்புதமான, அட்டகாசமான இந்த குழுதான் அந்த பீச்சின் உயிர் மூச்சு. ஆபத்து என்று வந்தால், யார் பயந்து ஓடினாலும், இந்த குழு அவர்களது உயிரை பணையம் வைத்து காப்பாற்றுகிறார்கள்.
பேவாட்ச் தலைவரான ராப் ஹுபெல் - டுவைன் ஜான்சன் தொடக்கம் முதலே எலியும், பூனையுமாக இருக்கின்றனர். இந்நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை அந்த குழுவுக்கு புதிய ஆட்களை தேர்வு செய்கிறார்கள். அதன்படி நடக்கும் தேர்வில் பல கடுமையான சோதனைகள் கொடுக்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும், அலெக்சாண்ட்ரா தடாரியோ அந்த குழுவில் இணைகிறார்.

அதேபோல் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற ஜாக் எஃப்ரான், இந்த குழுவில் சேரும் நிலைக்கு தள்ளப்படுகிறார். ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்றதால் நேரடியாக அந்த குழுவில் இணைந்து விடலாம் என்ற முடிவில் வரும் ஜாக் எஃப்ரானை தனது குழுவில் சேர்க்க டுவைன் ஜான்சன் மறுப்பு தெரிவிக்கிறார். எல்லோரையும் போல அவருக்கும் பல்வேறு சோதனைகளை வைத்து, அதில் தேர்ச்சி பெற்ற பின்னரே ஜாக் எஃப்ரான் அந்த குழுவில் இடம்பிடிக்கிறார். அதனாலேயே டுவைன் - ஜாக் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது.
தனது பணியை பொறுத்த வரையில், மற்றவர்களை விட டுவைன் ஜான்சனுக்கு ஈடுபாடு அதிகம். தன்னை நம்பி இருக்கும் இந்த கடற்கரைக்கும், கடலுக்கு செல்லும் யாருக்கும் எந்த பாதிப்பும் வரக்கூாது. இவ்வாறு யாராவது உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டால் முதல் ஆளாக அங்கு இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.

இவ்வாறாக அந்த பகுதியில் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறார். இந்நிலையில் ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வரும் பிரியங்கா சோப்ரா அந்த பேவாட்ச் பக்கமாக கிளப் ஒன்றை வாங்குகிறார். எனவே பேவாட்ச் அருகில் இருக்கும் அனைவரையும் அவரது கிளப்புக்கு அழைக்கிறார். பிரியங்கா சோப்ராவின் அழைப்பை ஏற்று, டுவைன் ஜான்சன் அவரது குழுவுடன் அந்த கிளப்புக்கு செல்கிறார்.
அந்த நேரம் பார்த்து, கடலில் ஒரு கப்பல் தீப்பிடித்து எரிவதாக டுவைனுக்கு தகவல் வர, அந்த கப்பலில் இருப்பவர்களை காப்பாற்ற தனது குழுவுடன் கடலுக்கு திரும்புகிறார். அங்கு சென்று பார்க்கும் போது, கப்பல் கொழுந்து விட்டு எரிய, கப்பலில் உள்ள இரு பெண்களை பேவாட்ச் குழு காப்பாற்றுகிறது. ஒரு ஆண் மட்டும் இந்த விபத்தில் இறந்து விடுகிறார். அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக டுவைன் சந்தேகம் அடைகிறார். காப்பாற்றப்பட்ட இரு பெண்களிடமும் கஞ்சா இருப்பதையும் பார்த்து விடுகிறார்.

