search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்‌ஷய் குமார்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மோஹன்லால் மற்றும் பிரபாஸ், சிவன் கதாப்பாத்திரத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளனர்.
    • முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது

    முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்படுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. மோஹன்லால் மற்றும் பிரபாஸ், சிவன் கதாப்பாத்திரத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளனர்.

    இந்நிலையில் இந்தி திரையுலகில் முக்கியமான நடிகர்களுள் ஒருவர் அக்ஷய் குமார். அவர் இந்த படத்தில் நடிக்கவுள்ளார். இதுவே அவர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படமாகும். படப்பிடிப்பு பணிகள் இந்த மாதம் ஆரம்பிக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று  அக்ஷய் குமார் கண்ணப்பாவின் இயக்குனர் மற்றும் விஷ்ணு மஞ்சு சந்தித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படே மியான் சோட் மியான் படம் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடி வருகிறது.
    • மேலும் இப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையை தொடங்கி உள்ளது


    பாலிவுட் முன்னணி நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் இணைந்து நடித்த இந்தி ஆக்ஷன் படம் 'படே மியான் சோட் மியான்'.இப்படத்தில் கதாநாயகிகளாக சோனாக்ஷி சின்ஹா, மனுஷி சில்லர் ஆகியோர் நடித்தனர்.இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் இந்த படத்தை இயக்கினார்.

    படே மியான் சோட் மியான்" படம் மும்பை, லண்டன், அபுதாபி, ஸ்காட்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மனதை கவரும் இடங்களில் படமாக்கப்பட்டது.




    இப்படத்தை வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், அலிஅப்பாஸ் ஜாபர் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். இந்தபடம் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 'ரிலீஸ்' செய்யப்பட்டது.

    படே மியான் சோட் மியான் படம் வெளிட்ட தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடி வருகிறது. ரசிகர்கள் ஆர்வமுடன் படத்தை பார்த்து வருகின்றனர்.




    மேலும் இப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையை தொடங்கி உள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் இந்தியா முழுவதும் ரூ.15.62 கோடி வசூல் சாதனை பெற்றுள்ளது. இதையொட்டி படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் இணைந்து நடித்த இந்தி ஆக்‌ஷன் படம் 'படே மியான் சோட் மியான்'
    • படே மியான் சோட் மியான்' படம் ரம்ஜான் அன்று வெளியிடப்படும் என்று நாங்கள் ஏற்கனவே உறுதியளித்தோம்.

    பாலிவுட் முன்னணி நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் இணைந்து நடித்த இந்தி ஆக்ஷன் படம் 'படே மியான் சோட் மியான்'

    .இப்படத்தில் கதாநாயகிகளாக சோனாக்ஷி சின்ஹா, மனுஷி சில்லர் ஆகியோர் நடித்துள்ளனர்,இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தை வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், அலிஅப்பாஸ் ஜாபர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தபடம் தற்போது வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது




    இந்நிலையில் அபுதாபியில் இருக்கும் அக்ஷய் மற்றும் டைகர் இருவரும் இந்த படம் வெளியீடு குறித்து சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    படே மியான் சோட் மியான்' படம் ரம்ஜான் அன்று வெளியிடப்படும் என்று நாங்கள் ஏற்கனவே உறுதியளித்தோம். நாங்கள் எங்கள் வாக்குறுதியை காப்பாற்றுவோம்.

    வருகிற 10 - ந்தேதி 'ரம்ஜான்' என ஐக்கிய அரபு எமிரேட் அறிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் ஏப்ரல் 11-ந் தேதி கொண்டாடப்படுகிறது.



    எனவே வருகிற 11- ந் தேதி'படே மியான் சோட் மியான்' படம் வெளியாகும். அன்றைய தினத்தில் திரையரங்குகளில் உங்களை சந்திப்போம் என தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் இந்திய நாட்டின் குடியரசு தினத்தை தங்கள் பாணியில் உற்சாகமாக கொண்டாடினர்.
    • நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.

    நாட்டின் 75-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜோர்டான் நாட்டில் பிரபல பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷெராப் குடியசு தின விழாவை உற்சாகமாக கொண்டாடினார். 'படே மியான் சோட்மியான்' படத்தின் படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டில் தற்போது நடந்து வருகிறது.

    இந்த படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் இந்திய நாட்டின் குடியரசு தினத்தை தங்கள் பாணியில் உற்சாகமாக கொண்டாடினர்.

