search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரமேஷ் அரவிந்த்"

    ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியிருக்கும் குயின் படத்தின் ரீமேக்கான `பாரிஸ் பாரிஸ்' படத்தின் டீசர் நயன்தாரா படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. #ParisParis #ParisParisTeaser #KajalAggarwal
    கங்கனா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் குயின். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகியது.

    இதில் தமிழ் மற்றும் கன்னட பதிப்பை நடிகரும், இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார். தமிழில் காஜல் அகர்வால் நடித்துள்ள படத்திற்கு ‘பாரீஸ் பாரீஸ்’ என்றும், கன்னடத்தில் பருல் யாதவ் நடித்துள்ள படத்திற்கு பட்டர்பிளை என்றும் தலைப்பு வைத்துள்ளனர்.

    காஜல் அகர்வால் இந்த படத்தில் விருதுநகரைச் சேர்ந்த பெண்ணாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகிய படத்தின் டீசரில் ஒரு காட்சியில் காஜல் அகர்வாலை அவரது தோழி பாலியல் ரீதியாக சீண்டுவது போல இடம்பெற்றிருக்கும். இந்த காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், டீசர் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.



    நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா படத்தின் டீசரை 60 லட்சம் பேர் பார்த்துள்ள நிலையில், காஜல் அகர்வாலின் இந்த டீசரை 72 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. #ParisParis #ParisParisTeaser #KajalAggarwal #RameshAravind 

    பாரிஸ் பாரிஸ் டீசர்:

    ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் குயின் படத்தின் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் என்ற தமிழ் படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமையும் என்று படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். #KajalAggarwal #ParisParis
    இந்தியில் பெரிய வெற்றி பெற்ற குயின் படத்தை பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் தமிழில் காஜல் அகர்வாலை கதா நாயகியாக்கி இயக்கி வருகிறார் ரமேஷ் அரவிந்த்.

    அவரிடம் படம் எப்படி வந்துள்ளது என்று கேட்டதற்கு ‘தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பாருல் யாதவ். இப்படி மொழிக்கு ஒவ்வொரு ஹீரோயின்கள். இவங்களைத் தவிர முக்கியமான கேரக்டரில் எமி ஜாக்ச‌ன் நடிக்கிறார்.

    மலையாளத்துல நீலகண்டனும், தெலுங்கில் பிரசாத்தும் டைரக்‌‌ஷன் பண்றாங்க. என்னைப் பொறுத்தவரை, இந்தப் படம் காஜலுக்குத் திருப்புமுனையைக் கொடுக்கிற படமா இருக்கும்.



    ‘பரமேஸ்வரி’ங்கிற கேரக்டர்ல அழகாக நடிச்சிருக்காங்க. எமி ஜாக்ச‌ன் தமிழ் வசனங்களை மனப்பாடம் பண்ணி அவ்வளவு அழகா பேசுறாங்க. அவங்க பேசுறதைப் பார்த்துட்டு, நானே ஆச்சர்யப்பட்டுப் போனேன்’ என்று கூறி இருக்கிறார். #ParisParis #KajalAggarwal

    ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பாரிஸ் பாரிஸ்’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #ParisParis
    குயீன் படத்தை மீடியன்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மனு குமரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். 

    தமிழில் "பாரிஸ் பாரிஸ்", தெலுங்கில் "தட்ஸ் மஹாலக்ஷ்மி", கன்னடத்தில் "பட்டர்ப்ளை", மலையாளத்தில் "ஜாம் ஜாம்" என்றும் படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல்யாதவ் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

    தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தெலுங்கில் பிரஷாந்த் வர்மா இயக்குகிறார். மலையாளத்தில் நீலகண்டா இயக்குகிறார். ஐரோப்பாவில் நடைபெற்ற இப்படங்களின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது.

    தயாரிப்பாளர் மனுகுமரன், "படத்தின் தரத்தை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. அனைத்து நடிகர்களும் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களின் தன்மையை அறிந்து சிறப்பாக நடித்துள்ளனர். நடிகர்களின் வித்தியாசமான பரிணாமங்கள் கண்டிப்பாக ரசிகர்களை கவரும்" என்றார். 



    இப்படத்தின் துணை தயாரிப்பாளரும் கன்னடத்தில் உருவாகும் "பட்டர்ப்ளை" படத்தின் நாயகியுமான பருல்யாதவ் கூறுகையில், "இவ்வளவு பெரிய மற்றும் அரிய வகையான ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் திரைப்படங்களை தயாரிக்கும் திட்டத்தை வெற்றிக்கரமாக முடித்திருப்பது மிகவும் திருப்தியளிப்பதாகவுள்ளது" என்றார். 

    அமித் திரிவேதி இந்த நான்கு படங்களுக்கும் இசையமைத்துள்ளார். குயீன் படத்திற்கும் இசையமைத்தவர் அமீத் திரிவேதி என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ்கோ - சீசர் மற்றும் கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்து கொடுத்துள்ளனர்.

    அக்டோபர் மாதம் "பாரிஸ் பாரிஸ்", "தட்ஸ் மஹாலக்ஷ்மி", "பட்டர்ப்ளை", "ஜாம் ஜாம்" படங்கள் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
    ×