இதையடுத்து அந்த பீச்சில் கஞ்சா சப்ளை செய்வது, உள்ளிட்ட தவறான வேளைகளில் ஈடுபடுவது பிரியங்கா சோப்ராவாக இருக்குமா? என சந்தேகமடையும் டுவைன், பிரியங்கா சோப்ரா ஏற்பாடு செய்திருந்த பார்ட்டிக்கு பேவாட்ச் குழுவுடன் செல்கிறார். அங்கு தங்களுக்கு தேவையான தடையம் ஏதேனும் கிடைக்குமா? என பேவாட்ச் குழுவினர் ரகசியமாக தேடி பார்க்கிறார்கள்.
அப்போது கஞ்சா கடத்தல் தொடர்பான சில தகவல்கள் கிடைக்கிறது. இதையடுத்து பிரியங்கா சோப்ராவை சட்டத்தின் கையில் சிக்க வைக்கும் முயற்சியில் டுவைன் இறங்குகிறார்.
இந்நிலையில், இது உங்களுக்கு தேவையில்லாத வேலை. உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று அவருக்கு பலரும் அறிவுரை கூறுகின்றனர். ஆனால், யார் பேச்சையும் கேட்காமல் கஞ்சா கடத்தல் கும்பலை தொடர்ந்து மோப்பம் பிடிக்கும் டுவைனுக்கு பேவாட்ச் நிறுவனத்தினரின் வேலையும் பறிப்போய்விடுகிறது.
பிரியங்கா சோப்ராவின் சட்டவிரோத வியாபாரத்தை தடுத்து நிறுத்தினாரா? பிரியங்காவை போலீசில் சிக்க வைத்து பேவாட்ச்சை காப்பாற்றினாரா? அவருக்கு மீண்டும் வேலை கிடைத்ததா? அதன் பின்னணியில் என்னென்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

டுவைன் ஜான்சன் அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து, ரசிக்க வைத்திருக்கிறார். பரபரப்பான தருணத்தையும், ஒரு காமெடி இடமாக மாற்றி, அனைவரையும் சிரிக்க வைப்பது ரசிக்கும்படி இருக்கிறது. `ஏ' பட வசனங்களில் பேசி ஆங்காங்கே ரசிக்கவும், சிரிக்கவும் வைத்திருக்கிறார். எனினும் அவரது உடற்கட்டுக்கு ஏற்ப ஆக்ஷன் காட்சிகள் அதிகளவில் இல்லை என்பது ஒரு வருத்தம்.
ஜாக் எஃப்ரான் தனக்கே உரிய தனித்துவமான பாணியில் அனைவரையும் கவர்கிறார். டுவைன் ஜான்சனுடன் அவர் போடும் செல்ல சண்டைகள் மற்றும் பேச்சில் ரசிக்க வைத்திருக்கிறார்.
பிரியங்கா சோப்ராவின் முதல் ஹாலிவுட் படம் என்பதால், ரசிகர்களிடையே அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. பிரியங்கா இப்படத்தில் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தை ஏற்று, அதாவது ஒரு வில்லியாக நடித்திருக்கிறார். ஒரு வில்லிக்குண்டான கெத்துடன், சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். கவர்ச்சியாக வந்தும் ரசிக்க வைக்கிறார்.
இதுதவிர ராப் ஹுபெல், கெல்லி ரோர்பக், இல்பன்ஸ் ஹட்ரா, ஜான் பாஸ், அலெக்சாண்ட்ரா தடாரியோ உள்ளிட்டோர் படத்திற்கு பக்கபலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

10 ஆண்டுகளாக தொலைக்காட்சியில் வெற்றி நடைபோட்ட பேவாட்ச் என்ற தொடரை படமாக இயக்கி இருக்கும் செத் கார்டன், அவரது இயக்கத்திலும், திரைக்கதையிலும் ரசிக்க வைத்திருக்கிறார். காமெடி கலந்த பரபரப்பான திரைக்கதையாக உருவாக்கி இருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது. முக்கியமான காட்சியிலும் சிரிக்க வைக்கும் நகைச்சுவையுடன் இயக்கி இருப்பதால் படம் போவதே தெரியவில்லை. குறிப்பாக தமிழில் வசனங்கள் சிரிக்கும் படியும், ரசிக்கும்படியும் இருக்கிறது. தமிழில் வசனங்களை எழுதியவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். மக்களின் ரசனையை புரிந்து கொண்டு எழுதியிருக்கிறார்.
எரிக் ஸ்டீர்பெர்க்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. ப்ளோரிடா கடற்கரையை தனது கேமரா மூலம் அழகாக காட்டியிருக்கிறார். கிறிஸ்டோபர் லென்னட்ஸின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.
மொத்தத்தில் `பேவாட்ச்' கோடைக்கு ஏற்ற சுற்றுலாத்தளம்.