    ஜோர்டான் நாட்டு கடற்கரையில் இருவரும் இன்று அதிகாலை பெரிய அளவிலான மூவர்ண கொடியை கையில் ஏந்தியவாறு உற்சாகமாக ஓடி, குடியரசு தினவிழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினர். பின்னணியில் ஒலிக்கும் வந்தே மாதரம் பாடலுடன் ஜோர்டான் கடற்கரையில் இருவரும் ஓடியவாறு எடுக்கப்பட்ட வீடியோ நாட்டின் தேச உணர்வைத் தூண்டுவதாக அமைந்தது.

    இந்த வீடியோவை 'எக்ஸ்' தள பக்கத்தில் அக்ஷய் குமார் பகிர்ந்துள்ளார். நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.


    • இயக்குனர் சுதா கொங்கரா ‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்தாண்டு ஓடிடி-யில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தின் கதையானது ஏர் டெக்கான் விமானத்தின் நிறுவனரான கே.ரா.கோபிநாத்தின் தழுவல் ஆகும். இந்தப் படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதில் மாறன் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இதையும் சுதா கொங்கரா தான் இயக்கி வருகிறார். அதேபோல் சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.


    சூரரைப்போற்று இந்தி ரீமேக் போஸ்டர்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. டைட்டில் வெளியாகும் முன்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


    • இயக்குனர் ராஜ் மேத்தா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘செல்பி’.
    • இப்படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

    தமிழில் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அக்ஷய்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவரது நடிப்பில் தயாராகி வெளியான திரைப்படம் 'செல்பி'.


    செல்பி

    மலையாளத்தில் பிருதிவிராஜ் நடித்து வெற்றிபெற்ற 'டிரைவிங் லைசென்ஸ்' படத்தின் இந்தி ரீமேக் ஆக உருவான இப்படத்தை ராஜ் மேத்தா இயக்கினார். மேலும், இந்த படத்தில் இம்ரான் ஹாஷ்மி, நுஷ்ரத் பருச்சா, டயானா பென்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.


    செல்பி

    கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாள் வசூலாக ரூ.2.55 கோடியை மட்டுமே வசூலித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், 'செல்பி' திரைப்படம் வெளியாகி 14 நாட்கள் கடந்ததையடுத்து தற்போது வரை உலக அளவில் ரூ.21.85 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இந்திய அளவில் ரூ.16 கோடியை படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அக்ஷய் குமார் படங்களில் முதல் நாள் வசூலில் மிக குறைந்த வசூலை பெற்ற திரைப்படமாக 'செல்பி' உள்ளது.

    • தமிழில் ‘2.0’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்‌ஷய்குமார்.
    • அக்‌ஷய் குமாருக்கு எதிராக பலரும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.

    தமிழில் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அக்ஷய்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் வருகிற மார்ச் மாதம் அக்ஷய்குமார் சில நடிகைகளுடன் வட அமெரிக்கா சென்று கலை நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். இதனை விளம்பரப்படுத்த உலக உருண்டையின் இந்திய வரைபடத்தில் செருப்பு காலுடன் நிற்பதுபோன்று புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

     


    அதில் கேளிக்கை நிகழ்ச்சிகள் மூலம் வட அமெரிக்க ரசிகர்களை 100 சதவீதம் சந்தோஷப்படுத்த இருக்கிறோம், தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார். தற்போது இந்த புகைப்படத்துக்கு வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    "இப்படி காலில் செருப்பு போட்டுக்கொண்டு இந்திய வரைபடம் மீது நிற்பது நியாயமா? நமது நாட்டை கவுரப்படுத்துங்கள். அவமதிக்க வேண்டாம். நீங்கள் செய்த வேலைக்கு இந்தியர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று கண்டித்து உள்ளனர். இது வலைத்தளத்தில் பரப்பரப்பாகி உள்ளது.

    • இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் அக்‌ஷய் குமார், 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'சூரரைப் போற்று'. இத்திரைப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 'சூரரைப் போற்று' திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.


    சூரரைப் போற்று

    2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும் அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. தமிழில் இப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்தியிலும் இயக்கி வருகிறார். 'சூரரைப் போற்று' சூர்யாவின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.


    சுதா கொங்கரா - ஜி.வி.பிரகாஷ்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் படத்தின் பாடல்கள் ரெக்கார்ட் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இயக்குனர் சுதா கொங்கராவுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • நடிகை ரிச்சா சதாவின் பதிவு வருத்தமளிப்பதாக அக்‌ஷய் குமார் தெரிவித்திருந்தார்.
    • தற்போது அக்‌ஷய் குமாரை விமர்சித்து பிரகாஷ் ராஜ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    பாலிவுட்டில் ராம் லீலா, சாக் அண்ட் டஸ்டர், மசான் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிச்சா சதா. இவர் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்த இந்திய ராணுவ வீரரின் பதிவிற்கு "கல்வான் ஹாய் சொல்கிறது (Galwaan says hi)" என கமெண்ட் செய்திருந்தார்.


