என் மலர்
நீங்கள் தேடியது "Mohanraj"
- 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.
- சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (வயது 52) ஈடுபட்டு அதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகை மாவட்டம், கீழ்வேளூர், வெண்மணி, விழுந்தமாவடி, காரைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த படத்தின் முக்கியமான கார் சேசிங் காட்சிகள் விழுந்தமாவடி பகுதியில் சமீபத்தில் படமாக்கப்பட்டது.
இந்த காட்சியில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (வயது 52) ஈடுபட்டு அதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரது இறப்பு திரையுலகை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இவர் உயிரிழந்ததையடுத்து பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு இன்சூரென்ஸ் எடுத்து கொடுத்துள்ளார். இந்த இன்சூரென்ஸ் மூலம் ரூ.5.5 லட்சம் வரை
- போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தனது பணிகாலம் முடிவதற்கு 6 மாதத்திற்கு முன்பே விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 மாதங்கள் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மோகன்ராஜ் கடந்த3.1.2023-ந் தேதி பொறுப்பேற்றார். இவர் ஓய்வு பெற கூடிய காலம் 31.5.2024-ந் தேதி ஆகும்.
ஆனால் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு விருப்ப ஓய்வு பெற முடிவு செய்தார். அதன்படி கடந்த 3 மாதத்திற்கு முன்பு விருப்ப ஓய்வு பெறுவதற்கான மனுவை தமிழக டி.ஜி.பி. சங்கர்ஜிவாலுக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு விருப்ப ஓய்வு பெற அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு நேற்று மாலை 7 மணி அளவில் விருப்ப ஓய்வு பெறுவதற்கான கடிதம் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதனை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் மைக் மூலமாக தொடர்பு கொண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் தன்னுடன் சிறப்பான முறையில்பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார். கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தனது பணிகாலம் முடிவதற்கு 6 மாதத்திற்கு முன்பே விருப்ப ஓய்வு பெற் றுள்ளார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 மாதங்கள் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விருப்ப ஓய்வு பெற்றதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷசாங் சாய்க்கு கூடுதலாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- காஞ்சிரம்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்தார்.
- 'கீரிகடன் ஜோஸ்' என்ற ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பிரபல நடிகர் மோகன்ராஜ் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நீண்ட காலமாக மோகன்ராஜ் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். மேலும், அவருக்கு நீண்டகாலமாக நீரிழிவு நோயும் இருந்தது. இந்த நிலையில், திருவனந்தபுரம் காஞ்சிரம்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்தார்.
'கீரிகடன் ஜோஸ்' என்ற கடுமையான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் மோகன்ராஜ். 1989 ஆம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்திற்கு பிறகு மலையாள திரையுலகில் வில்லனாக இருந்தார். திரைப்படத்தில் 'கீரிகடன் ஜோஸ்' என்ற ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படம் அவரது வாழ்க்கையை உயர்த்தியது. மேலும் கதாபாத்திரத்தின் பெயரால் அவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடித்து வெளியான 'செங்கோல்', 'ஹலோ', 'நரசிம்மம் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றன.