வேலுபிரபாகரன் இயக்கத்தில் அவரே கதாநாயகனாகவும், பொன் சுவாதி நாயகியாகவும் நடித்துள்ள `ஒரு இயக்குநரின் காதல் டைரி' படத்தின் விமர்சனம்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணம் என்ன? காம உணர்ச்சியே. அதனை தடுக்க ஒரே வழி பெண்கள் மீதான கவர்ச்சியை, காமத்தை மக்கள் சாதாரணமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதைப்பற்றி வெளிப்படையாக பேச வேண்டும். அப்போது தான் காமத்திற்கு எதிரான குற்றங்கள் குறையும் என்று கதையை தொடங்குகிறார் வேலுபிரபாகரன்.
இந்த கருத்துக்கள் பலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால் அதுதான் நிதர்சனம் என்று தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தொடர்கிறார். படத்தில் தனது கதையை ஒரு திரைப்படமாக எடுக்கும் வேலு பிரபாகரன், அவரது இளமை பருவத்தில் ஒரு பெண்ணை காதலித்து, அவள் தான் தனது உயிர் என்று, அந்த பெண் மீது தனது முழு அன்பையும் செலுத்துகிறார். அந்த பெண்ணுடன் உறவும் வைத்துக் கொள்கிறார்.

படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் அவர், தனது பட வேலைகளுக்காக சென்னைக்கு செல்ல, சில நாட்களில் வேலுபிரபாகரனுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது. அதாவது, அவர் காதலித்து வந்த அந்த பெண்ணுக்கு மற்றொரு ஆணுடன் திருமணமாகிவிட்டதாக செய்தி வர அவளை பார்க்க செல்லும் வேலு பிரபாகரன், கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்.
இதையடுத்து எந்த பெண்ணையும் திருமணம் செய்யக் கூடாது என்ற முடிவில் இருக்கும், அவரது வாழ்க்கையில், நடிகை விஜயா என்ற கதாபாத்திரத்தில் பொன்சுவாதி வருகிறார். பரதநாட்டியத்தில் ஈடுபாடுடன் இருக்கும் விஜயா, ஏற்கனவே அவரது ஆசிரியருடன் திருமணமாகாமல் தொடர்பில் இருக்கிறாள். இருந்தாலும் அவள் மீதான ஈர்ப்பின் காரணமாக விஜயாவை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் விஜயா குறித்து சிலர் அவரிடம் தவறாக பேச, விஜாயாவை விட்டு பிரியும் வேலுபிரபாகரன், பின்னர் விஜயாவின் அண்ணன் மகளை திருமணம் செய்து கொண்டு அவளிடமிருந்தும் பிரிந்து விடுகிறார்.

இதிலிருந்து காதல், பெண் என்று மூடிவைக்கப்படும் காமம், கவர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும் என்று தனது கருத்தை சொல்கிறார். அவரது உண்மை வாழ்க்கையிலும் பொன் சுவாதி மீது காதல் கொள்ளும் வேலு பிரபாகரன் அடுத்ததாக அவரது வாழ்க்கையில் என்ன செய்தார்? பொன் சுவாதியுடனேயே தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டாரா? அவரது வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் என்ன? என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
இளைமை, முதுமை என இரு தோற்றங்களில் வரும் வேலுபிரபாகரன் கதைக்கு ஏற்ப சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சில இடங்களில் மிகைப்படுத்தி நடித்திருக்கிறார். பொன்சுவாதி இரு கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். வேலு பிரபாகரனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு கவர்ச்சியை மிகைப்படுத்தியும் நடித்திருக்கிறார். இயக்குநர் அதனை தான் விரும்புகிறார் என்பதால் அதனை குறைசொல்ல முடியாது. மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் காட்சிக்கு பக்கபலமாக சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

நாட்டில் பெண்களின் உடல் மூடிவைக்கப்படுவதால் தான் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிக்கின்றன. எனவே கலவியை சாதாரண பொருளாக பார்க்க வேண்டும். அதைப் பற்றி வெளிப்படையாக பேச வேண்டும். காமம் பரவலாக்கப்பட வேண்டும். பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை ஆண்கள் ஆட்டிப் படைக்கிறார்கள். அந்த நோக்கம் மாற வேண்டும். நாட்டின் மூத்த பொறுப்பில் இருக்கும் பெண் கூட, அவளது கணவனின் காலில் விழுந்த பின் தான் தனது பணியை செய்ய செல்கிறார்.
காமல் எளதில் கிடைத்தால் தான் நாட்டில் குற்றங்கள் குறையும் என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார். அவரது வாழ்க்கையை உண்மையும், கற்பனையும் கலந்து இயக்கியிருக்கிறார். இன்னமும் பல உண்மைகளை அவர் வெளிப்படுத்தவில்லை என்பதையும் கூறியிருக்கிறார். அவரது வாழ்க்கையில் நடந்தவற்றை மறைக்காமல் துணிச்சலுடனும், தைரியத்துடனும் படமாக இயக்கியுள்ள இயக்குநருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் அமைந்துள்ள பாடல்கள் கேட்கும் விதமாக இருந்தாலும், பின்னணி இசை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தான் கூறவேண்டும். மணிவண்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருந்தாலும் தரமானதாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மொத்தத்தில் `ஒரு இயக்குநரின் காதல் டைரி' முடிவிலி.

