search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரியாஸ் கான்"

    ஸ்டார் குஞ்சுமோன் இயக்கத்தில் வி.ஆர்.விநாயக் - மீரா நாயர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `அவதார வேட்டை' படத்தின் விமர்சனம். #AvatharaVettai #AvatharaVettaiReview #VRVinayak
    தமிழகத்தில் குழந்தைகள் கடத்தப்பட்டு உடல் உறுப்புகள் திருடப்படுகிறது. இதனை கண்டுபிடிக்க காவல்துறை சார்பில் சிறப்பு குழு ஒன்று உருவாக்கப்படுகிறது.

    இதுஒருபுறம் இருக்க, நாயகன் வி.ஆர்.விநாயக் ராதாரவியை ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்து தப்பிக்கிறார். பின்னர் வேறு ஊருக்கும் செல்லும் விநாயக் அங்கு சோனாவிடம் நற்பெயர் பெற்று அவரிடம் வேலைக்கு சேர்கிறார். விநாயக்குக்கும், அதே ஊரில் போலீசாக இருக்கும் நாயகி மீரா நாயரை பார்க்கும் விநாயக்குக்கு அவர் மீது காதல் வருகிறது. மீரா நாயர் மூலமாக ராதாரவி தன்னை ஏமாற்றிய விநாயக்கை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். இதற்கிடையே சோனாவையும் ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கிறார் விநாயக்.



    கடைசியில், மீரா நாயர் விநாயக்கை பிடித்தாரா? விநாயக் யார்? ராதாரவி, சோனாவை ஏமாற்றி ஏன் பணம் பறித்தார்? குழந்தை கடத்தலை போலீசார் கண்டுபிடித்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விநாயக், மீரா நாயர், ராதாரவி, ரியாஸ் கான், சோனா, பவர் ஸ்டார் சீனிவாசன், சம்பத், மகாநதி சங்கர் என படத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் அவர்களது வேலையை ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார்கள்.



    உடல் உறுப்புகள் கடத்தலை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்டார் குஞ்சுமோன். படத்திற்காக இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம். படத்தில் காட்சிகள் வலுவானதாக அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.

    மைக்கேலின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். ஏ.காசி விஸ்வாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஓரளவுக்கு திருப்திகரமாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `அவதார வேட்டை' கோட்டைவிட்டது. #AvatharaVettai #AvatharaVettaiReview #VRVinayak #RadhaRavi #MeeraNayar #Sona

    ரஞ்சன் இயக்கத்தில் உருவாகி வரும் `மை டியர் லிசா' படத்தின் படப்பிடிப்பின் சண்டைக்காட்சியில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஜய் வசந்த்தின் கால் முறிந்தது. #MyDearLisa #VijayVasanth
    விஜய் வசந்த் - லீசா நடிப்பில் உருவாகி வரும் படம் `மை டியர் லிசா'. ரஞ்சன் கிருஷ்ண தேவன் இயக்கத்தில் த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ரியாஸ் கான், சுவாமிநாதன், மயில்சாமி, பர்னிகா சந்தோக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

    இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், சண்டைக் காட்சியின் போது நடிகர் விஜய் வசந்த்தின் கால் முறிந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    சண்டைக் காட்சியில், விஜய் வசந்த் ரவுடிகளுடன் மோதும் ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக விஜய் வசந்த் கால் தவறி பள்ளத்தில் சிக்கியதால் அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் முறிந்தது. உடனடியாக ஊட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர், சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். 



    சென்னையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் 3 வாரம் வரை சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.  படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டு ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. #MyDearLisa #VijayVasanth

    ×