என் மலர்
சினிமா செய்திகள்

பா.ரஞ்சித் தயாரித்த ஆவணப்படம் ஆஸ்கார் போட்டிக்கு தேர்வு
- 'தலித் சுப்பையா - வாய்ஸ் ஆஃப் தி ரிபல்ஸ்’ ஆவணப்படம் ஆஸ்கர் போட்டிகளில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளது.
- முற்போக்கு பாடகரும் எழுத்தாளருமான தலித் சுப்பையாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது.
'தலித் சுப்பையா - வாய்ஸ் ஆஃப் தி ரிபல்ஸ்' ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளது.
இந்த படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் உடைய நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
மறைந்த முற்போக்கு பாடகரும் எழுத்தாளருமான தலித் சுப்பையாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இசை வடிவில் உருவான இந்த ஆவணப்படத்தை இயக்குநர் கிரிதரன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் , "தலித் சுப்பையா - வாய்ஸ் ஆஃப் தி ரிபல்ஸ்" ஆவணப்படம், ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளதாக நீலம் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, 17 ஆவது கேரள சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழாவில் இப்படம் சிறந்த முழு நீள ஆவணப்படம் என்ற விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
Next Story