"அன்னக்கிளி''க்கு பிரமாதமாக இசை அமைத்த இளையராஜாவை, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் பாராட்டினார்.

"அன்னக்கிளி'' வெளியானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, இளையராஜா கூறியதாவது:-
"அன்னக்கிளி'' ரிலீஸ் ஆனபோது, மூகாம்பிகை கோவிலுக்குப் போகத் திட்டமிட்டேன். முடியவில்லை. 100-வது நாளுக்கும் போகமுடியவில்லை. 150-வது நாள், 175-வது நாள் (வெள்ளி விழா) எதற்கும் போக இயலவில்லை. `இனி அம்மா கூப்பிட்டால்தான் போகமுடியும்' என்று தீர்மானித்து, முயற்சி செய்வதை விட்டுவிட்டேன்.
ராஜ்குமார் ஷெனாய் வித்வானாக நடித்த "ஷெனாதி அப்பண்ணா'' என்ற படத்துக்கு ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைத்தார்.
இந்தப் படத்தில், ஷெனாய் வாசிக்க பிரபல ஷெனாய் இசை மேதை பிஸ்மில்லாகான் வந்திருந்தார். அவர் இதுவரை எந்த சினிமா படத்துக்கும் ஷெனாய் வாசித்ததில்லை. ஷெனாய் வித்வானைப்பற்றிய கதை என்பதால், அவர் ஒப்புக்கொண்டிருக்கலாம்.
அந்தப் படத்திற்கு நான் ஜி.கே.வி.யுடன் பணியாற்றியபோது, என்னை பிஸ்மில்லாகானுக்கு ஜி.கே.வி. அறிமுகப்படுத்தி வைத்தார். "என் சிஷ்யன்; இப்போது இசை அமைப்பாளராக ஆகி இருக்கிறார்'' என்றார்.
நான், பிஸ்மில்லாகானின் காலில் விழுந்து வணங்கினேன். அவர் ஆசி கூறினார்.
அந்தக் காலக்கட்டத்தில், எல்லா நேரமும் ஜெமினி ஸ்டூடியோவிலேயே கிடந்தேன். இசை ஆறாக - நதியாக ஓடி, சங்கீத சாகரத்தில் கலக்கும் அழகை ரசித்தேன்.
பிஸ்மில்லாகான் மெய்மறந்து வாசித்துக் கொண்டிருப்பார். திடீரென்று நிறுத்திவிடுவார். ஒரு துண்டை விரித்து நமாஸ் (தொழுகை) செய்வார். ஒரு நாளில் 6 முறை தொழுகை நடத்தும் ஒழுக்கத்தை அவர் கடைப்பிடித்து வந்தார். ஒருநாள்கூட, இந்த வழக்கத்தை அவர் மாற்றிக்கொண்டது இல்லை.
ஒருநாள், ராஜ்குமாரின் பாடலை பதிவு செய்ய பிரசாத் ஸ்டூடியோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சற்று நேரத்தில் ராஜ்குமார் அண்ணா வந்துவிட்டார். பாடலை கையில் வாங்கிக்கொண்டார்.
ஜி.கே.வி. ஆர்மோனியத்துடன் உட்கார்ந்திருக்க, அவருக்கு நேரே எதிர்த்தாற்போல் ராஜ்குமார் அமர்ந்திருந்தார். ஜி.கே.வி.யின் வலது புறம் நான். மறுபுறம் தபேலா கன்னையா, `டோலக்' பாலா.
ஜி.கே.வி. பாட ஆரம்பித்தார். ராஜ்குமார் அண்ணா, பாடலை கவனிக்கவே இல்லை. என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.
எனக்கு கூச்சமாக இருந்தது. ஜி.கே.வி.யின் பாடலுக்கு தக்கபடி நான் வாத்தியம் வாசிக்க அது இடைïறாகவும் இருந்தது.
ராஜ்குமார் "எல்லாம் கடவுள் செயல்'' என்பது போல மேலே கையைக்காட்டி, கன்னத்தில் போட்டுக்கொண்டார். பிறகு, "எல்லிநோடிதரு நின் ஹெசுரே கனோ'' (எங்கு பார்த்தாலும் உன் பெயர்தானப்பா) என்றார்.
எனக்குக் கூச்சம் அதிகமாயிற்று. "அண்ணா! பாட்டைப் பார்க்கலாம் அண்ணா!'' என்றேன்.
அப்போது ராஜ்குமாரைப் பார்த்து ஜி.கே.வி, "ஆமா, ஆமா முத்துராஜ்! பேரு பெரிய பேருதான்'' என்றார்.
பிறகு ஒரு வழியாக, ராஜ்குமார் பாடுவதற்குத் தயாரானார்.
அவர் பாடலை பதிவு செய்தோம்.
