search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவேகம்"

    • எண்ணம், செயல் இவற்றில் வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படுபவர்களாக இருக்க வேண்டும்.
    • நல்ல புத்தகங்களை வாசிக்க பழகி, அதற்கு தகுந்தார் போல் வாழ பழகி கொள்ளவேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் உள்ள யாகப்பா பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வர்த்தக மற்றும் தொழில் சபை தலைவர் மாறவர்மன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.

    அப்போது அவர் கூறுகையில்,

    மாணவர்களின் சிந்தனை திறன் வித்தியாசமாக இருக்க வேண்டும். எண்ணம், செயல் இவற்றில் வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படுபவர்களாக சமுதாயத்தில் மிளிர வேண்டும்.

    அன்றைய பொறுப்புகளை அன்றே செய்து முடித்து சுறுசுறுப்புடன் திகழ்ந்து வெற்றியாளர்களாக, யாகப்பா பள்ளி மாணவர்கள், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

    நல்ல புத்தகங்களை வாசிக்க பழகி, அதற்கு தகுந்தார் போல் வாழ பழகி கொள்ளவேண்டும் என்றார்.

    தொடர்ந்து பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், ஒவ்வொரு பாடத்திலும் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் கண்ணகி மாறவர்மன் பரிசளித்து பாரட்டினார்.

    பின்னர், பள்ளி மாணவர்கள் ஆண்டறிக்கை வாசித்தனர்.

    தொடர்ந்து, கருத்தை கவரும் நடனங்கள், கலைகளை ஊக்கப்படுத்தும் நாட்டுப்புற நடனங்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரங்க நாடகம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    விழா ஏற்பாடுகளை பள்ளி டிரஸ்டி மேரிஞானம், தாளாளர் எட்வர்ட் ஆரோக்கியராஜ் தலைமையில் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

    ×