என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வீடியோ கேம் மூலம் பெண் குழந்தைகளை குறி வைக்கும் சைபர் க்ரைம்- கோரிக்கை வைத்த அக்ஷய் குமார்
    X

    வீடியோ கேம் மூலம் பெண் குழந்தைகளை குறி வைக்கும் சைபர் க்ரைம்- கோரிக்கை வைத்த அக்ஷய் குமார்

    குற்றம் தெருக் குற்றங்களை விடப் பெரிதாகி வருகிறது சைபர் குற்றங்கள்.

    பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமார் சைபர் குற்றங்கள் குறித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சில மாதங்களுக்கு முன்பு என் வீட்டில் நடந்த ஒரு சிறிய சம்பவத்தை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

    என் மகள் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தாள். சில வீடியோ கேம்களை நீங்கள் எதிர் திசையில் யாருடனும் விளையாடலாம். நீங்கள் தெரியாத ஒருவருடன் விளையாடுகிறீர்கள்.

    நீங்கள் விளையாடும்போது, சில சமயங்களில் அங்கிருந்து ஒரு செய்தி வரும்... அப்படி என் மகளுக்கும் ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    "நீங்கள் ஆணா பெண்ணா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு என் மகள் பெண் என்று பதிலளித்தாள். பின்னர் மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில், உங்களுடைய நிர்வாணப் படங்களை எனக்கு அனுப்ப முடியுமா? என்று இருந்தது. இதனால் பயந்துபோன என் மகள், எல்லாவற்றையும் அணைத்துவிட்டு என் மனைவியிடம் சென்று நடந்தவை குறித்து கூறினார்.

    இப்படித்தான் விஷயங்கள் தொடங்குகின்றன. இதுவும் சைபர் குற்றத்தின் ஒரு பகுதி... நமது மகாராஷ்டிரா மாநிலத்தில், ஒவ்வொரு வாரமும் ஏழாம், எட்டாம், ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளில், சைபர் வகுப்பு (Cyber Period) என்று ஒரு வகுப்பு இருக்க வேண்டும். அங்கு குழந்தைகளுக்கு இது குறித்து விளக்க வேண்டும் என்று நான் முதலமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

    இந்தக் குற்றம் தெருக் குற்றங்களை விடப் பெரிதாகி வருகிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்தக் குற்றத்தைத் தடுப்பது மிகவும் முக்கியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×