"அன்னக்கிளி'' மிகப்பிரபலமான போதிலும், நான் இசை அமைப்பாளர்கள் இடையே பத்தோடு பதினொன்றாக இருப்பேன் என்றுதான் நினைத்தேன். அதற்கு மேல் நினைக்கவில்லை.
"இரண்டாவது படம் வந்தால் மூகாம்பிகை போகலாம்'' என்று நினைத்தேன்.
இந்த சமயத்தில், மனைவி ஜீவா, இரண்டாவது பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். இந்த முறை அடிக்கடி போய் பார்த்துக்கொண்டேன். பெண் குழந்தை பிறந்தது.
இந்த நேரம், "பாலூட்டி வளர்த்த கிளி'' என்ற படத்துக்கு இசை அமைக்க, எனக்கு டைரக்டர் மாதவனிடம் இருந்து அழைப்பு வந்தது. "பெண் குழந்தை பிறந்த ராசி'' என்று அம்மா கூறினார்கள்.
அருண்பிரசாத் மூவிஸ் பேனரில் இப்படம் தயாராகியது. பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதினார். கதாநாயகி ஸ்ரீபிரியா பாடுவதுபோல் "கொலை கொலையா முந்திரிக்கா'' என்ற பாடலை எழுதிக் கொடுத்தார்.
"அண்ணே! எனக்காக நீங்கள் எழுதும் முதல் பாட்டு இது!'' என்று நினைவூட்டினேன்.
"அதனால்தான், இந்தப் பாடலின் நடுவே, `வா, ராஜா வா' என்று வருமாறு எழுதியிருக்கிறேன்'' என்றார், கவிஞர்.
"உங்கள் ஆசி அண்ணே'' என்று மகிழ்ச்சியோடு கூறினேன்.
பி.மாதவன் தயாரித்த இந்தப் படத்தை, தேவராஜ் - மோகன் இயக்கினர். விஜயகுமார் - ஸ்ரீபிரியா நடித்தனர். வசனம்: கோமல் சாமிநாதன்.
20-8-76 அன்று வெளிவந்த "பாலூட்டி வளர்த்த கிளி'' சரியாக ஓடவில்லை. "கிளியின் அருமையான இசை'' என்றெல்லாம் மாதவன் சார் விளம்பரம் செய்து பார்த்தார், பலன் இல்லை.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் 2.0 படத்தை 15 மொழிகளில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அது குறித்த செய்தியை பார்ப்போம்...
ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘2.0’. ஷங்கர் இயக்கி இருக்கும் இதில், அக்ஷய் குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் இதன் கிராபிக்ஸ் மற்றும் நவீன தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. இதில் எராளமான ஹாலிவுட் நிபுணர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
ரூ. 400 கோடி செலவில் தயாராகி வரும் இதை அடுத்து ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகள் மிக பிரமாண்டமாக உருவாக்கப்படுகிறது. ‘பாகுபலி’, படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இது போல் பல்வேறு நாடுகளில் சாதனை படைத்த ‘தங்கல்’ படம் தற்போது சீனாவிலும் வரவேற்பை பெற்று இருக்கிறது.
‘2.0’ படமும் மிகப்பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இதை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளனர். தமிழ், இந்தியில் உருவாகி வரும் ‘2.0’ படத்தை மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளிலும், உலகில் அதிகமாக பேசப்படும் சீன மொழி உள்பட 15 மொழிகளில் 100க்கும் அதிகமாக நாடுகளில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றும் சொல்லப்படுகிறது.
ஹாலிவுட் படத்துக்கு இணையான முதல் இந்திய படம் இது என்று சொல்லும் வகையில் ‘2.0’ தயாராகி வருகிறது. இந்திய திரை உலகம் இதுவரை கண்டிராத விதத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

