search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்கார் விருது"

    • சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை நாட்டு.. நாட்டு... பாடல் பெற்றிருந்தது.
    • இந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்ப்பது போல் அமைந்திருந்தது

    ஆஸ்கார் விருதுகள் -2024 வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ' 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் பாடல் இந்த விழாவை அலங்கரித்தது.

    பிரபல நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் இணைந்து நடனம் ஆடும் நாட்டு.. நாட்டு... பாடல் ஒளிபரப்பாகி ஆஸ்கார் விழாவை சிறப்பித்தது. ஏற்கனவே 2023- ம் ஆண்டில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை நாட்டு.. நாட்டு... பாடல் பெற்றிருந்தது.

    இதன் மூலம் இந்திய பாடலுக்கு பெருமை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஆண்டும் ஆஸ்கார் விழாவில் இந்த பாடல் காட்சிகள் திரையில் காட்டப்பட்டது இந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்ப்பது போல் அமைந்திருந்தது.

    தற்போது இது தொடர்பான 'வீடியோ 'எக்ஸ்' இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • 61 வயதாகும் ஜோடி ஃபாஸ்டர் பட தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர்
    • ஜென் இசட்டிடம் ஒரு அலட்சிய போக்கு இருந்து வருகிறது என்றார் ஜோடி

    குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு கதாநாயகியாக உருவெடுத்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர், ஹாலிவுட் நடிகை ஜோடி ஃபாஸ்டர் (Jodie Foster).

    தற்போது 61 வயதாகும் ஜோடி ஃபாஸ்டர், திரைப்பட தயாரிப்பாளராகவும் வெற்றி அடைந்தார்.

    தனது நடிப்பிற்காக இரண்டு முறை உலக புகழ் பெற்ற ஆஸ்கார் விருதுகளை வென்றவர், ஜோடி ஃபாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நீண்ட காலமாக ஹாலிவுட்டில் செயலாற்றி வரும் ஜோடி ஃபாஸ்டர், தற்போதைய ஜென் இசட் (Gen Z) எனப்படும் 90களின் பிற்பகுதியிலிருந்து 2000 முற்பகுதி வரை பிறந்த ஆண்கள் மற்றும் பெண்களுடன் பணியாற்றுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    "ஜென் இசட் இளைஞர்களுடன் பணியாற்றுவது பல நேரங்களில் பெரிய தொந்தரவாக உள்ளது. நேரம் காப்பதில் அவர்களுக்கு ஒரு அலட்சிய போக்கு இருந்து வருகிறது. போட்ட திட்டப்படி பணியாற்ற வர வேண்டிய நேரத்திற்கு வராமல் அலட்சியமாக காரணம் சொல்கின்றனர். அவர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பினால், ஏகப்பட்ட தவறுகள் இருக்கின்றன. அனுப்பும் முன்பாக சரிபார்க்கவில்லையா என கேட்டால், அதை காலவிரயம் என அலட்சியமாக பதிலளிக்கின்றனர். நாங்கள் வளர்ந்து போது எங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட முழு சுதந்திரம் அளிக்கப்படவில்லை. திரைப்படத்துறையில் கலைஞர்களாக வர விரும்பும் தற்கால இளைஞர்கள் தங்களின் சொந்த படைப்புகளையே கொண்டு வர முயற்சிக்க வேண்டும்" என ஜோடி தெரிவித்தார்.

    • தெலுங்கானா ராஜ்பவனில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோரை பாராட்டி கவுரவித்தேன்.
    • உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுவை துணை நிலை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    "நாட்டு நாட்டு" பாடலின் மூலம் ஆஸ்கார் விருது வென்று உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தெலுங்கானா ராஜ்பவனில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோரை பாராட்டி கவுரவித்தேன். இன்று அவர்கள் ஆஸ்கார் விருது வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கும், பாடலாசிரியர் சந்திரபோசுக்கும், இயக்குனர் ராஜமவுலிக்கும், நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் திரைப்பட குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.

    • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா தொடங்கியது.
    • எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் படத்தில் நடித்ததற்காக துணை நடிகர், துணை நடிகை விருது கிடைத்தது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

    சிறந்த அனிமேஷன் படம் - பினோச்சியோ

    சிறந்த துணை நடிகருக்கான விருது - கி ஹூ குவான் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)

    சிறந்த துணை நடிகை விருது - ஜேமி லீ கர்டிஸ்

    சிறந்த ஆவணப் படம் - நாவல்னி

    ×