    ரிச்சா சதா

    இந்த கமெண்ட் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து ரிச்சா சதாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்ததையடுத்து  தனது பதிவிற்கு வருத்தம் தெரிவித்து ரிச்சா சதா அறிக்கை வெளியிட்டிருந்தார்.


    அக்‌ஷய் குமார்

    இதனிடையே நடிகர் அக்‌ஷய் குமார், ரிச்சா சதாவின் "கல்வான் ஹாய் சொல்கிறது (Galwaan says hi)" என்ற பதிவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து "இதைப் பார்க்கையில் வருத்தமளிக்கிறது. நமது ஆயுதப்படைகளுக்கு நன்றியின்றி இருக்கக் கூடாது. அவர்கள் இருப்பதால்தான் நாம் இன்று இருக்கிறோம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.


    பிரகாஷ் ராஜ்

    இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ், "உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை அக்‌ஷய் குமார். உங்களை விட நடிகை ரிச்சா சதா சொன்னது நம் நாட்டுக்கு பொருத்தமாக இருக்கிறது" என அக்‌ஷய் குமாரை விமர்சித்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.



    • அபிஷேக் சர்மா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராம் சேது.
    • இப்படத்தின் டிரைலரை நடிகர் அக்‌ஷய் குமார் தமிழில் பதிவிட்டுள்ளார்.

    அபிஷேக் சர்மா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராம் சேது. இதில் அக்‌ஷய் குமாருடன் இணைந்து ஜாக்குலின் பெர்னாண்டஸ், நுஷ்ரத் பருச்சா, நாசர், பிரவேஷ் ராணா, ஜெனிபர் பிசினாடோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ, அபுண்டன்டியா என்டர்டெயின்மென்ட் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் புராண இதிகாசமான ராமாயணத்தில் ராமரால் கட்டப்பட்ட பாலத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

     

    ராம் சேது - அக்‌ஷய் குமார்

    ராம் சேது - அக்‌ஷய் குமார்

    இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், இந்தி மொழிகளில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ராம் சேது படம் வருகிற அக்டோபர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் அக்‌ஷய் குமார் தமிழில் பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அதில், உங்களுக்கு ராம் சேது ஓட முதல் கிளிம்ப்ஸ் பிடிச்சுருக்கா.? அப்போ கண்டிப்பா டிரைலர் இன்னும் பிடிக்கும் இந்த தீபாவளிய ராம் சேது ஓட பிரமாண்ட உலகத்துல குடும்பத்தோட கொண்டாடுங்க என்று பதிவிட்டுள்ளார்.

    • இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் அக்‌ஷய் குமார், 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'சூரரைப் போற்று'. இத்திரைப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 'சூரரைப் போற்று' திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.


    சூர்யா - அக்‌ஷய்குமார்

    2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும் அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. தமிழில் இப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்தியிலும் இயக்கி வருகிறார். 'சூரரைப் போற்று' சூர்யாவின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் உள்ள மூன்று பாடல்களின் ரெக்கார்டிங் முடிவடைந்துள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    • சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இந்த படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடல் ரசிகர்களை முணுமுணுக்க வைத்தது.

    தெலுங்கில் பிரபல இயக்குனராக வலம் வரும் சுகுமார் இயக்கத்தில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படம் 'புஷ்பா. அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்த இந்தப் படத்தில் நடிகர் ஃபஹத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும், படத்தின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட் அடித்தன.


    குறிப்பாக சமந்தாவின் முதல் கவர்ச்சி பாடலான 'ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா' பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. தியேட்டரில் இவர் ஆடிய நடன அசைவுகள் ஒட்டுமொத்த திரையரங்கையும் கட்டிப்போட்டது. இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ, ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப் பக்கத்தில் உலக அளவில் நம்பர் 1 என்ற அந்தஸ்தை பெற்றது.


    இந்தநிலையில், காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகர் அக்‌ஷய் குமாரும், நடிகை சமந்தாவும் பங்கேற்றுள்ள புரோமோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் அக்‌ஷய் குமாரும், நடிகை சமந்தாவும் பங்கேற்றனர். இதில் பல கேள்விகளுக்கு இருவரும் வெளிப்படையான பதிலளித்துள்ள நிலையில், ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் 'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு இருவரும் மாஸ் டான்ஸ் ஒன்றை ஆடியுள்ளனர். இருவரும் நடனம் ஆடிய இந்த வீடியோ அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது. இதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.



    ×