வயதான நாயகிகளை யாரும் கண்டு கொள்வதே இல்லை என ஹேமமாலினி ஆதங்கப்பட்டிருக்கிறார். இது குறித்து செய்தியை விரிவாக பார்ப்போம்...
இந்தி பட உலகின் கனவுக்கன்னியாக இருந்த ஹேமமாலினிக்கு வயது 68. தற்போது அவர் அரசியலில் இருக்கிறார். அம்மா, பாட்டி வேடங்களில் நடித்து வருகிறார். என்றாலும், முக்கிய வேடங்களில் நடிக்கவில்லை. இது பற்றி கூறிய ஹேமமாலினி....
“இப்போதும் என்னைப் போன்ற வயதுடைய நடிகைகளால் முழு படத்தையும் தோளில் தாங்க முடியும். இதை நம்ப மறுக்கிறார்கள். இன்னும் சொல்லப்படாத கதைகள் இருக்கின்றன. தற்போது என் வயது நடிகைகளை மையமாக வைத்து யாரும் படம் எடுக்க விரும்புவதில்லை.
மாதுரி தீட்சத்,ஜுஹி சால்வா, பிரீத்திஜிந்தா ஆகியோரை ஏன் ஹீரோயின்களாக பார்க்க முடிவதில்லை. இதற்கு இந்தி பட உலக இயக்குனர்கள் தான் பதில் அளிக்க வேண்டும். ஆண்களுக்கு வயதானாலும் கூட அவர்கள் விரும்பும் வரை ஹீரோக்களாகவே நடிக்கிறார்கள். ஆனால் நடிகைகளுக்கு இளமையாக இருக்கும் வரை தான் மவுசா?” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.

இந்தி நடிகர் ஷாருக்கான் விமான விபத்தில் இறந்து விட்டதாக ஐரோப்பிய டி.வி. ஒன்று முக்கிய செய்தியை வெளியிட்டது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
இந்தி நடிகர் ஷாருக்கான் விமான விபத்தில் இறந்து விட்டதாக ஐரோப்பிய டி.வி. ஒன்று முக்கிய செய்தியை வெளியிட்டது. அதில், ஜெட் விமானத்தில் தன்னுடைய உதவியாளர்களுடன் பாரீசுக்கு, ஷாருக்கான் சென்று கொண்டிருந்ததாகவும், மோசமான தட்பவெப்பநிலையால் அந்த விமானம் வெடித்து சிதறியதில் அவர் உள்பட 7 பேர் இறந்து விட்டதாகவும் தெரிவித்து இருந்தது.
ஆனால் தான் நலமுடன் மும்பையில் இருப்பதாக டுவிட்டரில் ஷாருக்கான் தன்னுடைய புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டு இருந்தார். அதில் அவர் மேலும் கூறுகையில், விமான விபத்து புரளி மற்றும் சினிமா படப்பிடிப்பு அரங்கம் இடிந்து விழுந்த சம்பவம் ஆகியவற்றால் இந்த வாரம் எனக்கு மறக்க முடியாத வாரமாகி விட்டது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்துக்காக போடப்பட்ட அரங்கம் திடீரென இடிந்து விழுந்ததில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட பல படங்களை எடுத்த இயக்குனர் வேலு பிரபாகரன், நடிகை ஷெர்லி தாஸ் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது.
சென்னை:
நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கிய ஒரு இயக்குனரின் காதல் டைரி திரைப்படம் நேற்று வெளியானது
இந்நிலையில், இயக்குனர் வேலு பிரபாகரன், நடிகை ஷெர்லி தாஸ் திருமணம் சென்னையில் இன்று காலை 10.25 மணியளவில் நடைபெற்றது.
சென்னையில் உள்ள லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
மணமகளும், நடிகையுமான ஷெர்லி தாஸ் வேலு பிரபாகரன் இயக்கிய வேலு பிரபாகரனின் காதல் கதை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.